The Girl With The Dragon Tattoo Tamil Review
படத்தின் டைட்டில் பாடல் செம அதிரடி.. Daniel Craig நடித்ததால் என்னமோ டைட்டில் ஜேம்ஸ் பாண்ட் பட டைட்டிலை ஞாபகப்படுத்தியது.
படத்தின் கதையை பார்க்கலாம்.. படத்தின் ஹீரோ Mikael ஒரு பத்திரிகை ஓனர்.
ஒரு ஆர்வத்தில் பெரிய கம்பெனியை ஆராய்ச்சி செய்து அவர்கள் சட்ட விரோதமாக செய்த விஷயங்களை அம்பலப்படுத்துகிறார். ஆனால் கோர்ட் போதிய ஆதாரம் இல்லை என கேஸை ரத்து செய்து Mikael-க்கு போட்ட அபராதத்தில் அவரது சேமிப்பு மொத்தமும் காலி.
இந்நிலையில் இன்னொரு பெரிய பணக்காரர் Henrik என்பவர் தன்னுடைய தீவுக்கு வருமாறு அழைப்பு விடுவிக்கிறார்.
அந்த தீவு மொத்தத்தையும் Hendrik மற்றும் அவரது குடும்பத்தினர் ஆக்கிரமித்து உள்ளனர்.
Henrik தனது பேத்தி ஒருத்தி 40 வருடங்களுக்கு முன்னாள் காணாமல் போய்விட்டார் என்றும் தனது குடும்பத்தை சேர்ந்த யாரோ ஒருவர் தான் அவளை கொன்று விட்டார்கள் என்று கூறுகிறார். அவரும் 40 வருடங்களாக தேடுகிறார் என்றும் ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை என்கிறார்.
சில பல காரணங்கள் மற்றும் பணத்தாசை காட்டி ஒரு வழியாக சம்மதிக்க வைத்து விடுகிறார். Henrik , பத்தி சுயசரிதை எழுத போகிறேன் என்று சொல்லி அந்த தீவில் குடி வருகிறார் Mikael.
Mikael - க்கு இந்த கேஸில் ரிசர்ச் அனலிஸ்ட் தேவைப்படுகிறது. Henrik உதவியுடன் Lisbeth ( Rooney Mara) எனும் Computer Hacker + Analyst -ஐ வேலைக்கு வைக்கிறார்.
20+ வயதில் Lisbeth , சிறுவயதில் பல சட்டவிரோத சம்பவங்களில் ஈடுபட்டு அரசின் கட்டுப்பாட்டில் உள்ளார். Mikael லிடம் வேலைக்கு சேரும் முன் அவரது கதைக்கு தனி டிராக் உள்ளது .
இருவரும் சேர்ந்த பின்பு காணாமல் போன பெண்ணை துப்பறியும் வேலை வேகம் எடுக்கிறது.
40 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பதால் எப்படி கண்டுபிடிப்பார்கள் எனும் ஆர்வம் உடனே நம்மை தொற்றிக் கொள்கிறது.
திரைக்கதையும் அதற்கு ஏற்றவாறு பக்காவாக உள்ளது. யார் தான் கொலைகாரன் என்பதை யூகிக்கவே முடியாது. இயக்குனர் அவரது favourite genre touch பண்ணி கடைசியில் செம ட்விஸ்ட் உடன் முடித்துள்ளார்.
மெயின் கேரக்டர்கள் இரண்டு பேரும் செம நடிப்பு. அதிலும் Rooney Mara கலக்கி இருக்கிறார்.
கண்டிப்பாக பாருங்கள்..
குடும்பத்துடன் பார்க்க முடியாது..
IMDb Rating: 7.8/ 10
My Rating : 4.5/5
Director: David Fincher
Cast: Daniel Craig, Geraldine James, Joely Richardson, Yorick van Wageningen, Robin Wright, Steven Berkoff, Stellan Skarsgard, Christopher Plummer, Rooney Mara, Goran Visnjic
Screenplay: Steven Zaillian, based on the novel by Stieg Larsson
Cinematography: Jeff Cronenweth
Music: Trent Reznor, Atticus Ross
கருத்துகள்
கருத்துரையிடுக