முதலில் இது பெரியவர்களுக்கான அனிமேஷன் சீரிஸ். உங்களுக்கு அனிமேஷன் படங்கள் பார்ப்பது பிடிக்கும் என்றால் கண்டிப்பாக பார்க்கலாம். அடல்ட் கன்டென்டட் ரொம்பவே அதிகம். அதுவும் அனிமேஷன் என்பதால் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
மொத்தம் 2 சீசன்கள் உள்ளது. முதல் சீசனில் 18 எபிசோடுகளும், இரண்டாவது சீசனில் 8 எபிசோடுகளும் உள்ளன. அனைத்து எபிசோடுகளும் சராசரியாக 15 நிமிடங்கள் ஓடுகிறது.
சீரிஸ் ஆக இருந்தாலும் ஒவ்வொரு எபிசோடும் தனித்தனியான Short films. அதாவது மொத்தமா 24 குறும்படங்கள் எடுத்து அதை 2 சீசனாக வெளியிட்டு உள்ளனர்.
பலவகையான Genres - களில் குறும்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளன.
Sci Fi - ல் ஆரம்பிக்கும் தொடர் ஹாரர், ஆக்ஷன், காமெடி, Mystery, History, ஏலியன்ஸ், ஓநாய் மனிதன் என எல்லாவற்றையும் தொட்டு செல்கிறது.
இந்த தொடரில் உள்ள குறும்படங்களை பற்றி நிறைய பேசலாம் ஆனால் மற்றவர்களுக்கு சஸ்பென்ஸ் போய்விடும். அதனால் பிடித்த இரண்டு எபிசோட்களை பற்றி சொல்கிறேன்.
முதலில் மிகவும் பிடித்தது சைனாவின் Folklore சம்பந்தப்பட்ட கதை. மிருகம் பெண்ணாக மாறும் கான்செப்டில் ஆரம்பித்து அறிவியல் பூர்வமாக முடித்த விதம் அருமை .
இன்னொரு எபிசோட் ஒரு மிகப்பெரிய ஓவியரை பற்றியது. கடைசியில் வரும் ட்விஸ்ட் செம சூப்பர்.
கடைசியாக ரெட் ஆர்மி பனிமலையில் பழைய காலத்து கருப்பு மந்திரத்தின் காரணமாக உருவாக்கப்பட்ட கொடூரமான மிருகங்களை எதிர்த்து போராடுவது பற்றியது.
இது மாதிரியான வித்தியாசமான கதைகள் உள்ளது. சில படங்கள் அனிமேஷனா இல்லை உண்மையில் படமாக்கப்பட்டதா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு பக்காவான அனிமேஷன்.
ஒரு சில படங்கள் கொஞ்சம் மெதுவாக போரடிக்கிறது. உதாரணமாக தயிர்க்கு உயிர் வந்து உலகை அடிமையாக்குவது, கடைசியில் ஒரு ராட்சத மனிதனின் இறந்து போன உடலை வைத்து வரும் கதை...
மொத்தத்தில் பக்காவான mini series .. பார்க்க ரொம்பவே ஆர்வமாக உள்ளது. அதுவும் அடுத்து எபிசோட் என்ன மாதிரியான Genre -ல் வரும் என தெரியாமல் பார்ப்பது ரொம்பவே சூப்பர். எபிசோட் Summary பார்க்காமல் பாருங்கள் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
Netflix - ன் வித்தியாசமான முயற்சி... அருமை... கண்டிப்பாக பார்க்கலாம்.
Se7en, Fight Club போன்ற அருமையான படங்களை இயக்கிய David Fincher இதில் ஒரு Executive Producer.
Only 18 +
IMDb Rating : 8.5/ 10
My Rating: 4.5/5
Available in Netflix
கருத்துகள்
கருத்துரையிடுக