முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Logan Lucky - லோகன் லக்கி (2017)

இது ஒரு நகைச்சுவை கலந்த Money Heist பற்றிய திரைப்படம். 

Jimmy Logan (Channing Tatum) - ஒரு குகை பாதை உருவாக்கும் கட்டுமானத்தில் பணியாற்றி வருபவன். இவனுடைய மகள் முன்னாள் மனைவியிடம் வளர்கிறாள். 

Logan Lucky movie review in tamil, knives out, synopsis film Logan Lucky, heist movies, best movies on Amazon Prime, Logan Lucky review reddit


ஒரு நாள் வேலை முடித்து விட்டு வரும் Jimmy - ஐ அழைக்கும் மேலாளர் அவனுடைய காலில் உள்ள சிறிய குறைபாட்டை காரணமாக காட்டி வேலையை விட்டு தூக்கி விடுகிறார். 

Jimmy -ன் சகோதரன் Clyde Logan (Adam Driver) நடத்தும் பாருக்கு செல்கிறான். முன்னாள் ராணுவ வீரரான Clyde போரில் ஒரு கை முழங்கை வரைக்கும் சேதமடைந்தால் போலியாக கை பொருத்தி உள்ளான். இருவரும் தங்கள் குடும்பத்தின் சாபக்கேடு பற்றி பேசுகிறார்கள். 

வீட்டிற்கு வரும் Jimmy தான் வேலை பார்த்த குகைக்கு அருகில் உள்ள கார் ரேஸ் நடக்கும் மைதானத்தில் கொள்ளையடிக்க திட்டம் இடுகிறார். அங்கு கவுண்டர்களில் வாங்கும் பணத்தை ட்யூப்களின் வழியாக பத்திரமான பெட்டகத்திற்கு அனுப்புகிறார்கள். அந்த பெட்டகத்தை உடைத்து திருட திட்டமிடுகிறான். 

முதலில் தன் சகோதரன் Clyde - ஐ கூட்டாளியாக சேர்க்கிறான். தன் உறவுக்கார பெண்ணான Mellie Logan (Riley Keough) -ம் தனது குழுவில் சேர்க்கிறார். 

இருவரும் இணைந்து பெட்டகம் திறப்பது மற்றும் வெடிவைத்து இடிப்பது போன்றவற்றில் நிபுணரான Joe Bang (நம்ம ஜேம்ஸ் பாண்ட் நடிகரான Daniel Craig சிறப்பு கதாபாத்திரம்) சிறையில் சந்தித்து உதவி கேட்கிறார்கள். Joe - அவனுடைய சகோதரர்கள் இருவரை சந்தித்து உதவி கேட்குமாறு சொல்கிறான். 

Joe - வின் சகோதரர்கள் செம காமெடி பண்ணுகிறார்கள்.. அவர்களையும் பேசி சரி கட்டி ஒரு வழியாக திட்டத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்கள். 

இதன் பிறகு தான் கதை பரபரப்பாக நகர்கிறது. Joe -வை எப்படி திருடு நடக்கும் நேரம் வெளியே கொண்டு வந்தார்கள்..‌ ட்யூப் வழியாக செல்லும் பணத்தை எவ்வாறு கொள்ளை அடித்தனர்  என்பது Jimmy - ன் மாஸ்டர் பிளான்... கடைசியில் ஒரு ட்விஸ்ட் உடன் முடிகிறது.‌

ஆனால் இவ்வளவு சீரியசான படத்தை காமெடியாக நகர்த்தி செல்வது இயக்குனரின் திறமை. 

எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக பொருந்தி உள்ளனர். 

தமிழ் டப்பிங்ல் அமேசான் ப்ரைமில் உள்ளது. டப்பிங் குரல்கள் மற்றும் தமிழ் வசனங்கள் செம காமெடியாக உள்ளது.  

குறிப்பாக ஜெயிலில் நடைபெறும் போராட்டம் மற்றும் அதை வார்டன் கையாளும் விதம் கல கலப்பாக செல்கிறது. 

சில வசனங்களை தவிர்த்து விட்டு பார்த்தால் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய சிறப்பான பொழுது போக்கு திரைப்படம். 

கண்டிப்பாக பார்க்க வேண்டிய காமெடி திரைப்படம். 

IMDb Rating : 7.0/10 

Available in Amazon Prime - Watch Now 

Director: Steven Soderbergh

Cast: Channing Tatum, Hilary Swank, Seth MacFarlane, Katie Holmes, Katherine Waterston, Sebastian Stan, Riley Keough, Daniel Craig, Adam Driver, David Denham

Screenplay: Rebecca Blunt

Cinematography: Steven Soderbergh

Music: David Holmes


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

X - 2022

Horror, Porn  கலந்து இது போதாது என Slasher வகையும் சேர்த்து வந்துள்ள படம் இது.   IMDb 7.3 Tamil Dub ❌ OTT ❌ , 18+  Porn Film எடுக்க ஒரு பண்ணை வீட்டுக்கு போகும் குழுவிற்கு நேரம் கொடூரங்கள் தான் படம்.  Slasher படத்துக்கே எழுதி வைச்ச டெம்ப்ளேட்.  படம் நடப்பது 1979 ஆம் வருடத்தில்.. 3 ஜோடிகள் (Producer, Director, Actors)  அப்ப பிரபலமாகி வரும் வீடியோ கேசட் மார்க்கெட்டை மையமாக வைத்து மேட்டர் படம் எடுதது கேசட்டா‌ ரிலீஸ் பண்ணா நல்ல காசு பாக்கலாம் என ப்ளான் பண்ணுகிறார்கள்.  படத்தின் டைரக்டர Farmers Daughter's என ஒரு அருமையான மேட்டர் பட ஸ்கிரிப்டை ரெடி பண்ணுகிறார் 😜 .இதை ஒரு பண்ணை வீட்டில் வைத்து எடுத்தால் ரசிகர்கள் படத்துடன் ஒன்றி. விடுவார்கள் என ஐடியா பண்ணி இந்த குரூப் ஊருக்கு ஒதுக்கு புறமான ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு சூட்டிங் போகிறார்கள்.  அந்த வீட்டின் ஓனர்ஸ் ஒரு வயதான தம்பதியர். ஓனர் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பதால் பிட்டு படம் எடுக்க வந்தோம் என சொல்லாமல் கமுக்கமாக படத்தே எடுக்கிறார்கள்.  ஆனா ஓனரம்மா இவர்கள் பிட்டு படம் எடுப்பதை பார்த்து விடுகிறது. அன்னிக்கு நைட் ஒவ்வொருத்தவங்களா கொடூர

The Old Man - Season 1 (2022)

The Old Man Tamil Review - Season 1 இது ஒரு Action, Thriller, Drama Series.  1 Season, 7 Episodes (1 Episode Yet to release) Available @hulu இதுல ஹீரோ 70+ ல இருக்குற ஒரு வயசான தாத்தா (Jeff Bridges). திடிரென ஒரு நாள் ஒருத்தன் அவர கொல்ல வர்றான். இவரு யாரு ? எதுக்கு கொல்ல வர்றாங்க ? என்பதை சொல்கிறது தொடர்.  Dan Chase மனைவி இறந்த நிலையில் 2 நாய்களுடன் தனிமையில் வசிக்கிறார். திடீரென ஒருத்தன் இவரை கொல்ல வருகிறான் நடக்கும் சண்டையில் நாய்கள் உதவியுடன் அவனை கொன்று விடுகிறார்.  அதன் பிறகு வீட்டை காலி பண்ணிட்டு கிளம்புகிறார். அங்கிட்டு பார்த்தால் FBI ல ஒரு மிகப்பெரிய கூட்டமே இவர் தேடிட்டு இருக்கு.  யார் இந்த தாத்தா ? கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவரின் வாழ்க்கை திடீரென கலவர பூமியாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி பயணிக்கிறது படம்.  இவருடைய ஃப்ளாஷ் பேக் நடப்பது ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிப்பு நடந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள். CIA ஏஜன்ட் ஆன இவர் அங்கு உள்ள ஒரு போராட்டக்குழுவுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்கிறான். அங்கு நடந்