முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Se7en - செவன் (1995)

Se7en (Seven) - செவன் (1995)  - Tamil Review 


இந்த திரைப்படம் Thriller, Crime, Physiological thriller, Serial killer என எந்த வகையான Genre எடுத்துக் கொண்டாலும் டாப் 3 படங்களில் இருக்கும். 

Se7en movie review in tamil, seven, செவன் திரைப்பட விமர்சனம், morgan freeman, Brad Pitt , David Fincher, seven movie cast, movie Anniversaryபிரபல இயக்குனரான David Fincher (The Girl With Dragon Tattoo)  அவர்களின் மாஸ்டர் பீஸ் திரைப்படம். இத்திரைப்படத்தின் இரசிகர்கள் படம் வெளியாகி 25 ஆண்டுகள் முடிந்ததை கொண்டாடி வருகின்றனர். நானும் இந்த படத்தை பார்த்து 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் இன்னொரு முறை பார்த்தேன். பார்த்து விட்டு இந்த அளவு சிறப்பான திரைப்படம் பற்றி எழுதாமல் விட்டால் எப்படி.... 

பெரும்பாலான திரைப்பட பிரியர்கள் இந்த திரைப்படத்தை பார்த்து இருப்பீர்கள்... இன்னும் பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாக பாருங்கள்... படம் கொஞ்சம் சீரியசான கதைக்களம் என்பதால் குடும்பத்துடன் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. 

படத்தின் ஹீரோக்கள் இரண்டு பெரிய தலைகள்.. ஒரு வாரத்தில் ஓய்வு பெறப்போகும் டிடெக்டிவ் சோமர்செட் கதாபாத்திரத்தில் Morgan Freeman மற்றும் புதிதாக அந்த ஊருக்கு மாறுதல் வாங்கி வந்திருக்கும் இளம் டிடெக்டிவ் மில்ஸ் கதாபாத்திரத்தில் Brad Pitt . 

ஊருக்குள் ஒரு கொலை நடக்கிறது. கொலை வித்தியாசமாக முறையில் குண்டான ஒருவனை துப்பாக்கி முனையில் சாப்பிட வைத்தே கொன்று உள்ளான் கொலைகாரன். இரண்டு டிடெக்டிவ்களும் இணைந்து விசாரணையில் இறங்குகிறார்கள். 

மீண்டும் ஒரு கொலை நடக்கிறது. இந்த முறை துப்பாக்கி முனையில் ஒரு வக்கீலை மிரட்டி அவனுடைய சதையை அவனையே அறுக்க வைத்து கொடூரமாக கொன்றுள்ளான். தரையில் ரத்தத்தால் Greed என எழுதப்பட்டுள்ளது. 

பின்னர் விசாரணையில் முதல் கொலையில் Gluttony என்கிற வார்த்தை எழுதப்பட்டுள்ளதை கண்டுபிடிக்கிறார் சோமர்செட். 

இதனை ஆராய்ந்து கொலைகாரன் Seven Deadly Sins ( Gluttony, Greed, Pride, Lust, Envy, Lust and Sloth) அடிப்படையில் கொலைகளை செய்கிறான் என்று கணிக்கிறார். இன்னும் 5 கொலைகள் நடக்கும் என்கிறார். 

அதே போல மேலும் 3 கொலைகள்(Pride, Lust, Sloth) நடக்கிறது. கொலையாளி யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் திணற திடீரென வந்து சரணடைகிறான் கொலையாளி John (Kevin Spacey)

எதற்கு சரணடைந்தான்? மிச்சம் உள்ள இரண்டு கொலைகளை செய்து முடிக்காமல் ஏன் சரணடைந்தான் என்பதை படத்தில் பாருங்கள். 

படம் முழுவதும் சஸ்பென்ஸ் உடன் ஆரம்பத்தில் இருந்து பரபரவென செல்கிறது. சீரியல் கில்லர் ஒவ்வொரு கொலையையும் செய்ய உபயோகிக்கும் முறைகள் நமக்கு அதிர்ச்சி தருகிறது. 

Morgan Freeman மற்றும் Brad Pitt நடிப்பில் பிரமாதப்படுத்தி உள்ளனர். 

சைக்கோ கதாபாத்திரத்தில் சிறிது நேரம் வந்தாலும் Kevin Spacey தெரிக்க விட்டு இருக்கிறார்...

என்ன ஒரு அற்புதமான க்ளைமாக்ஸ்... What's in the box ?? 

படம் வந்து 25 வருடங்கள் ஆகிறது ஆனால் இப்ப ரிலீஸ் ஆன படம் மாதிரி தான் இருக்கிறது. 

கண்டிப்பாக ஷங்கர் அந்நியன் படத்தை (கருட புராணம் கான்செப்ட்) இந்த படத்தை பார்த்து inspire ஆகிதான் உருவாக்கி இருப்பார் என நினைக்கிறேன். 

IMDb Rating : 8.6

இது வரை வெளிவந்த படங்களில் IMDb -ல் 20 -வது இடத்தைப் பிடித்துள்ளது இந்த படம்.

Available in Netflix 
கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014)

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014) Tamil Review  இது பிரபல நாயகன் டாம் ஃகுரூஸ் (Tom Cruise) மற்றும் எமிலி (Emily Blunt) இணைந்து நடித்த டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வித்தியாசமான படம். ஏலியன்கள் பூமியை கைப்பற்ற போர் தொடுக்கின்றன. மிகவும் புத்திசாலித்தனமான இருப்பதால் மனித இனத்தால் தாக்கு பிடிக்க முடியாமல் பெருத்த அளவில் உயிர் சேதங்கள் ஏற்படுகின்றது. இந்நிலையில் உள்குத்து அரசியல் காரணங்களால் இது வரை போர்களமே கண்டிராத டாம் க்ரூஸ் நேராக போருக்கு அனுப்பப்படுகிறார். ஐந்து நிமிடங்களில் ஏலியனால் கொல்லப்பட்டு இறந்து விடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக டைம் லூப்பில் மாட்டிக் கொள்கிறார். எழும் போது போர்களத்தில் எழுகிறார் சண்டை போடுகிறார் மறுபடியும் இறந்து போகிறார். ஒவ்வொரு சுழற்சியின் போதும் புதிதாக சண்டை நுணுக்கங்களை கற்று படத்தில் ராணுவ வீரராக வரும் நாயகியுடன் இணைந்து ஏலியன் தலைவன் ஆன ஆல்ஃபா வை வீழ்த்தி மனித இனத்தை காப்பாற்றினார்களா என்பதே முடிவு. மிகவும் புதிதான கதையம்சம் மற்றும் இயக்கம். போர் காட்சிகள் சிறப்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக ‌பார்க்க வேண்டி

My Microsoft Azure - AZ 900 Certification Journey.

இது மாதிரி நெறயா ஆர்ட்டிக்கிள் பார்த்து இருப்பீர்கள். ஆனா என்னோட பயணம் இந்த சர்ட்டிபிகேஷன் முடிச்சே ஆகணும் மற்றும் நேரம் குறைவு என்பதால் பரபரப்பாக  படித்தது. அதுனால ரொம்பவே ப்ராக்டிகலா இருக்கும். எல்லாருக்கும் ஒர்க் ஆகுமானு தெரியாதுங்க. அதனால இத அப்படியே எல்லாம் ஃபாலோ பண்ணாதீங்க.  இது நான் உபயோகித்த வழிமுறைகள் மட்டுமே. Just want to share my experience இந்த செப்டம்பர்க்குள்ள ஏதாவது ஒரு சர்ட்டிபிகேஷன் முடிக்க வேண்டும் என கம்பெனியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.  நான் படிச்சுட்டு இருந்தது GCP Exam க்கு.‌ஆனா திடிரென Azure & GCP எதுனாலும் படிக்கலாம் என்று சொல்லிட்டு நிறைய கட கடவென AZ 900 எழுதி பாஸ் ஆகிவிட்டார்கள்.  நான் எழுதுனா GCP தான் எழுதுவேன் என்று உக்காந்து இருந்தேன். ஆனா எனக்கு தெரிந்த கம்பெனி வட்டத்தில் யாரும் GCP எழுதவில்லை . அதனால் நம்பிக்கை கொஞ்சம் கம்மியாகவே இருந்தது.  இதற்கு நடுவில் ஒரு ஜீனியர் பையன் நான் AZ 900  முடிச்சுட்டேன் என்று கால் பண்ணான். எப்படிடா என்றதும் 2 லிங்கை வாட்ஸ்ஆப்பில் அனுப்பினான். இத மட்டும் படிச்சு தான் நான் பாஸ் ஆனேன் என்றான்.  இதற்கு நடுவில் எங்க