Daniel Craig ஜேம்ஸ் பாண்ட்டாக நடித்த கடைசி படம். வழக்கமான உலகத்தை வில்லனிடம் இருந்து காப்பாற்றும் டெம்ப்ளேட் தான்.
IMDb 7.3
Tamil dub ✅
Available @Prime
வழக்கமான 007 படங்களை விட சென்டிமென்ட் தூக்கலான படம்.
தன் மனைவி / காதலி மேல சந்தேகப்பட்டு ட்ரெயின் ஏத்தி அம்மா வீட்டுக்கு அனுப்பி விட்டுட்டு தனி ஆளாக ஒரு கிராமத்தில் வசிக்கிறார் ஜேம்ஸ். பழைய நண்பர் ஒருவர் உதவி கேட்க அதில் வில்லனுடன் உரசல் ஏற்படுகிறது.
வில்லன் கண்டுபிடிக்கும் Bio Weapon உலகத்தையே அழிக்க கூடிய வல்லமை பெற்று இருக்கிறது. அதனால் இதை தடுக்க மீண்டும் களத்தில் இறங்குகிறார் Bond. இதில் பழைய காதிலியுடன் மீண்டும் சந்திக்க நேர அப்பொழுது சில உண்மைகள் தெரிய வருகிறது. மீண்டும் காதலியுடன் இணைகிறார்.
கடைசியில் வில்லன் இந்த ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை ஒரு தீவில் நடத்தி வருகிறார் என தெரியவர அதை அழிக்க கிளம்புகிறார்.
வில்லனை கொன்றாரா ? தொழிற்சாலை அழிக்கப்பட்டதா ? தன் மனைவியுடன் மீண்டும் இணைந்தாரா என்பதை படத்தில் பாருங்கள்.
ஜேம்ஸ் பாண்ட் படத்துக்கே உரிய கதைக்களம். ஜேம்ஸ் பாண்டையும் கடைசியாக குடும்பஸ்தன் ஆக்கி விட்டு அழ வைத்து இருக்கிறார்கள்.
படம் முழுவதும் தேவையான ஆக்சன் காட்சிகள் இருப்பதால் போரடிக்காமல் போகிறது. சேஸிங், சண்டைக்காட்சிகள், ஜேம்ஸ் உபயோகிக்கும் நவீன ஆயுதங்கள் என எல்லாமே நல்லா இருக்கு.
Ana de Arams ஒரே ஒரு சண்டைக்காட்சியில் மட்டுமே வருகிறார்.
வில்லனாக Rami Malak வருகிறார். என்னதான் வில்லத்தனம் செய்தாலும் ஏதோ ஒன்று அவரிடம் மிஸ்ஸிங்.
படம் ரொம்பவே நீளம். Daniel Craig க்கு ஜேம்ஸ் பாண்ட்டாக நல்ல ஒரு முடிவை கொடுத்து இருக்கிறார்கள். கண்டிப்பாக பார்க்கலாம் 👍
அடுத்த James Bond க்காக வெயிட் பண்ணுவோம் 😊.
Watch Trailer:
கருத்துகள்
கருத்துரையிடுக