God's Crooked Lines (AKA) Los renglones torcidos de Dios review
பிரபல ஸ்பானிஷ் இயக்குனர் Oriol Paulo இயக்கத்தில் The Body, The Invisible Guest வரிசையில் இன்னொரு தரமான 🔥🔥 சம்பவம்.
அவரோட தனித்துவம் திரைக்கதை..அத பக்காவா பண்ணிருக்கார்.
Engaging + Twists 👌👌
Tamil dub ❌
Available in #Netflix
ஒரு மிகப்பெரிய மனநலக் காப்பகத்தில் ஒரு பெண் டிடெக்டிவ் நோயாளி போல நடித்து அட்மிட் ஆகிறார்.
எதுக்கு இங்க வர்றார் என்றால் அங்க நடந்த ஒரு கொலையை கண்டுபிடிக்குமாறு இறந்த பேஷண்ட்டின் அப்பா கேட்டுக் கொண்டதால்.
வெளில இருந்து கண்டுபிடிக்க முடியாது என்பதால் இப்படி நோயாளியாக உள்ளே போகிறார்.
இப்ப இதுல வர்ற முதல் ட்விஸ்ட் என்னனா இந்த லேடி உண்மையிலேயே மனநிலை பாதித்தவர் என அந்த ஆஸ்பத்திரி இயக்குனர் முடிவு பண்ணி வைத்தியம் பாக்க ஆரம்பிக்கிறது தான்.
இதுக்கு அப்புறம் கதையில் பல ட்விஸ்ட்டுகள் வச்சு அங்க வேலை பார்க்கும் டாக்டர்கள் மட்டும் இல்லாம நம்மையும் உண்மையிலேயே அந்த லேடி டிடெக்டிவா இல்ல பேஷண்ட்டானு யோசிக்க வைக்கிறார்கள்.
படத்தோட பெரிய அட்வான்ட்டேஜ் இந்த சஸ்பென்ஸ்ஸை கடைசி வரைக்கும் தக்க வைச்சது. படம் முடிஞ்ச பிறகும் நம்மள இன்னும் யோசிக்க வைச்சது 👌
கண்டிப்பாக பாருங்க 👍
கருத்துகள்
கருத்துரையிடுக