The Invisible Guest -2016

 The Invisible Guest

2016 ஆம் ஆண்டு வெளிவந்த Spanish Psychological Thriller Movie.

ஒரு ஹோட்டல் அறையின் கதவை உடைத்துக்கொண்டு போலீஸ் உள்ளே நுழைகிறது. இளம் தொழிலதிபர் ஆட்ரியன் தன் நெற்றியில் ரத்தக்கறையுடன், பிணமாக கிடக்கும் தன் காதலி லாராவை கையில் ஏந்தியவாறு திகைப்பில் காணப்படுகிறான். அறை முழுக்க பணம் கொட்டிக்கிடக்கிறது.

ஜன்னல் கதவு என அனைத்து வழிகளும் உள் பக்கமாக பூட்டிக்கிடக்கும் அந்த அறையில், யாரோ ஒருவர் தன்னையும் தாக்கி விட்டு தன் காதலியையும் கொன்றுவிட்டு சென்றதாக ஆட்ரியன் சொல்லும் கதையை போலீஸ் நம்ப மறுக்கிறது.  

அவன் மேல் கொலை கேஸ் பதிவாகி விசாரணை நடக்கிறது. அவனை வழக்கில் இருந்து எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்பில் ஒரு வயதான பெண் வக்கீல் உதவிக்கு வருகிறார். வக்கீலிடம் அதுவரை நடந்த அனைத்து உண்மைகளையும் ஒளிவுமறைவில்லாமல் கூற ஆரம்பிக்கிறான். 

அவனின் கதைப்படி…

ஆட்ரியனும் லாராவும் ஒரு மலைப்பாதையில் சென்று கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக நடக்கும் விபத்தில், எதிரே காரில் தனியாக வந்த ஒரு இளைஞன் மரணமடைகிறான். போலீஸுக்கு சென்றால் இவர்களின் கள்ளஉறவு குடும்பத்திற்கு தெரிந்து விடும் என்று பயந்து, லாராவின் திட்டப்படி அந்த இளைஞனின் பிணத்தை இருவரும் சேர்ந்து மறைத்து விட முடிவு செய்கிறார்கள்.

அந்த சமயத்தில் அந்த வழியாக ஒரு கார் இவர்களை கடந்து செல்கிறது. அந்த காரில் இருக்கும் நபர் இவர்களிடம் துருவி துருவி கேள்வி கேட்க, இவர்கள் ஏதோ சொல்லி சமாளித்து விடுகிறார்கள். அந்த நபர் ஒருவித சந்தேகத்துடன் அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். 

அந்தக்கார் கிளம்பியதும், ஆட்ரியன் அந்த இளைஞனின் பிணத்தை காட்டுக்குள் புதைக்க இடம் தேடி கிளம்பிவிடுகிறான். அந்த சமயத்தில் பழுதான காரில் தனியாக இருக்கும் லாராவை ஒரு வயதானவர் வந்து அணுகுகிறார். அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்று உதவியும் செய்கிறார். ஆனால் லாராவின் நடவடிக்கை கொஞ்சம் சந்தேகத்தை கிளம்புகிறது. ஏதோ மர்மம் இருப்பதை உணர்கிறார் அவர்.

தற்போது லாராவின் மர்ம மரணத்திற்கும் இந்த விபத்திற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என சந்தேகிக்கிறான் ஆட்ரியன். அந்த விபத்தின் போது சந்தித்த இரண்டு நபர்களில் ஒருவர் தான் இந்தக்கொலையை செய்திருக்க வேண்டும் எனவும் யூகிக்கிறான்.

வக்கீல் ஆட்ரியன் கூறிய கதையை முழுக்க கேட்டுவிட்டு இதில் இருந்து எப்படி இவனை காப்பாற்றுவது என யோசிக்கிறார்.

ஆட்ரியன் சொன்ன இந்தக்கதை எந்த அளவிற்கு உண்மை.? உண்மையிலேயே லாராவை கொலை செய்தது யார்? உண்மையிலே அந்த இளைஞன் என்ன ஆனான்? ஆட்ரியன் கொலை வழக்கில் இருந்து தப்பித்தானா இல்லையா? 

வாய்ப்புக் கிடைத்தால் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

பரபரப்பான திரைக்கதை மற்றும் பின்னணி இசை மூலம் நம்மை நுனி சீட்டில் உட்கார வைக்கிறது இந்தப்படம். எந்த ஒரு இடத்திலும் தொய்வே இல்லாமல் விறுவிறுப்பாக நகர்கிறது.

நிச்சயமாக ஒரு தரமான த்ரில்லர் படம்.

IMDb Rating : 8.1/10

Available in Netflix

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

2021 – ஒரு பார்வை2021 – ஒரு பார்வை

2021 ஒரு வழியா முடிகிறது. இந்த வருடமும் பெரும்பாலான பகுதியை கொரானா ஆக்கிரமித்து கொண்டது. ஆனால் 2020 ஐ ஒப்பிடுகையில் இந்த வருடம் கொஞ்சம் பரவாயில்லை.  2020 ல் ட்விட்டரில் கணக்கு ஆரம்பித்தேன். நிறைய போஸ்ட்டுகள் போட்டேன் . ஆனால் பெரிதாக

Along Came A Spider – 2001Along Came A Spider – 2001

Along Came A Spider Tamil Review  ஒரு சைக்கோ கிட்ட மாடடிக்கிட்ட அரசியல்வாதியின் மகளை காப்பாற்ற முயற்சிக்கும் போலீஸ் ஹீரோ.  IMDb 6.4 Tamil dub ❌ OTT ❌ ஹீரோவாக  Morgan Freeman நடித்து இருந்ததால் பார்த்த படம். 

ரிச்சர்ட் ஜீவல் (Richard Jewell ) – 2019ரிச்சர்ட் ஜீவல் (Richard Jewell ) – 2019

ரிச்சர்ட் ஜீவல் (Richard Jewell Tamil Review) – 2019 இத்திரைப்படம் 1996 நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.  ஹாலிவுட்டின் மூத்த இயக்குனர் மற்றும் நடிகர்களில் ஒருவரான கிளின்ட் ஈஸ்ட்வுட் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படம். கிளின்ட் ஈஸ்ட்வுட்