Space Cowboys Tamil Review
பழுதாகி போன சாட்டிலைடை பூமிக்குள் வராமல் தடுக்கும் மிஷன்னுக்காக விண்வெளிக்கு போகும் 4 சீனியர் சிட்டிசன்களின் அட்வென்சர் தான் படம்.
IMDb 6.5
Tamil dub ❌
OTT ❌
Clint Eastwood (92 வயது) இந்த படம் வந்தப்ப 70 வயசு.. இந்த மனுஷன் தன் வயதுக்கு ஏத்த மாதிரி எப்படி கதையை பிடிக்கிறார் என்று நம்ம சீனியர் ஹீரோக்கள் கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டும்.
1958 களில் படம் ஆரம்பிக்கிறது. திறமையான பைலட்டுகள் மற்றும் வேறு வேறு துறையில் நிபுணர்களான நபர்களை வைத்து விண்வெளிக்கு செல்லும் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது அமெரிக்கா. ஒரு கட்டத்தில் அந்த ப்ராஜெக்ட் கைவிடப்பட ஹீரோ & நண்பர்கள் நான்கு பேரும் பிரிந்து செல்கிறார்கள்.
40 வருடங்களுக்கு பிறகு ஒரு ரஷ்ய செயற்கைகோள் தடம் மாறி பூமியை நோக்கி வருகிறது. அதனை Guidance System உருவாகியது Frank( Clint Eastwood) . இதனை அவர்தான் சரி செய்ய முடியும் என்பதால் அவரின் உதவியை நாடுகிறது. உதவி செய்ய வேண்டும் என்றால் தன்னுடைய நண்பர்கள்+ டீம் அனைவரையும் அந்த செயற்கைக்கோள்க்கு அனுப்பினால் சரி பண்ணுவேன் என டீல் போடுகிறார்.
இதன் பிறகு எவ்வாறு விண்வெளிக்கு சென்று அதை சரி செய்தார்கள் என்பது மீதி படம்.
நண்பர்களாக Clint Eastwood, Tommy Lee Jones (Ad Astra) , Donald Sutherland, James Garner சூப்பராக நடித்து உள்ளார்கள்.
முதல் ஒரு மணி நேரம் கேரக்டர் டெவலப்மென்ட் மற்றும் Plot செட் பண்றதுல போகிறது. அதுவும் தேவையான இடத்தில் ஒன் லைனர்கள் வைத்து கொஞ்சம் கலகலப்பாக போகிறது. ஆனால் இன்னும் கொஞ்சம் நீளத்தை குறைத்து இருக்கலாம்.
படம் சுமாராக 2 மணிநேரம் ஓடுகின்றது. கடைசி ஒரு மணிநேரம் செம ஸ்பீடு.
லாஜிக் எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் 😎😎
கருத்துகள்
கருத்துரையிடுக