ரிச்சர்ட் ஜீவல் (Richard Jewell ) - 2019

ரிச்சர்ட் ஜீவல்( Richard Jewell ) - 2019


இத்திரைப்படம் 1996 நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். 
ஹாலிவுட்டின் மூத்த இயக்குனர் மற்றும் நடிகர்களில் ஒருவரான கிளின்ட் ஈஸ்ட்வுட் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படம். கிளின்ட் ஈஸ்ட்வுட் பல சிறப்பான திரைப்படங்களை இயக்கியுள்ளார் . உதாரணமாக அன்ஃபர்கிவ்வன் , மில்லியன் டாலர் பேபி போன்ற திரைப்படங்களை சொல்லலாம்.


கதைச்சுருக்கம் :

ரிச்சர்ட் ஜுவல் சட்டத்தை மதித்து நடக்கும் ஒரு வெகுளியான முன்னாள் காவல் அதிகாரி. அப்பா இல்லாத நிலையில் தனது அம்மா பாபியுடன் வசித்து வருகிறார்.  செக்யூரிட்டியாக  வேலை பார்க்கும் அவர் 1986 வது வருடம் அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு நிகழ்ச்சி நடந்த இடத்தில் வெடிகுண்டு இருப்பதை கண்டுபிடித்து நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றுகிறார். ஆரம்பத்தில் ஹீரோவாக கொண்டாடப்படுபவர் செய்தித்துறை மற்றும் காவல்துறையின் பொறுப்பின்மை காரணமாக அவர் தான் வெடிகுண்டு வைத்தார் என்று குற்றம் சாட்டுகின்றனர். அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார் என்பது பற்றிச் சொல்கின்ற படம். 

ரிச்சர்ட் ஒரு லா ஏஜென்சியில் சப்ளை கிளார்க்காக வேலை செய்கின்றார். எவருமே அவரை மதிக்காத நிலையில் தன்னுடன் நன்றாக பழகும் வக்கீலான வாட்சனுடன் நண்பராகிறார். அதன் பிறகு அந்த வேலையை விட்டு செக்யூரிட்டி வேலைக்கு சேருகிறார். 

அந்த மைதானத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பு FBI agent டாம் ஷா என்பவர் கவனிக்கிறார். நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க கேத்தி என்ற பெண் நிருபர் வருகிறார். 


ஒலிம்பிக் நிகழ்ச்சி நடக்கும் மைதானத்தில் வெடிகுண்டை கண்டுபிடிக்கிறார். அதனால் நூற்றுக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப் படுகின்றனர். 

மீடியாக்களில் பிரபலமான நபராக ஆகிறார் ரிச்சர்ட். ஆனால் ஒரே நாளில் ரிச்சர்ட் தான் தான் பிரபலமாக அந்த குண்டை வைத்தார் என FBI ஆல் குற்றம் சாட்டப்படுகிறார்.  

இதை மறைமுகமாக டாம் ஷா மூலம் மோப்பம் பிடிக்கும் கேத்தி இதை செய்தித்தாளில் முதல் பக்கத்தில் வெளியிடுகிறார். மற்ற பத்திரிக்கைகளும் இதே செய்தியை வெளியிட என்ன நடக்கிறது என்று தெரியும் முன்பே பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளால்  குற்றவாளி ஆக்கப்படுகிறார்.

நிலைமை கை மீறி போவதை உணர்ந்த அவர் தனக்கு தெரிந்த ஒரே வக்கீல் நண்பர் வாட்சனை உதவிக்கு அழைக்கின்றார். 
 
வாட்சன் மற்றும் அவரது காதலி இருவரும் இணைந்து எவ்வாறு இந்த வழக்கை ‌எடுத்து நடத்துகின்றனர் என்பது தான் கதை. 

படத்தில் பத்திரிகை மற்றும் FBI ன் இன்னொரு பக்கம் காட்டப்படுகிறது. தங்களின் பொறுப்பின்மை காரணமாக எவ்வாறு அப்பாவியான ரிச்சர்ட்யை சிக்க வைக்கும் தில்லு முல்லுகள் திடுக்கிட வைக்கிறது. 

ஆனால் ரிச்சர்ட் கூலாக‌ இருக்கிறார்.‌அவர் அம்மாவுடன் நிறைய நெகிழ்ச்சியான தருணங்கள் உள்ளது. அவருடைய அம்மா பாபி கதாபாத்திரத்தில் கேத்தி பேட்ஸ் (Kathy Bates) அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

சீரியசான கதை என்றாலும் ரிச்சர்ட் கதாபாத்திரத்தின் இயல்பு காரணமாக படம் ‌முழுவதும் மெலிதான நகைச்சுவை இழையோடுகிறது. 

கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். ரிச்சர்ட் ஜுவல் கதாபாத்திரத்தில் நடித்தவர்  பால் வால்டர் (Paul Walter Hauser) . வெகுளியான கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பு. அதுவும் இறுதி காட்சியில் அம்மாவை பார்க்கனும் என்று சொல்லும் காட்சி, கோபத்தில் உள்ள அம்மாவை சமாதான படுத்தும் காட்சிகள் கண்கலங்க வைக்கும். 

அவருடைய வக்கீல் நண்பராக வரும் வாட்சன் கதாபாத்திரத்தில் சாம் ராக்வெல்(Sam Rockwell) கலக்கி இருக்கிறார். 

கிளின்ட் ஈஸ்ட்வுட் வழக்கம் போல சிறப்பான திரைப்படத்தை கொடுத்து இருக்கிறார். 
கருத்துகள்

பிரபலமான இடுகைகள்