Ad Astra Tamil Review
Brad Pitt & Tommy Lee Jones நடிப்பில் வெளிவந்த ஒரு Space Adventure படம் இது. The Lost City Of Z எடுத்த டைரக்டரின் இன்னொரு படம்.
IMDb 6.5
Tamil dub ❌
Available @netflix
எதிர்காலத்தில் நடக்கும் கதை. கதை நடக்கும் கால கட்டத்தில் நிலவுக்கு பயணம் என்பது கமர்ஷியல் ஆக்கப்பட்டு விட்டது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கின்றனர்.
இதையெல்லாம் தாண்டி நெப்டியூன் கிரகத்தை தாண்டி ஏலியன்கள் இருக்கிறதா என்பதை ஆராய்ச்சி செய்ய போன விண்கலம் காணாமல் போய் விடுகிறது.
30 வருடங்கள் கழித்து அந்த காணாமல் போன விண்கலத்தில் இருந்து மிக அதிக அளவிலான எலக்ட்ரிக்கல் பவர் வந்து பூமி உட்பட பல கிரகங்களில் கடும் பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது.
இதனை சரி செய்ய Ray (Brad Pitt) எனும் விண்வெளி வீரரை தேர்வு செய்கின்றனர். Ray யார் என்றால் 30 வருடங்கள் முன்னாடி காணாமல் போன விண்கலத்தின் கேப்டனான Clifford (Tommy Lee Jones) ன் மகன் .
இவர் காணாமல் போன விண்கலத்தை கண்டுபிடித்து Solar System த்தை காப்பாற்றினாரா என்பதை படத்தில் பாருங்கள்.
கிராபிக்ஸ், ஸ்பேஸ் காட்சிகள் எல்லாம் சூப்பரா இருக்கு. கண்டிப்பாக தியேட்டர்ல பார்த்து இருக்க வேண்டிய படம்.
என்ன தான் ஸ்பேஸ் சம்பந்தப்பட்ட படமாக இருந்தாலும் படம் நகர்வது மனித உணர்வுகளை சுற்றி தான்.
Brad Pitt நடிப்பில் கலக்கி இருக்கிறார். அவரது நடிப்பு திறமையை காட்ட சரியான படம் இது.
படம் மெதுவாக தான் போகும் ஆனால் கண்டிப்பாக பார்க்கலாம் 👍
கருத்துகள்
கருத்துரையிடுக