Nope Tamil Review
இன்னொரு ஹாரர் படம் ஆனால் ஏலியன்ஸ் வச்சு பண்ணி இருக்கார்.
IMDb 7.2
Tamil dub ❌
படத்தோட ஹீரோ மற்றும் அவரோட தங்கச்சி ஊருக்கு வெளில ஒரு குதிரை பயிற்சி மையம் வச்சு இருக்காங்க.
இவங்க தொழில் குதிரைகளை பழக்கப்படுத்தி விளம்பரங்கள் மற்றும் படத்தில் நடிக்க வைப்பது.
ஒரு நாள் அந்த ஏரியாவில் ஏலியன் நடமாட்டம் இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். இதனை ஃபோட்டோ/வீடியோ எடுத்து வெளியிட்டால் நல்ல புகழ் மற்றும் பணம் கிடைக்க என முடிவு செய்து அதற்கான வேலையில் இறங்குகிறார்கள்.
இவர்கள் இடத்திற்கு பக்கத்தில் தீம் பார்க் நடத்தும் ஒருவன்(Steven Yeun - Minari, The Walking Dead) இதே மாதிரி ஏலியனை வச்சு காசு பாக்க நினைக்கிறான்.
இவர்கள் ஏலியனை படம் பிடிச்சு பிரபலம் ஆனார்களா இல்ல ஏலியன் இவர்களை வச்சு செஞ்சா என்பதை படத்தில் பாருங்கள்.
படம் செம ஸ்லோவான ஸ்டார்ட்.. ஒரு மணி நேரத்திற்கு அப்புறம் தான் படம் கொஞ்சம் பரபரப்பா போகுது. ஏலியன் படம் என்பதால் ஆக்சன், இரத்தம் தெறிக்கும் காட்சிகள் எல்லாம் கிடையாது. சில இடங்களில் திகில் காட்சிகள் இருக்கின்றது.
ஆனால் பிண்ணனி இசை , கேமரா எல்லாம் தரமா இருக்கும். மலை , மேகம், குதிரை தொழுவம் என பக்காவான லொக்கேஷன்கள்
எனக்கு ரொம்பவே பிடித்து இருந்தது. ஆனா எல்லாருக்கும் பிடிக்குமானு தெரியல.
கண்டிப்பாக பார்க்கலாம் வொர்த்தான படம்.
கருத்துகள்
கருத்துரையிடுக