முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Series Recommendations - My Personal Favorites-Part 1

Series Recommendations - My Personal Favorites-Part 1 - Game of Thrones, Breaking Bad, The walking dead, lost, supernatural, the 100 Review in tamil 



இந்த த்ரெட்ல எனக்கு பிடிச்ச மற்றும் enjoy பண்ணி பார்த்த Webseries பற்றி பார்க்கலாம். இதில் recommend பண்ணும் வெப்சீரிஸ் எல்லாமே ரொம்பவே நீளமானது
 (குறைந்தது 50 Episode ). 
Mini Series பிரியர்களுக்கு இன்னொரு த்ரெட் போடலாம். 

முக்கியமான விஷயம் எதுக்குமே தமிழ் டப் கிடையாது. இனிமே வருவதற்கும் வாய்ப்புகள் கம்மி. Fan Dub இருக்கிறது என்பவர்கள் டவுன்லோட் லிங்கை எனக்கு DM பண்ணவும். 

இது என்னொட personal favourites மட்டுமே. உங்களுக்கு பிடித்த சீரியல்கள் இதில் இல்லாமல் இருக்கலாம். 

நான் பார்த்த ஆர்டரிலேயே பதிவிடுகிறேன். 

Game Of Thrones

பெரும்பாலானவர்கள்  இதில் இருந்து தான் தொடர்கள் பார்க்க ஆரம்பித்து இருப்பார்கள்.

பதவிக்கான போட்டி தான் இந்த தொடரின் மையக்கரு.  அரசர்களுக்கு இடையே நடக்கும் , போட்டி, பொறாமை, பழிவாங்குவது, கூட இருந்து கழுத்து அறுப்பது, மாயம் , மாந்திரீகம், டிராகன்கள் என எல்லாமே இருக்கும். 

கொடூரமான வன்முறைக் காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகளுக்கு பெயர் போனது இந்த தொடர். 

இன்னொரு முக்கிய அம்சம் ட்விஸ்ட்டுகள் . எதிர்பாராத விதமான ட்விஸ்டகள் இருக்கும். உதாரணமாக Ned Stark ன்‌முடிவு, Red Wedding Massacre , Palace யே போட்டுத் தள்ளுவது என நிறைய இருக்கிறது. 

இது வரை எந்த தொடரும் பார்த்தது இல்லை அல்லது ஏதாச்சும் ஒரு தொடர் பார்க்கலாம்னு இருக்கேன் அல்லது இந்த தொடர் இதுவரை பார்த்தது இல்லை என்பவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.

Breaking Bad : 
இது ஒரு Quality யான தொடர். ரொம்ப பரபரப்பா எல்லாம் இருக்காது. ஆனா செம engaging னா தொடர். 

ஒரு 50+ வயதுள்ள கெமிஸ்ட்ரி வாத்தியார்க்கு கேன்சர் வந்து விடுகிறது கொஞ்ச நாள்ல செத்துருவனு சொல்லிடுறாங்க. பொண்டாட்டி பிள்ளைகளுக்கு பணம் கூட சேர்த்து வைக்கலயே என்ற கடுப்பில் தெருவில் போதை பொருள் விற்கும் இளைஞனுடம் சேர்ந்து போதை பொருள் தயாரிப்பில் ஈடுபடுகிறார். 

ஆனால் ஒரு கட்டத்தில் தான் யார் என்பதை மறந்து முழுவதும் Gangster ஆக மாறுவதை பற்றிய தொடர். 

The Walking Dead : 
Zombie பிரியர்கள் மத்தியில் இந்த தொடர் ரொம்பவே பிரபலம்.மயக்கத்தில் இருந்து எழும் போலீஸ் ஆபிஸர் ஊரே ஜாம்பிகளாக மாறியதை கண்டு அதிர்ச்சி ஆவார். 

கொஞ்சம் கொஞ்சமாக தப்பி பிழைத்தவர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு ஜாம்பிகளிடம் இருந்து தப்பி எப்படி Survive ஆகிறார்கள் என்பதை பற்றிய தொடர். 

என்ன தான் Zombies ஆபத்தானதாக இருந்தாலும் மனிதன் ரொம்பவே அபாயகரமானவன் என்பதை ஆணித்தரமாக சொல்லும் தொடர் இது. 

Lost

ஒரு ஃப்ளைட் திடீரென தடம் மாறி ஒரு அமானுஷ்யம் நிறைந்த தீவுக்குள் போய்விடும். 
அவர்களால் வெளி உலகை தொடர்பு கொள்ள முடியாது. 

அதே மாதிரி வெளி உலகில் இருப்பவர்களுக்கு இப்படி ஒரு தீவு இருப்பதும் தெரியாது. 

தொடர் செம சஸ்பென்ஸ்ஸா இருக்கும்.
என்ன நடக்கிறது என்பதை யூகிக்கவே முடியாது.  கடைசியில் கொஞ்சம் சொதப்பி இருப்பார்கள் . ஆனால் வொர்த்தான தொடர். கண்டிப்பாக பார்க்கலாம். 

நல்ல Adventure + Survival பற்றிய தொடர் இது. 

The 100
இது ஒரு சர்வைவல் தொடர். பூமியில் கதிரியக்க அளவுக்கு அதிகமாகி வாழ முடியாமல் போனதால் வானத்தில் உள்ள ஒரு Space Station ல் காலனி அமைத்து குடியேறும் ஒரு குரூப். 

அங்கு ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மீண்டும் பூமிக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் இல்லை என்றால் மக்கள் தொகையைக் குறைக்கும் வேண்டும். 

இதற்கு பதிலாக 100 பேரை செலக்ட் பண்ணி பூமிக்கு அனுப்பி வாழ ஏற்ற இடமாக மாறி விட்டதா என சோதனை செய்ய அனுப்புவார்கள். 

அந்த குரூப் பூமியில் சந்திக்கும் எதிர்பாராத சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தான் இந்த தொடர். 

செம சூப்பரான Adventure + Survival தொடர். 

Supernatural: 

அப்பா, அம்மா மற்றும் இரண்டு மகன்கள் என அழகான குடும்பம். அந்த அம்மாவை ஒரு பேய் கொன்னுடுது. 

செம் காண்டான அப்பா பேய்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட தீய சக்திகளை கொல்லுவதையே தனது பிழைப்பாக மாற்றிக் கொள்கிறார். 

இந்தப் பேய்களை பற்றிய பெரிய டேட்டா பேஸ் மற்றும் ஒவ்வொரு பேயையும் எப்படி கொல்லலாம் என instruction manual போட்டு வச்சுட்டு காணமல் போய் விடுகிறார். 

அண்ணன் தம்பி இரண்டு பேரும் அப்பா வழியில் பழிவாங்க + அப்பாவை கண்டுபிடிக்க கிளம்புகிறார்கள் ‌‌ .

உங்களுக்கு தெரிஞ்ச அல்லது கேள்விப்பட்ட சாத்தான்கள், பேய்கள், நாட்டுப்புற கதைகளில் சொல்லப்படும் பேய்கள், ஆவிகள், சொர்க்கம், நகரம் , Parallel Universe என எல்லாமே வரும் இந்த சீரியலில் ‌‌. 

சகோதரர்களாக வரும் Sam, Dean மற்றும் அவர்களுடைய பழைய மாடல் கார் இந்த தொடரில் பிரபலம். 

The Mentalist 
இந்த தொடர் பற்றி நிறைய பேசியாச்சு. உங்களுக்கு ஒரு பக்காவான Psychological Crime based investigation Thriller பாக்கனுமா . யோசிக்காம இந்த தொடரை ஆரம்பிங்க. Entertainment Guarantee... 

இன்னும் தெரிஞ்சுக்கிடனும்னா : https://www.tamilhollywoodreviews.com/2020/06/mentalist.html

Person Of Interest : 
Mentalist பார்த்து முடிச்சுட்டு அடுத்து என்ன பாக்கலாம்னு ரொம்ப யோசிக்காம இத ஆரம்பிங்க. 

கதை நடப்பது ஒரு Artificial Intelligence சிஸ்டம் சுற்றி தான்.  ஆக்ஷன் எல்லாம் தாறுமாறாக இருக்கும்.
மேலும் தெரிந்து கொள்ள: https://www.tamilhollywoodreviews.com/2020/06/person-of-interest.html

Blacklist 
ஒரு பெரிய International Criminal . உலகத்தில் உள்ள பல நாடுகளால் தேடப்படும் குற்றவாளி. 
ஒரு நாள் திடீரென போலீஸில் சரணடைவான்.

அன்னைக்கு தான் வேலைக்கு சேர்ந்து இருக்கும் ஒரு பெண் போலீஸின் பேரை சொல்லி அவளிடம் மட்டும் தான் பேசுவேன் என்று சொல்லுவான். 

இதிலிருந்து கதை பல எதிர்பாராத திருப்பங்களை கொண்டு நகரும். 

இந்த மாதிரி ஒரு பைலட் எபிசோட் எல்லாம் வற்ரதுக்கு சான்ஸே இல்லை.

மேலும் படிக்க: https://www.tamilhollywoodreviews.com/2020/06/blacklist.html

Fringe: 
இது அறிவியலை மையமாக வைத்து வந்த தொடர். 

பல அறிவியல் கான்செப்ட்களுடன் கற்பனையையும் கலந்து கட்டி சுவாரஸ்யமாக கொடுத்து இருப்பார்கள். 

நல்ல வித்தியாசமான தொடர். 

மேலும் படிக்க: https://www.tamilhollywoodreviews.com/2020/06/fringe.html


Recommended Series Available in Below OTTs
GOT - HotStar 
Breaking Bad - Netflix
Lost - don't Know (Earlier it was in Netflix ) 
The 100 - Netflix 
Supernatural - Prime Video
The Mentalist - Prime Video
Person Of Interest + Prime Video 
Blacklist - Netflix 
Fringe - Prime Video







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

X - 2022

Horror, Porn  கலந்து இது போதாது என Slasher வகையும் சேர்த்து வந்துள்ள படம் இது.   IMDb 7.3 Tamil Dub ❌ OTT ❌ , 18+  Porn Film எடுக்க ஒரு பண்ணை வீட்டுக்கு போகும் குழுவிற்கு நேரம் கொடூரங்கள் தான் படம்.  Slasher படத்துக்கே எழுதி வைச்ச டெம்ப்ளேட்.  படம் நடப்பது 1979 ஆம் வருடத்தில்.. 3 ஜோடிகள் (Producer, Director, Actors)  அப்ப பிரபலமாகி வரும் வீடியோ கேசட் மார்க்கெட்டை மையமாக வைத்து மேட்டர் படம் எடுதது கேசட்டா‌ ரிலீஸ் பண்ணா நல்ல காசு பாக்கலாம் என ப்ளான் பண்ணுகிறார்கள்.  படத்தின் டைரக்டர Farmers Daughter's என ஒரு அருமையான மேட்டர் பட ஸ்கிரிப்டை ரெடி பண்ணுகிறார் 😜 .இதை ஒரு பண்ணை வீட்டில் வைத்து எடுத்தால் ரசிகர்கள் படத்துடன் ஒன்றி. விடுவார்கள் என ஐடியா பண்ணி இந்த குரூப் ஊருக்கு ஒதுக்கு புறமான ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு சூட்டிங் போகிறார்கள்.  அந்த வீட்டின் ஓனர்ஸ் ஒரு வயதான தம்பதியர். ஓனர் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பதால் பிட்டு படம் எடுக்க வந்தோம் என சொல்லாமல் கமுக்கமாக படத்தே எடுக்கிறார்கள்.  ஆனா ஓனரம்மா இவர்கள் பிட்டு படம் எடுப்பதை பார்த்து விடுகிறது. அன்னிக்கு நைட் ஒவ்வொருத்தவங்களா கொடூர

The Old Man - Season 1 (2022)

The Old Man Tamil Review - Season 1 இது ஒரு Action, Thriller, Drama Series.  1 Season, 7 Episodes (1 Episode Yet to release) Available @hulu இதுல ஹீரோ 70+ ல இருக்குற ஒரு வயசான தாத்தா (Jeff Bridges). திடிரென ஒரு நாள் ஒருத்தன் அவர கொல்ல வர்றான். இவரு யாரு ? எதுக்கு கொல்ல வர்றாங்க ? என்பதை சொல்கிறது தொடர்.  Dan Chase மனைவி இறந்த நிலையில் 2 நாய்களுடன் தனிமையில் வசிக்கிறார். திடீரென ஒருத்தன் இவரை கொல்ல வருகிறான் நடக்கும் சண்டையில் நாய்கள் உதவியுடன் அவனை கொன்று விடுகிறார்.  அதன் பிறகு வீட்டை காலி பண்ணிட்டு கிளம்புகிறார். அங்கிட்டு பார்த்தால் FBI ல ஒரு மிகப்பெரிய கூட்டமே இவர் தேடிட்டு இருக்கு.  யார் இந்த தாத்தா ? கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவரின் வாழ்க்கை திடீரென கலவர பூமியாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி பயணிக்கிறது படம்.  இவருடைய ஃப்ளாஷ் பேக் நடப்பது ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிப்பு நடந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள். CIA ஏஜன்ட் ஆன இவர் அங்கு உள்ள ஒரு போராட்டக்குழுவுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்கிறான். அங்கு நடந்