Minari Tamil Review- மினாரி - 2021
இந்த வருடம் ஆஸ்கார் விருது (சிறந்த துணை நடிகைக்கான) வாங்கிய திரைப்படம் .
அமெரிக்க திரைப்படம் என்றாலும் கொரிய குடும்பத்தை பற்றிய படம் என்பதால் பெரும்பாலும் கொரிய மொழி பேசப்படுகிறது.
படத்தின் கதை ஒன்றும் பெரிதாக இல்லை. 1980 - களில் தென்கொரியாவில் இருந்து பிழைப்புக்காக அமெரிக்காவிற்கு வரும் ஒரு கொரிய குடும்பத்தின் வாழ்கையின் ஒரு பகுதியை படமாக எடுத்து இருக்கிறார்கள்.
படத்தின் ஹீரோவுக்கு பெரிய பண்ணை அமைத்து அதில் கொரிய காய்கறிகள், பழங்களை விளைய வைத்து அதை விற்று காசு பார்க்க வேண்டும் என்று ஆசை. அதனால் ஊருக்கு மிக ஒதுக்கு புறமாக ஒரு பெரிய இடத்தை வாங்கி குடும்பத்துடன் அதன் அருகே குடி வருகிறான். ஆனால் மனைவிக்கு அங்கு வருவதில் பெரிதாக உடன்பாடு இல்லை.
மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் ஹீரோவுக்கு. மனைவி பக்கத்தில் உள்ள ஒரு கோழி பண்ணையில் கோழிக்குஞ்சுகளை இனம் பிரிக்கும் வேலை பார்க்கிறார்.
குழந்தைகளை பார்த்துக்கொள்ள தன் மனைவியின் அம்மாவை தென் கொரியாவில் இருந்து வர வழைக்கிறான்.
பேரனுக்கு பாட்டியை சுத்தமாக பிடிக்காமல் போகிறது. கணவனுக்கும் மனைவிக்கும் சிறு சிறு மனத்தாங்கல்கள் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் பிரிய முடிவெடுக்கின்றனர்.
ஆனால் கடைசியில் நடக்கும் ஒரு சம்பவம் அனைவரையும் இணைத்து குடும்பம் தான் முக்கியம் என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறது.
சிறுவன் செம க்யூட்டாக இருக்கிறான்... நன்றாக நடித்து இருக்கிறான். மனதில் டக்கென்று ஒட்டிக்கொள்கிறான்.
பாட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பெண் செம கலக்கல். இவருக்கு தான் சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.
பாட்டியும் பேரனும் வரும் காட்சிகள் மிகவும் அருமையாக உள்ளது.
கதாநாயகனாக Steven Yuen ( Walking dead - தொடரில் இவர் பிரபலம்) முதிர்ந்த நடிப்பு . அவரது மனைவி கதாபாத்திரத்தில் வருபவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மொத்தத்தில் இயக்குனர் Lee Isaac Chung ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார்.
மெதுவாக நகரும் படம் தான் ஆனால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
IMDb Rating : 7.6/10
Available in Amazon Prime
Directed by
Lee Isaac Chung
Produced by
Dede Gardner
Jeremy Kleiner
Christina Oh
Written by
Lee Isaac Chung
Cast:
Steven Yeun
Han Ye-ri
Alan Kim
Noel Kate Cho
Youn Yuh-jung
Will Patton
Music by
Emile Mosseri
கருத்துகள்
கருத்துரையிடுக