Prison Break - Season 1
அமெரிக்க Vice President-ன் சகோதரரை கொன்று விட்டதாக ஒருத்தனை பிடிச்சு மரண தண்டனை வாங்கி கொடுத்து ஜெயிலில் போடுகிறார்கள்.
IMDb 8.3
Tamil dub ❌
Available in @hotstar
ஆனால் குற்றவாளியின் தம்பி அண்ணண் குற்றமற்றவன் என்பதை தெரிந்து கொண்டு அவனை காப்பாற்ற வாண்டடடாக ஜெயிலுக்கு வருகிறான்.
இருவரும் சேர்ந்து தப்பித்தார்களா என்பதை சொல்கிறது முதல் சீசன்.
தம்பி ஒரு Structural Engineer... அண்ணண் இருக்கும் சிறையை கட்டும் போது அதை டிசைன் பண்ணவர் இவரு தான்.
பக்காவாக தப்பிக்க ப்ளான் பண்ணி சிறைக்குள் வருகிறார். ஆனால் அங்கு உள்ள மற்ற கைதிகள் மற்றும் சூழ்நிலை காரணமாக பல எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறுகிறது.
கடைசியில் வேறு வழியின்றி நிறைய பேரை இந்த திட்டத்தில் சேர்த்துக் கொண்டு அண்ணணை காப்பாற்றினாரா இல்லையா என்பதை பரபரப்பாகவும் பல எதிர்பாராத திருப்பங்கள் உடனும் சொல்கிறது தொடர்.
கொஞ்சம் எபிசோட்கள் Plot செட் செய்ய , கேரக்டர்கள் அறிமுகம் மற்றும் அவர்களுடைய கதை என்று போகிறது.
அதற்கு அப்புறம் நடப்பது எல்லாம் தப்பிக்க போடும் பிளானை நடைமுறைப்படுத்துவதற்கு ஹீரோ மேற்கொள்ளும் முயற்சிகள் தான்.
நிறைய பேர் பார்த்து இருப்பீர்கள் . இன்னும் பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாக பாருங்கள் .
Highly Recommended 🔥🔥🔥
கருத்துகள்
கருத்துரையிடுக