Prison Break Season -3 - Series Review In Tamil
சகோதரர்கள் இருவரும் ஜெயில் இருந்து தப்பி பனாமா என்னும் நாட்டுக்கு வருகிறார்கள். ஆனால் சில பிரச்சினைகளால் அந்த நாட்டில் உள்ள சோனா என்னும் சிறையில் ஒரு சகோதரர் அடைக்கப்படுகிறார்.
13 Episodes
Tamil dub ❌
Available @disneyhotstar
அப்புறம் என்ன அவர் தப்பித்தாரா என்பது தான் 3 வது சீசன்.
Read Review:
இந்த முறை சிறையில் மாட்டியது இளைய சகோதரர். முதல் சீசனில் சிறையில் இருந்து தப்பிக்க மூளையாக செயல்பட்டவர் தான் இவர்.
இவருடன் சேர்த்து இவரை விரட்டிய போலீஸ் , பழைய வார்டன் ஒருவர் , மற்றும் முதல் சீசனில் தப்பிய கைதி ஒருவர் என அனைவரும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
இது போக வெளியே வில்லன் குரூப் ஹீரோவின் அண்ணன் பையனையும் அவரின் காதலியையும் கடத்தி வைத்துக்கொண்டு சிறையில் உள்ள ஒரு குறிப்பிட்ட கைதியை தப்பிக்க வைத்து வெளியே கொண்டு வரவேண்டும் என மிரட்டுகிறார்கள்.
அமெரிக்க சிறை போல் இல்லாமல் மிகவும் கடினமான சூழ்நிலை மற்றும் மிகவும் கொடூரமான சட்டதிட்டங்களை தாண்டி உள்ளே மற்றும் வெளியே நடக்கும் பிரச்சினைகளை சமாளித்து தப்பித்து வந்தாரா என்பது தான் இந்த சீசன்.
நல்லா பரபரப்பா போனது.. வழக்கம் போல திட்டம் , எதிர்பாராத தடைகள் , ட்விஸ்ட்டுகள் என நல்லா போனது . கண்டிப்பாக பார்க்கலாம் 👍
இதோட இந்த சீரிஸ்ஸ முடிஞ்சு விடலாம் என்று நினைக்கிறேன். 4 மற்றும் 5 வது சீசன் அவ்வளவு சிறப்பாக இல்லை என்று கேள்விப்பட்டேன்.
Trailer:
கருத்துகள்
கருத்துரையிடுக