முதல் சீசன் முழுவதும் சிறையில் இருந்து சகோதரர்கள் தப்பிப்பது பற்றியது.. இந்த சீசன் சகோதரர்கள் மற்றும் அவர்களோடு சேர்ந்து தப்பித்த 6 பேர்களின் சர்வைவல் பற்றி சொல்கிறது.
2 Season, 22 Episodes
Tamil dub ❌
Available @Hotstar
Read Review:
ஒரு வழியாக சிறையில் இருந்து தப்பித்த 8 பேரும் பல பிரச்சினைகளை கடந்து தனித்தனியாக பிரிந்து அவரவர் வழியில் பிரிந்து செல்கின்றார்கள்.
இவர்களின் பெரிய தலைவலி புதிதாக இவர்களை வேட்டையாட நியமிக்கப்பட்ட FBI அதிகாரி.
இவர் எதிர்பார்த்ததை விட புத்திசாலித்தனமாக இருக்க சகோதரர்களின் நடவடிக்கைகளை முன்கூட்டியே கணிப்பதால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது.
என்னதான் தனித்தனியாக பிரிந்தாலும் அனைவரின் நோக்கமும் பணம். ஒரு மிகப்பெரிய தொகை(புதையல்).அது இருக்கும் இடத்தை பெரும்பாலான நபர்கள் அறிந்ததால் அனைவரும் புதையல் இருக்கும் இடத்தை நோக்கியே பயணிக்கிறார்கள்.
இதற்கு நடுவில் சகோதரர்களின் தப்பித்ததன் காரணமாக வேலை இழந்த 2 ஜெயில் அதிகாரிகள் பணத்திற்காக சகோதரர்களை தேடுகிறார்கள்.
இந்த சீசனில் சில கேரக்டர்கள் முடிவுக்கு வருகிறது. வழக்கம்போல பரபரப்பான சீன்களுக்கு பஞ்சம் இல்லாமல் போகிறது.
தனிப்பட்ட முறையில் முதல் சீசனை விட இரண்டாவது சீசன் ரொம்பவே பிடித்தது.
கண்டிப்பாக பாருங்கள் 🔥🔥🔥
Trailer:
கருத்துகள்
கருத்துரையிடுக