Best Alien Movies Of All Time- தரமான ஏலியன் படங்கள்

Best Alien Movies Of All Time- தரமான ஏலியன் படங்கள் 

 
 

ஏலியன் படங்கள் எனக்கு ரொம்பவே பிடித்தமான ஒன்று. 

 
கிராபிக்ஸ் , செட்டிங்கள் என கலக்கி இருப்பார்கள். 
 
Best alien movies of all time , alien, Aliens, Ripley, best Alien horror movies, district 9, Aliens movies recommendation in tamil, Alien movies in ta
 
 
பெரும்பாலான படங்கள் வழ வழ கொழ கொழ என்று கொடூரமாக இருக்கும் மற்றும் வன்முறை காட்சிகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அதனால் பார்க்கலாமா வேண்டாமா என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 
 
எனக்கு பிடித்த சில ஏலியன் படங்களை இந்த த்ரெட்டில் பகிர்ந்து கொள்கிறேன். நிறைய படங்கள் இதில் விட்டு போய் இருக்கலாம். 
 
இது என்னுடைய Personal Favorites list.
 
Predator (1987)
முதல் முதலில் எனக்கு ஏலியன் அறிமுகம் இந்த படத்தில் தான். 
 
அர்னால்ட் தலைமையில் காட்டுக்குள் போகும் ஒரு இராணுவ வீரர்கள் குழு Predator எனப்படும் ஏலியனிடம் சிக்கி சின்னா பின்னம் ஆவதை பற்றிய படம். 
 
Predator – உடல் பலம்  மற்றும் டெக்னாலஜி எல்லாமே செம அட்வான்ஸ்டா இருக்கும். 
 
கடைசியில் அர்னால்ட் தனியாக ஏலியனை எதிர்கொள்ளும் காட்சிகளுக்கு இப்பவும் சில்லறையை சிதற விடலாம். 
 
இதனை தழுவி தமிழில் எடுக்கப்பட்ட படம் தான் அசுரன்(1995) . அருண்பாண்டியன, ரோஜா  நடித்து இருப்பார்கள். 
 
 
Alien (1979), Aliens (1986
 
இரண்டு ஏலியன் படமும் ஒன்றுக்கு ஒன்று சளைச்சது இல்லை. 
 
Alien(1979) படம் Ridley Scott டைரக்ட் பண்ண படம். இது தான் ஏலியன் படத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய படம். 
 
Sigourney Weaver – ன் Ripley கதாபாத்திரம் ரொம்பவே ஃபேமஸ் இந்த படத்தில் இருந்து.
 
Aliens (1986) 
இது 1979 ல் வந்த Alien படத்தின் sequel.  தலைவர் James Cameron இயக்கத்தில் வெளிவந்த படம். 
 
Sequel படங்களின் வரலாற்றில் இது ஒரு Best Sequel என சொல்லலாம்.
 
இதற்கு அப்புறம் பல படங்கள் Alien என்ற பெயரை வைத்து வந்தன ஆனால் முதல் இரண்டு படங்கள் கொடுத்த அந்த அனுபவத்தை வேறு எந்த படமும் கொடுக்கவில்லை என்பதை மறுக்க முடியாது.
 
 
AVP: Alien vs. Predator (2004)
 
 
Predator ஏலியன் உயிரினங்கள் மற்றும் கொடூரமான மிருகம் போன்று இருக்கும் விலங்குகளுக்கும் இடையே நடக்கும் சண்டையை பற்றிய படம். 
 
இதற்கு நடுவில் ஒரு ஆராய்ச்சி குழு மாட்டிக்கொண்டு தவிக்கும் . அவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பது க்ளைமாக்ஸ்.
 
Independence Day (1996) 
 
ஏலியன்கள் பூமியை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்யும். ஏலியன்கள் படைபலம் டெக்னாலஜி எல்லாமே நம்மை விட ரொம்பவே Advanced ஆக இருக்கும். 
 
இந்த தாக்குதலில் இருந்து பூமியை எவ்வாறு அமெரிக்கா காப்பாற்றியது என்பதை பற்றி சொல்லும் படம். 
 
Will Smith கலக்கி இருப்பார். 
 
 
Starship Troopers ( 1997)
 
இது வேறு கிரகத்தில் நடக்கும் கதை. பூமியிலிருந்து படையை திரட்டி கொண்டு போய் அந்த கிரகத்தில் இருக்கும் கொடூரமான மிருகங்களுடன் போர் புரிவார்கள். 
 
இதை மான்ஸ்டர் மூவி வகையிலும் சேர்க்கலாம். 
 
Life (2017) 
 
இது ஒரு ஸ்பேஸ் ஸ்டேஷனில் நடக்கும் கதை. தற்செயலாக ஒரு செல் மட்டும் கொண்ட உயிரினத்தை கண்டுபிடிப்பார்கள் விஞ்ஞானிகள். ஆனால் கொஞ்சம் நேரத்தில் அது கிடு கிடுவென வளர ஆரம்பிக்கும் ‌. அதீத போக ரொம்பவே புத்திசாலித்தனமான ஜந்துவாக இருக்கும் ‌‌
 
இதனிடமிருத்து அந்த Crew தப்பித்தார்களா ? இல்லையா? எவ்வாறு பூமிக்கு வரவிடாமல் தடுத்தார்கள் என்பதை படத்தில் பாருங்கள்.  
 
 
இன்னும் சில அருமையான படங்கள் கீழே கொடுத்து உள்ளேன். இந்த படங்களை பற்றி ஏற்கனவே தனித்தனியாக போஸ்ட் போட்டுள்ளேன். அனைத்து படங்களின் டவுன்லோட் லிங்க்களும் மற்றும் ரிவ்யூக்கான  லிங்க்குகள்  நமது சேனலில் உள்ளது. 
 
 
தமிழில் (இந்திய அளவில் )  வந்த முதல் ஏலியன் படம் எது தெரியுமா ? 
1963 ல் MGR , பானுமதி, நம்பியார், P.S.வீரப்பா நடிப்பில் வெளிவந்த கலை அரசி . 
https://en.m.wikipedia.org/wiki/Kalai_Arasi
 
 
 
 
 
 
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Trip – 2021The Trip – 2021

இது நார்வே நாட்டில் இருந்து வந்து இருக்கும் காமெடி கலந்த ஹாரர் படம்.  நிறைய ரத்தம் தெறிக்கும் காட்சிகள் உள்ளது.  எலியும் , பூனையுமாக இருக்குற ஜோடி காட்டுக்குள்ள இருக்குற கெஸ்ட் ஹவுஸ்ல போய் தங்கி இருந்து பிரச்சினைகள் எல்லாத்தையும் பேசி

Zom 100: Bucket List of the Dead – Trailer UpdateZom 100: Bucket List of the Dead – Trailer Update

Zom 100: Bucket List of the Dead – புது ஜப்பான் ஜாம்பி பட டிரைலர் Netflix நிறுவனம் August 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் ஜப்பானிய Zombie படத்திற்கான டிரைலரை வெளியிட்டு இருக்கிறது.  2018 ல் வெளிவந்த

The Last Stand – 2013The Last Stand – 2013

[Quick Review] நம்ம அர்னால்ட் ரொம்ப நாள் கழிச்சு நடிச்ச action படம் என்று நினைக்கிறேன். ஒரு கிளாசிக் ஆக்ஷ்ன் திரில்லர். ஒரு பெரிய போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜெயிலில் இருந்து தப்பி விடுகிறான். கார் ஒன்றை எக்குத்தப்பாக