டிஸ்ட்ரிக் 9 - District 9 (2009)
இது ஒரு வித்தியாசமான அறிவியல் புனைவு ஏலியன் திரைப்படம்.
இது மற்ற ஏலியன் படங்கள் போல இல்லாமல் மிக புதுமையான கதையம்சம் கொண்ட திரைப்படம்.
படம் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் நகரில் நடக்கிறது. நகரத்தின் மீது ஒரு பெரிய ஏலியன் விண்கலம் வந்து நிற்கிறது.அப்பொழுது விண்கலத்தின் ஏதோ ஒரு பாகம் பூமியில் விழுகிறது. 3 மாதங்கள் எந்த நடமாட்டமும் இல்லாத நிலையில் மனிதர்கள் அந்த விண்கலத்தின் உள்ளே நுழைகிறார்கள். உள்ளே நோய்வாய்ப்பட்ட நிலையில் நிறைய ஏலியன்கள் இருக்கின்றன.
ஏலியன்களுக்கு பூமியில் இறங்க அனுமதி தரப்பட்டு டிஸ்ட்ரிக்ட் - 9 எனும் இடத்தில் குடியமர்த்த படுகின்றனர். மிகப்பெரும் எண்ணிக்கை மற்றும் அரசின் கட்டுப்பாட்டின் காரணமாக ஒரு சேரி போல் மாறிவிடுகிறது. மனிதர்கள் ஏலியன்களை மிக கேவலமான முறையில் நடத்துகின்றனர் மற்றும் பிறான்ஸ் (Prawns) என்றே அழைக்கின்றனர்.
மாம்போ எனும் ரவுடி குழுக்களின் தலைவன் டிஸ்ட்டிரிக் 9 அருகில் சட்டத்துக்கு புறம்பாக கள்ள சந்தையை அமைக்கிறான். ஏலியன்களுக்கு உணவை கொடுத்து அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பெறுகிறான்.
ஆனால் ஏலியன்களின் ஆயுதங்கள் அவற்றின் டின்ஏவோடு இணைக்கப்பட்டுள்ளது. அதனால் மனிதர்களால் இயக்க முடிவதில்லை.
சில வருடங்களில் ஏலியன்கள் மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் போகிறது. ஏலியன்களை நிர்வாகம் செய்யும் ஒப்பந்தம் Multi Nations United (MNU) எனும் நிறுவனத்திற்கு கொடுக்கப்படுகிறது. MNU விற்கு ஏலியன்களின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அவர்களின் ஆயுதங்களின் மீது தான் ஆர்வம்.
Wikus எனும் அதிகாரியிடம் 1.8 மில்லியன் ஏலியன்களை District 10 எனும் புதிய இடத்திற்கு மாற்றும் பொறுப்பை ஒப்படைக்கிறது MNU நிறுவனம்.
அவர் ஒவ்வொரு குடிசையாக சென்று காலி செய்யுமாறு வாரண்ட் கொடுக்கிறார். அப்போது கிறிஸ்டோபர் எனும் ஏலியன் குடிசையில் உள்ள சிலிண்டர்லில் உள்ள கருப்பு திரவம் தெரியாமல் Wikus மீது பட்டு விடுகிறது.
சில நாட்களில் அவன் கை ஏலியன் கை போல் மாறிவிடுகிறது. அது மட்டுமல்லாமல் ஏலியன் டின்ஏ இவனுடைய டின்ஏ வுடன் இணைந்து விடுகிறது. இதனால் ஏலியன்களின் ஆயுதங்களை இயக்கும் ஆற்றலை பெற்று விடுகிறான்.
இந்த சிறப்பு ஆற்றல் காரணமாக MNU நிறுவனம் இவனை கூறு போட்டு ஆராய்ச்சி செய்ய துடிக்கிறது. ரவுடி கும்பல் தலைவன் மாம்போ இவனை கைப்பற்ற முயற்சி செய்கிறான்.
வேறு வழியின்றி ஏலியன்களின் சேரிக்குள் சென்று கிறிஸ்டோபர் எனும் ஏலியன் குடிசையில் அடைக்கலமாகிறான்.
கிறிஸ்டோபர் தனக்கு விண்கலத்தை இயக்க தெரியும் என்றும் அதற்காக அவன் சேர்த்து வைத்த பொருள் MNU நிறுவனத்தில் உள்ளது என்கிறான். அது மட்டுமல்லாமல் அவனை குணப்படுத்த உதவுவதாகவும் சொல்கிறான்.
இருவரும் சேர்ந்து அந்த பொருளை கைப்பற்றினார்களா? கிறிஸ்டோபர் அவன் கிரகத்திற்கு மற்ற ஏலியன்களுடன் திரும்ப சென்றானா? Wikus குணமடைந்தானா ? என்பதை பல திருப்பங்களுடன் சொல்கிறது இப்படம்.
ஆரம்பத்தில் டாக்குமெண்டரி போல செல்லும் இப்படம் நேரம் செல்லச் செல்ல சூடு பிடிக்கிறது.
ஏலியன்கள் என்றாலே சக்தி வாய்ந்த உயிரினங்களாக பார்த்து பழகிய நமக்கு இதில் மிகச் சாதாரணமாக இயல்பாக காட்டி உள்ளனர்.
கிராஃபிக்ஸ் மற்றும் ஆக்ஷ்ன் காட்சிகள் அருமையாக உள்ளது.
மொத்தத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வித்தியாசமான ஏலியன் திரைப்படம்.
கருத்துகள்
கருத்துரையிடுக