முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Sci Fi படங்கள் - Part -1

The Abyss - 1989

James Cameron டைரக்ட் பண்ண படம். அவர் எவ்வளவு பெரிய ஜீனியஸ்னு இந்த படத்தை பாத்தா தெரியும். 

ஒரு நீர்மூழ்கி கப்பல் விபத்துல கடலுக்கு அடியில் போய்விடும். அதை காப்பாற்ற மிலிட்டரி மற்றும் ஒரு எண்ணெய் கம்பெனியின் தொழிலாளர்கள் இணைந்து போராடுவார்கள். 

இதற்கு நடுவில் அனைவரும் ஏலியன்கள் நடமாட்டத்தை உணருவார்கள். 

இந்த படம் பார்க்க பொறுமை வேண்டும். கிட்டத்தட்ட 2.45 மணிநேரம் ஓடும் படம். ஆனால் உழைப்பை கொட்டி படம் எடுத்து இருப்பார்கள். 1988 - 1989 களில் செய்யப்பட்ட கிராபிக்ஸ் வேற லெவல். 

கடைசியில் யார் யார் உயிரோட தப்பிச்சு வந்தாங்கனு படத்துல பாருங்கள். 

படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

Contact - 1997 

ஹீரோயின் ஏலியன்கள் இந்த பிரபஞ்சத்தில் எங்காவது இருக்கின்றனவா என்பதை ஆராய்ச்சி செய்வார்.

 ஒரு சமயத்தில் ஏலியன்கள் இடம் இருந்து சிக்னல் வரும். 

அதற்கு அப்புறம் அவர் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை சுற்றி நகரும் படம். 

Forrest Gump director Robert Zemeckis ன் இன்னொரு அருமையான படம். இதுவும் கொஞ்சம் பெரிய படம் தான். கொஞ்சம் பொறுமையா தான் பார்க்கணும்.

https://www.tamilhollywoodreviews.com/2021/10/contact-1997.html

The Mist - 2007

இது ஒரு சின்ன ஊர்ல நடக்கும் கதை‌. 

The Shawshank Redemption, The Green Mile போன்ற அருமையான படங்களை கொடுத்த இயக்குநர் Frank Darabont அவர்களின் படம். 

ஒரு புயல் வந்துட்டு போன அடுத்த நாள் ஊர் முழுவதும் திக்கான பனி சூழ்ந்து கொள்ளும். அந்த பனிக்குள் இருந்து கொடூரமான மிருகங்கள் வந்து தாக்கும். 

ஹீரோ அந்த ஊரில் உள்ள சில மக்களுடன் இணைந்து சூப்பர் மார்க்கெட்டில் மாட்டிக் கொள்வார். 

யாரு எல்லாம் தப்பித்தார்கள் என்பதை படத்தில் பாருங்கள். க்ளைமேக்ஸ் ரொம்பவே பாவமாக இருக்கும். 

Sunshine - 2007

பிரபல இயக்குனர் Danny Boyle இயக்கத்தில் வெளிவந்த படம். 

அழிந்துவரும் சூரியனைத் காப்பாற்ற சென்ற குழுவுக்கு என்ன ஆனது என தெரியாமல் போகிறது. 

அதனால் இன்னொரு குழு முதல் குழுவைத் தேடி செல்லும் பயணத்தை பற்றிய படம்.  


What happened to Monday ? - 2017

இது எதிர்காலத்தில் நடக்கும் கதை. மக்கள் தொகை அதிகமாகி விட்டதால் ஒரு குழந்தை தான் பெற வேண்டும் என்பது சட்டம். 

ஒரு பெண் ஒரே மாதிரியான 7 குழந்தைகளை பெற்று விட்டு இறந்து விடுகிறார்.  அவர்களுக்கு Sun, Mon, Tue, Wed, Thur, Fri, Saturday என கிழமைகளின் பெயரை வைக்கிறார். 

அவர்களது தாத்தா ஒரே ஒரு பெண் குழந்தை தான் என்று சொல்லி அனைவரையும் பக்காவாக ஃப்ளான் பண்ணி  ஒரே வீட்டில் வளர்க்கிறார். 

அதில் ஒரு பெண் காணாமல் போய் விட அதை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் தான் படம். 


Eternal Sunshine the The Spotless mind - 2004

இது ஒரு பக்காவான ரொமாண்டிக் Sci Fi படம். ஹீரோயின் ஒரு கம்பெனி மூலமா லவ்வரான ஹீரோவோட நினைவுகளை அழித்து விடுவாள். 


நீ தான் அழிப்பியா நானும் அழிக்கிறேன் பாரு என்று ஹீரோவும் போவார். 


அதனை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் தான் படம். வித்தியாசமான Sci Fi படம் கண்டிப்பாக பாருங்கள். 


Jim Carrey & Kate Winslet லவ்வர்ஸ்ஸா நடிச்சு இருப்பார்கள். Jim Carrey இது மாதிரியான ரோல் எல்லாம் பண்ணுவாருனு இந்த படத்த பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.


Children of men - 2006

இது ஒரு வித்தியாசமான  Sci Fi படம். 

உலகத்தில் இருக்கும் எல்லாப் பெண்களும் குழந்தை பெறும் திறனை இழந்து விடுவார்கள். 

திடீரென மெடிக்கல் மிராக்கிளாக ஒரு பெண் கருவுறுவாள். அந்த பெண்ணை கைப்பற்ற பல குழுக்கள் முயற்சி செய்யும். 

அந்த பெண்ணை காப்பாற்றும் பொறுப்பு ஹீரோவிடம் கொடுக்கப்படும். 

காப்பாற்றினாரா என்பதை படத்தில் பாருங்கள்.. 

கேமரா , லொக்கேஷன்கள் எல்லாம் சூப்பராக இருக்கும் இந்த படத்தில். 

https://www.tamilhollywoodreviews.com/2020/06/children-of-men.html

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

X - 2022

Horror, Porn  கலந்து இது போதாது என Slasher வகையும் சேர்த்து வந்துள்ள படம் இது.   IMDb 7.3 Tamil Dub ❌ OTT ❌ , 18+  Porn Film எடுக்க ஒரு பண்ணை வீட்டுக்கு போகும் குழுவிற்கு நேரம் கொடூரங்கள் தான் படம்.  Slasher படத்துக்கே எழுதி வைச்ச டெம்ப்ளேட்.  படம் நடப்பது 1979 ஆம் வருடத்தில்.. 3 ஜோடிகள் (Producer, Director, Actors)  அப்ப பிரபலமாகி வரும் வீடியோ கேசட் மார்க்கெட்டை மையமாக வைத்து மேட்டர் படம் எடுதது கேசட்டா‌ ரிலீஸ் பண்ணா நல்ல காசு பாக்கலாம் என ப்ளான் பண்ணுகிறார்கள்.  படத்தின் டைரக்டர Farmers Daughter's என ஒரு அருமையான மேட்டர் பட ஸ்கிரிப்டை ரெடி பண்ணுகிறார் 😜 .இதை ஒரு பண்ணை வீட்டில் வைத்து எடுத்தால் ரசிகர்கள் படத்துடன் ஒன்றி. விடுவார்கள் என ஐடியா பண்ணி இந்த குரூப் ஊருக்கு ஒதுக்கு புறமான ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு சூட்டிங் போகிறார்கள்.  அந்த வீட்டின் ஓனர்ஸ் ஒரு வயதான தம்பதியர். ஓனர் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பதால் பிட்டு படம் எடுக்க வந்தோம் என சொல்லாமல் கமுக்கமாக படத்தே எடுக்கிறார்கள்.  ஆனா ஓனரம்மா இவர்கள் பிட்டு படம் எடுப்பதை பார்த்து விடுகிறது. அன்னிக்கு நைட் ஒவ்வொருத்தவங்களா கொடூர

The Old Man - Season 1 (2022)

The Old Man Tamil Review - Season 1 இது ஒரு Action, Thriller, Drama Series.  1 Season, 7 Episodes (1 Episode Yet to release) Available @hulu இதுல ஹீரோ 70+ ல இருக்குற ஒரு வயசான தாத்தா (Jeff Bridges). திடிரென ஒரு நாள் ஒருத்தன் அவர கொல்ல வர்றான். இவரு யாரு ? எதுக்கு கொல்ல வர்றாங்க ? என்பதை சொல்கிறது தொடர்.  Dan Chase மனைவி இறந்த நிலையில் 2 நாய்களுடன் தனிமையில் வசிக்கிறார். திடீரென ஒருத்தன் இவரை கொல்ல வருகிறான் நடக்கும் சண்டையில் நாய்கள் உதவியுடன் அவனை கொன்று விடுகிறார்.  அதன் பிறகு வீட்டை காலி பண்ணிட்டு கிளம்புகிறார். அங்கிட்டு பார்த்தால் FBI ல ஒரு மிகப்பெரிய கூட்டமே இவர் தேடிட்டு இருக்கு.  யார் இந்த தாத்தா ? கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவரின் வாழ்க்கை திடீரென கலவர பூமியாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி பயணிக்கிறது படம்.  இவருடைய ஃப்ளாஷ் பேக் நடப்பது ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிப்பு நடந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள். CIA ஏஜன்ட் ஆன இவர் அங்கு உள்ள ஒரு போராட்டக்குழுவுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்கிறான். அங்கு நடந்