முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Gcam (Google Camera) - Introduction

Gcam (Google Camera) - ஒரு அறிமுகம் 

Gcam introduction in Tamil, gcam apk download links, Google Camera introduction in Tamil,

Gcam introduction in Tamil, gcam apk download links, Google Camera introduction in Tamil,

Gcam introduction in Tamil, gcam apk download links, Google Camera introduction in Tamil,

Gcam introduction in Tamil, gcam apk download links, Google Camera introduction in Tamil,


நேத்து gcam & Stock Cam side by side ஒரு போட்டோ போட்டு இருந்தேன்.‌அத பாத்துட்டு நெறய பேர் APK லிங்க் கேட்டாங்க . அதுனால அது பத்தி தெளிவா கொஞ்சம் சொல்லிட்டா நல்லதுனு தோனுச்சு அதுக்கு தான் இந்த த்ரெட்.


Warning : 


🔴 Only For Advanced Users 🔴


3rd Party apps உபயோகிக்கும் போது நிறைய ரிஸ்க் இருக்கு.


அதுனால இத பத்தி தெரியாதவர்கள் இதை தவிர்ப்பது நல்லது


எனக்கு இத பத்தி கவலை இல்ல மொபைல்ல நல்ல போட்டோ எடுக்கனும் என்பவர்கள் தொடரலாம்


சேதாரம் ஏதாச்சும் ஆச்சுனா கம்பெனி பொறுப்பு இல்ல Google அவுங்களோட Pixel கேமரால யூஸ் பண்றது தான் Gcam.  


இது அதிகாரப்பூர்வமாக வேற மொபைல்களுக்கு கொடுக்கப்படவில்லை. 


ஆனா சில டெவலப்பர்கள் அந்த Source Code ஐ எடுத்து மற்ற ஆண்ட்ராய்டு மொபைல்களில் வேலை செய்யுமாறு மாற்றி இருக்கிறார்கள் ‌. 


இத பத்தி பாக்குறதுக்கு முன்னாடி எப்படி இந்த கேமரா ஆஃப் யூஸ் பண்ணா நல்லா தரமான போட்டோ எடுக்க முடியுது என்பதை சிம்பிளா பாக்கலாம். 


நல்ல போட்டோ எடுக்க 3 விஷயங்கள் அவசியம். 


1. Lens 

2. Image Sensor

3. Image Processing


Lens & Image Sensor - அது மொபைல்ல வர்றது தான் அத நம்ம ஒன்னும் பண்ண முடியாது.


ஆனா போட்டோ எடுத்த பின்னாடி அந்த போட்டோவை நம்ம பார்வைக்கு கொண்டு வர்றதுக்கு சில டெக்னிக் பயன்படுத்துவாங்க. அதுல Google Algorithm King 👍


இதுபோக கேமரா & Sensor ஐ சிறப்பான முறையில் உபயோகித்து சிறந்த போட்டோக்களை எடுக்க இந்த Gcam உதவுகிறது.இத யூஸ் பண்ணா என்ன அட்வான்டேஜ்


- Photo Quality to the next level 

- HDR+, HDR + Enhanced 

- Portrait mode

- Top shot, Photosphere 

- night mode , Astrophotography


சிம்பிளா சொல்லனும்னா தரமான போட்டோக்கள் எடுக்கலாம். உங்க மொபைல்ல வர்ற கேமராவை விட இது பல மடங்கு தரமான போட்டோவை தரும். 


அதுலயும் குறிப்பாக Nighrmode & Portrait Mode ல எடுக்கும் படங்கள் வேற லெவல்ல இருக்கும்.  


கேமரா ஒரு சிக்கலான இயந்திரம். அதை எளிதாக உபயோகிக்கும் விதத்தில் உதவ இருப்பது தான் API . 


இந்த API ல் இரண்டு வெர்ஷன்கள் உள்ளன API 1 & 2. 


Camera API 2 -சப்போர்ட் இருந்தால் தான் இந்த Gcam வேலை செய்யும். 


இந்த போனுக்கு இந்த வெர்ஷன் என்று எல்லாம் கிடையாது. 


ஆன்ட்ராய்டு வெர்ஷனை பொறுத்து இது மாறுபடும். 


சில வெர்ஷன் உங்களுக்கு வேலை செய்யலாம் இல்ல திடீர்னு Hang ஆகி நிக்கலாம். இல்ல Stock Camera வை விட மோசமான போட்டோக்களை கூட இது கொடுக்கலாம்.


அதனால் உங்க மொபைலுக்கு எது சரியா வரும் என்பதை பார்த்து சரியாக உபயோகிக்க வேண்டும். 


கடைசியா நிறைய பேருக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு இதை உபயோகிக்க வேண்டுமா என கேள்வி வரும். 


என்னோட பதில் ..‌ வொர்த்து 💥💥எங்க டவுன்லோட் பண்ணலாம். இதுல நிறைய பேர் டெவலப் பண்ணி நிறைய Apk இருக்கு. இதுல பிரபலமானது மற்றும் கொஞ்சம் Bugs குறைவா , அடிக்கடி அப்டேட் ஆகறது இரண்டு


1. BSG ( MGC) 

2. Kaka 


இது ரெண்டுமே நான் ட்ரை பண்ணேன் . Kaka version நல்லா இருந்தது. ஆனா ரெண்டு மூனு தடவை கேமரா க்ராஷ் ஆகிடுச்சு. அதுனால BSG போட்டு வச்சிருக்கேன். இப்ப வரைக்கும் ஒன்னும் பிரச்சினை இல்லை. Download: 

Google "celsoazevedo bsg" 


Results ல வர்ற முதல் லிங்கல போங்க. அங்கேயே நிறைய டெவலப்பர்கள் வெர்சன் இருக்கு. 

Try different versions & Enjoy 


More pictures


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

X - 2022

Horror, Porn  கலந்து இது போதாது என Slasher வகையும் சேர்த்து வந்துள்ள படம் இது.   IMDb 7.3 Tamil Dub ❌ OTT ❌ , 18+  Porn Film எடுக்க ஒரு பண்ணை வீட்டுக்கு போகும் குழுவிற்கு நேரம் கொடூரங்கள் தான் படம்.  Slasher படத்துக்கே எழுதி வைச்ச டெம்ப்ளேட்.  படம் நடப்பது 1979 ஆம் வருடத்தில்.. 3 ஜோடிகள் (Producer, Director, Actors)  அப்ப பிரபலமாகி வரும் வீடியோ கேசட் மார்க்கெட்டை மையமாக வைத்து மேட்டர் படம் எடுதது கேசட்டா‌ ரிலீஸ் பண்ணா நல்ல காசு பாக்கலாம் என ப்ளான் பண்ணுகிறார்கள்.  படத்தின் டைரக்டர Farmers Daughter's என ஒரு அருமையான மேட்டர் பட ஸ்கிரிப்டை ரெடி பண்ணுகிறார் 😜 .இதை ஒரு பண்ணை வீட்டில் வைத்து எடுத்தால் ரசிகர்கள் படத்துடன் ஒன்றி. விடுவார்கள் என ஐடியா பண்ணி இந்த குரூப் ஊருக்கு ஒதுக்கு புறமான ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு சூட்டிங் போகிறார்கள்.  அந்த வீட்டின் ஓனர்ஸ் ஒரு வயதான தம்பதியர். ஓனர் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பதால் பிட்டு படம் எடுக்க வந்தோம் என சொல்லாமல் கமுக்கமாக படத்தே எடுக்கிறார்கள்.  ஆனா ஓனரம்மா இவர்கள் பிட்டு படம் எடுப்பதை பார்த்து விடுகிறது. அன்னிக்கு நைட் ஒவ்வொருத்தவங்களா கொடூர

The Old Man - Season 1 (2022)

The Old Man Tamil Review - Season 1 இது ஒரு Action, Thriller, Drama Series.  1 Season, 7 Episodes (1 Episode Yet to release) Available @hulu இதுல ஹீரோ 70+ ல இருக்குற ஒரு வயசான தாத்தா (Jeff Bridges). திடிரென ஒரு நாள் ஒருத்தன் அவர கொல்ல வர்றான். இவரு யாரு ? எதுக்கு கொல்ல வர்றாங்க ? என்பதை சொல்கிறது தொடர்.  Dan Chase மனைவி இறந்த நிலையில் 2 நாய்களுடன் தனிமையில் வசிக்கிறார். திடீரென ஒருத்தன் இவரை கொல்ல வருகிறான் நடக்கும் சண்டையில் நாய்கள் உதவியுடன் அவனை கொன்று விடுகிறார்.  அதன் பிறகு வீட்டை காலி பண்ணிட்டு கிளம்புகிறார். அங்கிட்டு பார்த்தால் FBI ல ஒரு மிகப்பெரிய கூட்டமே இவர் தேடிட்டு இருக்கு.  யார் இந்த தாத்தா ? கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவரின் வாழ்க்கை திடீரென கலவர பூமியாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி பயணிக்கிறது படம்.  இவருடைய ஃப்ளாஷ் பேக் நடப்பது ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிப்பு நடந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள். CIA ஏஜன்ட் ஆன இவர் அங்கு உள்ள ஒரு போராட்டக்குழுவுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்கிறான். அங்கு நடந்