1899 - Netflix Series Review In Tamil
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்த சீரிஸ் இது. முடிந்த வரை ஸ்பாய்லர் இல்லாமல் ரிவ்யூ கொடுக்க முயற்சி பண்றேன்.
In Short: Worth Watching 👍. Not for everyone.
ரிவ்யூக்கு முன்னாடி இதுவரைக்கும் எக்கச்சக்க கேள்விகள் வந்தது. முதலில் அதற்கு பதில்களை சொல்லிட்டு ரிவ்யூ போகலாம்.
ஏன் இந்த சீரிஸ்க்கு இவ்வளவு பில்டப்?
Dark னு ஒரு சீரிஸ் இருக்கு. இதுவரை வெளிவந்த Sci-Fi சீரிஸகளில் ரொம்பவே தனித்துவமானது மற்றும் பார்ப்பவர்களை ரொம்பவே யோசிக்க வைக்கும்.
Dark சீரிஸ் பார்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவம்.
அந்த சீரிஸை உருவாக்கியவர்களின் அடுத்த படைப்பு என்பதால் ரசிகர்களிடம் ரொம்பவே எதிர்ப்பார்ப்பு அதிகம்.
Bermuda Triangle பற்றிய கதையா ?
இல்லை. அது பற்றி எதுவும் இல்லை.
எந்த மொழி சீரிஸ்? இந்த சீரிஸ்க்கு தமிழ் டப் இருக்கா ?
ஜெர்மன் மொழியில் வந்து உள்ளது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி டப் ஆடியோ உள்ளது.
தமிழ் டப் இல்லை. இப்போதைக்கு தமிழ் டப் வர்ற மாதிரி தெரியல.
Dark சீரிஸ்க்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா ? அதை பார்த்தால் தான் இது புரியுமா ?
எந்த சம்பந்தமும் இல்லை. நேரடியாக இந்த சீரிஸ் பாக்கலாம்.
என்ன Genre?
இது Drama, History & Sci-Fi வகையில் வரும். லைட்டா ஹாரர் உண்டு.
இப்ப சீரிஸ் பத்தி பாக்கலாம்.
1899 வது வருஷம் Kerberos என்று ஒரு கப்பல் 1500 பயணிகளுடன் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா கெளம்புது.
இந்த கப்பல்ல பல நாடுகள் மற்றும் மொழிகள் பேசுற மக்கள் பயணம் செய்யுறாங்க. இதுல ஒரு குறிப்பிட்ட சில நபர்ளை சுற்றி நகர்கிறது இந்த தொடர்.
சாதாரணமாக போய்க்கொண்டு இருக்கிறது பயணம். இந்த சமயத்தில் 4 மாதங்களுக்கு முன்னாடி1500 பயணிகளுடன் திடீரென மாயமான ஒரு கப்பலில் இருந்து சிக்னல் வருகிறது.
கப்பல் கேப்டன் யாராவது உயிருடன் இருந்தால் காப்பாற்றலாம் என கப்பலை திருப்பி அந்த சிக்னல் வந்து திசையை நோக்கி திரும்புகிறார்.
அந்த கப்பலில் ஒருத்தர் கூட உயிருடன் இல்லாத நிலையில் ஒரே ஒரு சிறுவனை மட்டும் மீட்டு வருகிறார்கள்.
இந்த பையன் வந்த உடனே கப்பலில் பல அமானுஷ்யமான மற்றும் விசித்திரமான விஷயங்கள் நடக்கிறது.
ஏன் இப்படி நடக்குது ? யார் அந்த சிறுவன் ? அந்த கப்பலில் இருந்தவர்கள் எங்கே? 4 மாசமா அந்த கப்பல் எங்க இருந்தது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்ல முயற்சி செய்கிறது இந்த தொடர்.
முதல் மூன்று எபிசோட்கள் கப்பலில் இருப்பவர்களை போல நமக்கும் எதுவுமே புரியவில்லை.
ஒரு இடத்துல இருப்பானுக கட் பண்ணுனா வேற எடத்துல இருப்பானுக. திடீர்னு தூங்கி எந்திரிச்சு கண்ணை முழிச்சா சம்பந்தமே இல்லாமல் வேற எடத்துல இருப்பானுக.
ஆனா 4 வது எபிசோட்க்கு மேல கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் கனெக்ட் பண்ணுவாங்க. அருமையான கதை சொல்லும் விதம்.
அடுத்த அடுத்த எபிசோட்களில் ஒரளவு புரியுற மாதிரியும் இருக்கும் புரியாத மாதிரியும் இருக்கும் 😂
இதற்கு எல்லாம் கடைசி எபிசோடில் ஓரளவு தெளிவு படுத்தி பக்கா ட்விஸ்ட்டோட எதிர்பாராத விதமான க்ளைமாக்ஸ் மற்றும் இரண்டாவது சீசனுக்கான லீட்.
டெக்னிக்கல்லா ரொம்பவே தரமான சீரிஸ், நடிப்பும் சூப்பர். இன்னும் கொஞ்சம் வேகமாக நகர்த்தி இருக்கலாம் என தோணும்.
ஆனால் இந்த தொடரை உருவாக்கியவர்கள் தனித்துவம் ஸ்லோ பர்னர் தான்.
எல்லாருக்கும் பிடிக்காது. நான் பார்த்தே தீருவேன் என்பவர்கள் 3 எபிசோட் தாண்டுனா பார்த்து முடிச்சுருலாம்.
கண்டிப்பாக பார்க்கலாம் 👍
கருத்துகள்
கருத்துரையிடுக