Super Dark Times Tamil Review
High School ல் படிக்கும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். இருவருக்கும் ஒரே பெண் மீது கண். எதிர்பாராத ஒரு சம்பவம் இவர்களின் வாழ்க்கையை மாற்றுகிறது.
IMDb 6.6
Tamil dub ❌
OTT ❌
அது என்ன? அதை எப்படி சமாளித்தார்கள் என்பதை கொஞ்சம் ஹாரர் கலந்து சொல்லும் படம்.
கண்டிப்பாக பார்க்கலாம் 👍
படம் நடப்பது 1990 களில் .. இரண்டு சிறுவயது நண்பர்கள் ஜாலியாக சுற்றுகிறார்கள். ஒரு நாள் இரண்டு சின்ன பசங்க கூட சேர்ந்து விளையாடுகிறார்கள். அப்போது நடக்கும் ஒரு விபத்தில் சின்ன பையன் இறந்து விடுகிறான்.
அதனைமறைத்து விட்டு அவர் அவர் வீட்டுக்கு ஓடி விடுகிறார்கள். இதற்கு பிறகு இரண்டு நண்பர்களும் இந்த சம்பவத்தின் தாக்கத்தை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை படத்தில் பாருங்கள்.
படம் மெதுவாக ஆரம்பிக்கிறது .. மெதுவாகவே நகர்கிறது.. ஆனால் கடைசி அரைமணி நேரம் நல்லா இருந்தது.
படத்தின் லொக்கேஷன்கள் , செட்டிங்குகள், கேமரா எல்லாம் அருமை. ஒரு மாதிரி டார்க்கான மூடில் செல்கிறது படம்.
நல்ல ஒரு க்ரைம் ஹாரர் த்ரில்லர்.. கண்டிப்பாக பார்க்கலாம் 👍
கருத்துகள்
கருத்துரையிடுக