ஏப்ரலில் X என்ற Sex+Slasher படம் வெளிவந்து நல்லா ஓடியது. அதில் வரும் கொலைகார பாட்டியின் Origin கதை தான் இந்த ஹாரரர் படம்.
அந்த பாட்டி யாரு ? ஏன் இப்படி கொடூரமா கொலை பண்ணுது? சிம்பிளா சைக்கோ உருவானது எப்படி என்று சொல்லும் படம்.
IMDb 7.4
Tamil dub ❌
OTT ❌
X படம் நடப்பது 1980 வருடத்தில். இந்த படம் பின்னோக்கி 1918 க்கு போகிறது. அதாவது Pearl ன் இளமைக்காலம்.
ஒரு பண்ணையில் அம்மா மற்றும் நடைபிணமாக இருக்கும் அப்பாவுடன் வசிக்கும் இளம்பெண் Pearl.
அந்த பண்ணையில் இருந்து வெளியே போக வேண்டும், டான்சர் ஆக வேண்டும் என்பது அவளின் கனவு.
பெரிய கனவுகளுடன் வெளியே சென்று விடலாம் என திருமணம் செய்கிறாள். ஆனால் இராணுவ வீரனான கணவன் அவளை அங்கேயே விட்டுவிட்டு போருக்கு சென்று விடுகிறான்.
மிக மிக ஸ்ட்ரிக்டான அம்மா, உடல் தேவைகள், இயல்பிலேயே சிறு சிறு விலங்குகளை கொல்லும் சைக்கோத்தனம் கொண்ட Pearl ன் மனதில் இந்த சூழ்நிலை பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
இவற்றை எல்லாம் விட ஒரு பெரிய ஏமாற்றம் வர வெறி கொண்டு கிளம்ப பிணமாக விழுகிறது.
அது என்ன ஏமாற்றம், யார் எல்லாம் இதற்கு பழியானார்கள் என்பதை படத்தில் பாருங்கள்.
இந்த படம் ஹீரோயின் ஒருவரையே சுற்றி வருகிறது.
படம் மெதுவாக ஆரம்பித்து மெதுவாகவே செல்கிறது. கடைசி அரைமணி நேரம் ரத்த்களரி.
X படம் அதனுடைய மேக்கிங்காகவே ஓடியது. அதில் ஹீரோயின் மற்றும் பாட்டி என இரண்டு ரோல்களில் கலக்கி இருப்பார் Mia Goth.
அவர்தான் இந்த படத்தின் ஹீரோயின். இந்த படத்தில் நடிப்பில் கலக்கி இருக்கிறார். அதுவும் அந்த கடைசி Frame super 👍
X படத்தில் வந்த பண்ணை வீடு, அந்த பெரிய முதலை என எல்லாமே இதில் இருக்கிறது.
கொஞ்சம் ஸ்லோவான படம் ..எனக்கு ரொம்பவே பிடித்து இருந்தது.
கண்டிப்பாக பார்க்கலாம் 👍
கருத்துகள்
கருத்துரையிடுக