Grimcutty Tamil Review
ஒரு சர்ப்ரைஸ்க்காக ரிவ்யூ எதுவும் பாக்காம சில படங்களை பார்ப்பது உண்டு. இன்னிக்கு Hulu ல வெளியாகி உள்ள ஹாரர் படம் இது.
இன்டெர்நெட்ல வரும் ஒரு கொலைகார கேரக்டர் உயிரோட வந்து கொலை பண்ணுது.
ஹீரோயின் & குடும்பம் எப்படி தப்பிச்சது என்பது தான் படம்.
High School படிக்கும் ஹீரோயின். ஊருக்குள் இன்டெர்நெட் ஆன்லைன் சேலஞ்ச் மற்றும் ஏனென்று தெரியாத காரணத்தால் சிறுவர்கள் தற்கொலை செய்கின்றனர் அல்லது மற்றவர்களை கொல்கிறார்கள்.
இதனை தடுக்க ஹீரோயினிடம் இருந்து மொபைலை பிடுங்கி விடுகிறார்கள் இவளது பெற்றோர்கள்.
ஆனாலும் அந்த பேய் ஹீரோயினை கொல்ல வருகிறது. அந்த பேய் எங்க இருந்து வருது ? ஹீரோயின் அதை எப்படி தடுத்து தன்னை காப்பாற்றிக் கொண்டு குடும்பத்தையும் காப்பாற்றினாள் என்பது தான் படம்.
ரொம்பவே ஆவரேஜான படம். அந்த பேய் கேரக்டர் இன்னும் கொஞ்சம் பயப்படும் படி பண்ணிருக்கலாம். பேய் படங்கள் அதிகமாக பார்க்காத எனக்கே பயம் வரல.
பாஸிடிவ் என்று பார்த்தால் குழந்தைகளை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற மெஸேஜ் சொல்கிறது. அது போக இந்த பேய் எப்படி டார்கெட் பண்ணுது என்ற சஸ்பென்ஸ் பரவாயில்லை.
மற்றபடி படம் ok ரகம்.
கருத்துகள்
கருத்துரையிடுக