Gold Investment Ideas
பல்வேறு Gold Investment சாய்ஸ்கள்..
நிறைய பேர் DM ல Gold Investment பத்தி கேட்டீங்க.
1. வயசு 30 க்குள்ள இருந்தா Gold Investment பண்ணாம ஸ்டாக்ல போடுங்க.
2. SGB - பாதுகாப்பான ஒன்று.8 வருடம் பிக்சடு.. 2.5% வட்டி + தங்க விலைக்கு ஏற்ப லாபம்.
3. GOLDETF - நல்ல ஆப்சன். ஆனால் டீமாட் அக்கௌன்ட் வேணும்.
4. Gold Based Mutual Funds - இதுவும் நல்ல ஆப்சன் தான். கண்டிப்பாக இனவெஸ்ட் பண்ணலாம்.
5. Digital Gold - Gpay மூலமாக கூட வாங்கலாம் ஆனா அதுக்கு சர்வீஸ் சார்ஜ் எல்லாம் போட்டு விலையை ஏத்தி வைச்சு இருப்பானுக. ஆனால் நீங்க தங்ககாசுகளாக டெலிவரி பெறலாம்.
6. நகை சீட்டு -நகையாக வேண்டும் என்றால் இந்த ஆப்சன் நல்லது. இப்பதான் ஆரம்பித்து இருக்கேன்..பார்த்துட்டு சொல்றேன்.
மொத்தமா கொண்டு போய் தங்கத்தில் போடாதீர்கள். இது ஒரு வகையான இன்வெஸ்ட்மென்ட் மட்டுமே.
எனக்கு தெரிஞ்ச ஆப்சன்கள் இது.. வேறு ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க 👇
My investment priority order :
1. Stocks
2.ETF
3. MFs
4. SGB & Bonds
5. Gold Chit
உங்களுடைய வயது, எவ்வளவு ரிஸ்க் எடும்பீங்க, வருமானம் போன்றவற்றை பொறுத்து மாறுபடும்.அதனால் நீங்க தான் இந்த வரிசை மற்றும் ஒவ்வொன்றிலும் எவ்வளவு இன்வெஸ்ட் செய்யனும் என்று முடிவு எடுக்கனும்.
கருத்துகள்
கருத்துரையிடுக