The Time Machine - 2002 - Movie Review In Tamil
வாழ்க்கையில் பார்த்த முதல் டைம் மிஷின் படம் இது. லவ்வர் இறப்பதை தடுக்க டைம் மிஷின் கண்டுபிடிக்கும் ஒருவனின் கதை தான் இந்த படம்.
IMDb 5.9
Tamil dub ✅
OTT ❌
படம் சுமாரான ரேட்டிங் தான் ஆனா எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது.
19 வந்து நூற்றாண்டில் நடக்கும் கதை. திறமையான ஆசிரியர் நம்ம ஹீரோ. காதலியிடம் காதலை சொல்லி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குன அன்னிக்கு நடந்த ஒரு சம்பவத்தில் ஹீரோயின் இறந்து விடுகிறார்.
ஏற்கனவே டைம் மிஷின் மேல் ஆர்வம் கொண்ட ஹீரோ காதலியின் இறப்பு சம்பவத்தை மாற்ற வேண்டி கடுமையாக உழைத்து ஒரு மிஷினை உருவாக்குகிறான்.
ஆனால் ஒரு கட்டத்தில் 8000 நூற்றாண்டுகள் முன்னோக்கி சென்று விடுகிறான். அங்கே மனித இனம் இரு பிரிவுகளாக பிரிந்து ஒரு குரூப் தரைக்கு அடியில் கொடூரமாக வாழ்ந்து கொண்டு மேலே உள்ள இன்னொரு குரூப்பை அடித்து சாப்டுட்டு இருக்கு.
அங்கு ஒரு பெண்ணுடன் நட்பாக பழகுகிறான் . அவள் குடும்பத்துக்கு ஆபத்து வருகிறது. அவளை வில்லன் மனித குரூப் பிடித்துக்கொண்டு போக அவளை ஹீரோ எப்படி காப்பாற்றினான் என்பதை படத்தில் பாருங்கள்.
15 வருஷத்துக்கு முன்னாடி தியேட்டர்ல பார்த்தேன். அப்ப எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது.
கிராபிக்ஸ் எல்லாம் ஆவரேஜா தான் இருக்கும்.
ஆனால் ஒரு தடவ பாக்கலாம் ..
கருத்துகள்
கருத்துரையிடுக