Real Steel - 2011 Movie Review In Tamil
எதிர்காலத்தில் ரோபோக்களை வைத்து போட்டி சண்டைகள் நடத்தும் காலகட்டத்தில் நடக்கும் கதை.
IMDb 7
Tamil dub ✅
Available @Sonyliv
அப்பாவும் மகனும் குப்பையில் கிடைத்த பழைய ரோபாட்டை உபயோகித்து எப்படி World Champion ஆனார்கள் என்பதை சொல்லும் படம்.
இந்த படம் ஏதோ ஒரு சேனல்ல எப்ப பார்த்தாலும் போட்டுட்டு இருப்பாங்க. நல்ல படம் கண்டிப்பா குடும்பத்துடன் பாக்கலாம்.
ஹீரோ High Jackman (The Prestige, Prisoners) ஒரு முன்னாள் பாக்சர். ஒரு போட்டியில் அவரது ரோபோ அடித்து துவைக்கப்படுகிறது.
வேறு ரோபோ வாங்க காசு இல்லாத நிலையில் குப்பையில் ஒரு ரோபோவை கண்டுபிடிக்கிறான் மகன்.
ஹீரோவுக்கு இந்த ரோபோவை உபயோகிக்க பிடிக்காவிட்டாலும் மகனின் தொந்தரவு தாங்காமல் சரி என ஒத்துக்கொண்டு அதை சரி பண்ணுகிறார்கள்.
இந்த ரோபோட்டில் Shadow Function என்ற ஒரு சிறப்பு அம்சம் இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். இந்த ரோபோவுக்கு எதிர் பக்கத்தில் நின்று எதை செய்தாலும் அதை ரோபோ அப்படியே திரும்ப பண்ணும்.
இந்த பழைய ரோபோவை வைத்துக்கொண்டு World Champion போட்டியில் கலந்து கொள்கிறார்கள். இதில் வெல்ல வேண்டும் என்றால் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த Zeus எனும் ரோபோவை வீழ்த்த வேண்டும். வென்றார்களா என்பதை படத்தில் பாருங்கள்.
ரோபோ ஃபைட் எல்லாம் அருமையா எடுத்து இருப்பார்கள். ரோபோ மற்றும் பையன் வரும் காட்சிகள் நல்லா இருக்கும்.
க்ளைமாக்ஸ் பக்கா 🙌
கண்டிப்பா பாக்க வேண்டிய நல்ல டைம் பாஸ் படம்.
கருத்துகள்
கருத்துரையிடுக