முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Memories Of Murder-2003

Memories Of Murder Korean Movie Review In Tamil 


இதுவரை வெளிவந்த கொரிய படங்களில் டாப் 5 எடுத்தா இந்த படம் கண்டிப்பாக அந்த லிஸட்ல இருக்கும். Oscar வாங்குன Parasite பட இயக்குனர் Bong Joon Ho படைப்பில் வந்த ஒரு Crime Investigation Thriller படம். 

IMDb 8.1
Tamil dub ❌
OTT ❌

Hollywood movie tamil, tamil Hollywood, Hollywood padam tamil, korean movie tamil, tamil korean, Hollywood movie review in tamil , korean movie review
இது உண்மையான சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். கொரியன் போலீஸ் வரலாற்றில் அதிகாரப்பூர்வமாக பதியப்பட்ட முதல் சீரியல் கில்லர் கேஸ் இதுதானாம் 

சின்ன ஊரில் ஒரு  தடயம் கூட விடாமல் இளம்பெண்களை வரிசையாக கொல்லும் ஒரு சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.‌

Hollywood movie tamil, tamil Hollywood, Hollywood padam tamil, korean movie tamil, tamil korean, Hollywood movie review in tamil , korean movie review
படம் நடக்கும் வருடம் 1986. ஹீரோ அந்த ஊரில் போலீஸாக இருக்கிறார். துப்பறியும் திறமைகள் மற்றும் பெரிய டெக்னாலஜி எதுவும் இல்லாததால் ரவுடிசம் பண்ணிட்டு சுத்துறார்

இந்த நிலையில் கொடூரமான கொலைகள் நடக்க ஆரம்பிக்கிறது. இதுவரை இப்படிப்பட்ட கொடூரமான கொலைகளை விசாரணை செய்து பழக்கம் இல்லாததால் ஹீரோ தடுமாறுகிறார்.சந்தேகப்படும் ஆட்களை பிடித்து  அடித்து உதைத்து குற்றவாளி என ஸ்டேட்மெண்ட் வாங்குகிறார். 

இவருக்கு உதவ இன்னொரு போலீஸ் சிட்டியில் இருந்து வருகிறார்.இருவருக்கும் ஆரம்பத்தில் ஒத்து போகாமல் இருந்தாலும் கொலையாளியை பிடிக்க‌இணைந்து செயல்படுகிறார்கள். 

கடைசியில் கொலையாளியை பிடித்தார்களா என்பதை படத்தில் பாருங்கள். 

படத்தின் ஒரு பெரிய ப்ளஸ் இயல்பாக எடுத்த விதம். ஆரம்பத்தில் கொஞ்சம் காமெடியாக நகரும் படம் கொஞ்சம் கொஞ்சமாக டார்க்காக போகிறது.

படத்தோட அந்த டென்ஷனை நம்மையும் உணர வைத்து இருப்பார் இயக்குனர். குறிப்பாக இரண்டு பெண்களை சீரியல் கில்லர்  ஒழிந்து  இருந்து பார்க்கும் காட்சிகள்.

அதுவும் ஒரு சின்ன சரிவில் புதிதாக வந்த போலீஸை நம்ம ஹீரோ ஜம்ப் பண்ணி ஒரு கிக் விடுவாரு பாருங்க அது எல்லாம் அவ்வளவு இயல்பா இருக்கும்.  விசாரணையின் போது ஒரு மிதி இருக்கும் 😂

இன்னொரு முக்கியமான விஷயம். பிண்ணனி இசை. அதுவும் ஒருத்தனை சந்தேகப்பட்டு விரட்டு போது திடீரென ஆரம்பிக்கும் இசை செம் மிரட்டல்.

Hollywood movie tamil, tamil Hollywood, Hollywood padam tamil, korean movie tamil, tamil korean, Hollywood movie review in tamil , korean movie review


அடுத்து லொகேஷன்கள் ... வயல், சுரங்கம்,மழை , ரயில்வே ட்ராக் என பக்காவான நிறைய லொகேஷன்கள்.‌ அதுவும் கடைசியாக படம் முடியும் அந்த சுரங்கப்பாதையில் வரும் ஷாட் சிறப்பு ❤️❤️
Hollywood movie tamil, tamil Hollywood, Hollywood padam tamil, korean movie tamil, tamil korean, Hollywood movie review in tamil , korean movie review
க்ளைமாக்ஸ் நிறைய பேருக்கு பிடிக்காமல் போகலாம். 

தரமான படம் ... Bong Joon Ho வின் மாஸ்டர் பீஸ் இது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014)

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014) Tamil Review  இது பிரபல நாயகன் டாம் ஃகுரூஸ் (Tom Cruise) மற்றும் எமிலி (Emily Blunt) இணைந்து நடித்த டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வித்தியாசமான படம். ஏலியன்கள் பூமியை கைப்பற்ற போர் தொடுக்கின்றன. மிகவும் புத்திசாலித்தனமான இருப்பதால் மனித இனத்தால் தாக்கு பிடிக்க முடியாமல் பெருத்த அளவில் உயிர் சேதங்கள் ஏற்படுகின்றது. இந்நிலையில் உள்குத்து அரசியல் காரணங்களால் இது வரை போர்களமே கண்டிராத டாம் க்ரூஸ் நேராக போருக்கு அனுப்பப்படுகிறார். ஐந்து நிமிடங்களில் ஏலியனால் கொல்லப்பட்டு இறந்து விடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக டைம் லூப்பில் மாட்டிக் கொள்கிறார். எழும் போது போர்களத்தில் எழுகிறார் சண்டை போடுகிறார் மறுபடியும் இறந்து போகிறார். ஒவ்வொரு சுழற்சியின் போதும் புதிதாக சண்டை நுணுக்கங்களை கற்று படத்தில் ராணுவ வீரராக வரும் நாயகியுடன் இணைந்து ஏலியன் தலைவன் ஆன ஆல்ஃபா வை வீழ்த்தி மனித இனத்தை காப்பாற்றினார்களா என்பதே முடிவு. மிகவும் புதிதான கதையம்சம் மற்றும் இயக்கம். போர் காட்சிகள் சிறப்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக ‌பார்க்க வேண்டி

Suzhal - The Vortex - 2022

Suzhal - The Vortex - Tamil Series Review  விக்ரம் வேதா பட புகழ் புஷ்கர் - காயத்ரி உருவாக்கத்தில் கதிர் , ஐஸ்வர்யா ராஜேஸ்,ஸ்ரியா ரெட்டி மற்றும் பார்த்திபன் நடிபபில் Amazon Prime -ல் வெளிவந்துள்ள Crime Investigation Thriller .  IMDb 8.7 Tamil ✅ 1 Season , 8 Episode OTT Amazon Prime அழகான மலைப்பிரதேசத்தில் உள்ள ஒரு சின்ன ஊர் சாம்பலூர். இந்த ஊரின் வாழ்வாதாரம் அங்கு உள்ள சிமெண்ட் தொழிற்சாலை.  அந்த தொழிற்சாலையின் யூனியன் லீடர் சண்முகம் ( பார்த்திபன்) அவரின் மூத்த மகள் நந்தினி (ஐஸ்வர்யா ராஜேஷ்) . ஊரின் இன்ஸ்பெக்டர் ரெஜினா  (ஸ்ரியா) மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சக்கரை (கதிர்) .  ஊரில் ரொம்ப பிரபல திருவிழாவான 9 நாட்கள் நடைபெறும் மயான‌ கொள்ளை திருவிழாவை கொண்டாட ஊர்மக்கள் ரெடியாகிறார்கள்.  திருவிழாவின் முதல் நாள் அன்று இரவு இரண்டு சம்பவங்கள் நடக்கின்றன. சிமெண்ட் ஆலை தீப்பற்றி எரிகிறது மற்றும் அதே நாளில் சண்முகத்தின் இளைய மகள் நிலா காணமல் போகிறார்.  இரண்டு கேஸ் களையும் விசாரிக்க ஆரம்பிக்கும் ரெஜினா மற்றும் சக்கரை யார் குற்றவாளி என்பதை கண்டுபிடித்தார்களா என்பதை தரமான பல ட்விஸ்ட்களுடன் சொல்கிறது தொடர்.