1825 களில் பிரிட்டிஷ் ஆதிக்க ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஒரு பழிவாங்கும் கதை.
IMDb 7.3
Tamil dub ❌
Violent Content
தனது கணவன் மற்றும் குழந்தையை கொன்றவர்களை பழிவாங்க அடர்ந்த காட்டுக்குள் பயணம் செய்யும் பெண்ணின் கதையை சொல்லும் படம்.
Irish பெண்ணான Clare குற்றம் சாட்டப்பட்டு விடுவிக்க பட்டவர். கணவன் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார்.
இவர் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்றால் அவளுடைய அதிகாரி விடுதலை லெட்டர் தர வேண்டும். ஆனால் அந்த கடிதத்தை கொடுக்காமல் பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறான் .
ஒரு நாள் இவளின் கணவன் இதை கேட்க போக கைகலப்பு ஆகி மூன்று வீரர்களும் சேர்ந்து கணவன் மற்றும் குழந்தையை கொன்றுவிட்டு இவளை கொடூரமாக கற்பழித்து விட்டு சென்று விடுகிறார்கள்.
வில்லன் குரூப் ஒரு முக்கிய வேலை காரணமாக அடர்ந்த காட்டுப் பகுதியை கடந்து செல்ல வேண்டி உள்ளது. Clare இவர்களை பழிவாங்க காட்டை பற்றி நன்கு தெரிந்த பூர்வகுடி இளைஞனான Billy உதவியுடன் வில்லன் குரூப்பை பழிவாங்க கிளம்புகிறாள் .
இவர்களை பழிவாங்கினாளா என்பதை படத்தில் பாருங்கள்.
பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் பெண்கள், கருப்பினத்தவர்கள் மற்றும் பூர்வகுடி மக்களை எவ்வளவு கொடூரமான முறையில் நடத்தினார்கள் என்பதை படத்தில் சொல்கிறார் பெண் இயக்குனரான Jennifer Kent . இவரின் மற்றொரு ஹாரர் படமான Babadook நன்றாக இருக்கும்.
ஹீரோயின் Aisling Franciosi அருமையாக நடித்து இருக்கிறார். எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு என்று தேடி பார்த்தால் GOT ல Lynna Stark ஆக நடித்து இருக்கிறார்.
பழங்குடி இளைஞனாக வருபவரும் சிறப்பான நடிப்பு. வில்லன் கொடூரமான நடிப்பு.
மற்றபடி நீளமான படம் ஆனால் ரொம்ப bore அடிக்கவில்லை. வன்முறை மற்றும் கற்பழிப்பு காட்சிகள் ரொம்பவே அதிகம்.
Watch Trailer:
கருத்துகள்
கருத்துரையிடுக