The NorthMan Tamil Review
AD 895 களில் நடக்கும் ஒரு பழிவாங்கும் கதை தான் இந்த படம். இயக்குனர் Robert Eggers (The VVitch: A New-England Folktale - 2015) இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்.
IMDb 7.7
Tamil dub ❌
OTT ❌
ராஜாவான அப்பாவை கொன்று விடுகிறான் அவருடைய தம்பி. இதை பார்த்த சிறுவனான இளவரசனை கொல்ல ஆணையிடுகிறான். ஆனால் இளவரசர் தப்பித்து பல வருடங்களுக்கு பின் தந்தை சாவுக்கு பழிவாங்கும் கதை.
சாதாரண கதை தான் ஆனால் மேக்கிங் பிரம்மாண்டமாக இருக்கிறது. அந்த காலத்து செட்டிங்குகள், லொக்கேஷன்கள் மற்றும் அது காட்சிப்படுத்தப்பட்ட விதம் கொள்ளை அழகு.
பழைய காலத்தில் நடக்கும் கதை என்பதால் மாயம் மந்திரம் , குரளி வித்தை என எங்கும் நிறைந்திருக்கிறது.
படத்தின் ஹீரோயின் ஒரு சின்ன ரோலில் வருகிறார். மற்றபடி படம் பெரிதாக இருந்தாலும் ரொம்ப போர் அடிக்கவில்லை.
சாதாரண பழிவாங்கும் கதை ஆனால் எடுத்த விதம் அருமை.
கண்டிப்பாக பார்க்கலாம் 👍👍
கருத்துகள்
கருத்துரையிடுக