இது ஒரு ஏலியன் Sci Fi + Romantic படம்.
வேற கிரகத்துக்கு ஆராய்ச்சி பண்ண போன ஒரு விண்கலம் அமெரிக்கா - மெக்சிகோ பார்டரில் விழ அதிலிருந்து ஏலியன்கள் பரவ ஆரம்பிக்கிறது.
அந்த ஏரியா முழுவது சீல் செய்யப்படுகிறது. இதில் மெக்சிகோ பகுதியில் சிக்கிக் கொண்ட ஹீரோயினை மீட்கும் பொறுப்பு ஹீரோவின் தலையில் விழுகிறது.
48 மணி நேரத்தில் அந்த ஏரியாவில் இருந்து வெளியேற வில்லை என்றால் ஏலியன்களின் தாக்குதல் அதிகரிக்கும் என்ற நிலையில் இருவரும் தப்பித்தார்களா என்பதை படத்தில் பாருங்கள்.
இந்த படத்தை ரோட் ட்ரிப் மூவியிலும் சேர்க்கலாம். இந்த பயணத்தில் இருவரும் நண்பர்களாகி பின்பு காதல் என்று போகிறது.
ஏலியன்கள் ரொம்ப நேரம் எல்லாம் வராது. பரபரவென போகும் படம் இல்லை. கொஞ்சம் மெதுவாக தான் நகரும்.
கண்டிப்பாக பார்க்கலாம் 👍👍
Director: Gareth Edwards
Cast: Scoot McNairy, Whitney Able
Screenplay: Gareth Edwards
Cinematography: Gareth Edwards
Music: Jon Hopkins
கருத்துகள்
கருத்துரையிடுக