ஒரு சைக்காலஜிகல் திரில்லர் படம்.
கூர்மன் என்றால் அடுத்தவரின் மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர் என்று அர்த்தமாம். நம்ம Mentalist Patrick Jane மாதிரி.
படத்தின் ஹீரோ தான் கூர்மன்.
ஹீரோ ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி. சில பிரச்சினைகளால் ஊருக்கு வெளிப்புறமாக ஒரு பண்ணை வீட்டில் ஒரு வேலைக்காரன் மற்றும் தான் வளர்க்கும் நாயுடன் வாழ்ந்து வருகிறார்.
போலீஸ் உயர் அதிகாரி நரேன் சில கடினமான கேஸ்களில் உண்மையை வரவழைக்க குற்றவாளிகளை இவனிடம் அனுப்புகிறார்.
ஒரு முறை குற்றவாளி ஒருவன் தப்பி ஓடி விட அதனால் வரும் பிரச்சினைகளுடன் ஹீரோ ஏன் இந்த நிலைக்கு ஆளானார் என சொல்கிறது படம்.
ஹீரோ நிறைவாக நடித்து உள்ளார்.
ஹீரோயினாக ஜனனி ஐயர் .ஹீரோவின் imaginary கதாபாத்திரத்தில் வருகிறார். ஒரு சில நேரங்களில் Maeve Wiley மாதிரி தெரிகிறார் 😏
வேலைக்காரனாக பால சரவணன் மற்றும் போலீஸ் அதிகாரியாக ஆடுகளம் நரேன் நடித்து உள்ளார். சுப்பு என்கிற நாய் கதாபாத்திரமும் படம் முழுவதும் வருகிறது.
பெண் வன்கொடுமை தான் முக்கியமான விஷயம் என்றாலும் அதை ரொம்பவே மேலோட்டமாக அணுகி உள்ளனர் . திரைக்கதை இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்து இருக்கலாம்.
மற்றபடி கேமரா , பிண்ணனி இசை, லொக்கேஷன்கள் சிறப்பு
தமிழ் சினிமாவில் ஒரு நல்ல முயற்சி கண்டிப்பாக பார்க்கலாம் 👍👍
இயக்கம் - பிரையன் பி ஜார்ஜ்
இசை - டோனி பிரிட்டோ
நடிப்பு - ராஜாஜி, ஜனனி ஐயர், பால சரவணன்
நீளம் - 1 மணி நேரம் 56 நிமிடம்
கருத்துகள்
கருத்துரையிடுக