ஒரு ஹிந்தி & தமிழ் சண்டை ட்வீட்ல ஹிந்தில ப்ரோக்ராம் எழுத முடியுமானு கிழிச்சுட்டு இருந்தாரு.
சரி மற்ற மொழிகளை விட்டு விடுவோம். கணிப்பொறியில் தமிழ் எந்த அளவு இருக்கு என்று பாக்கலாம். கணிப்பொறியில் தமிழ் என்றால் தமிழ் வெப்சைட்டுகள், தமிழ் மொழியில் ஆஃப்கள் தமிழக அரசு தகவல்கள் கேட்கும் ஃபார்ம்கள் தமிழில் இருப்பது பற்றி கிடையாது.
1. ஒரு நல்ல தமிழ் தெரிந்த பையனுக்கு ஆனால் ஆங்கிலத்தை புரிந்து கொள்ள கஷ்டப்படும் ஒரு மாணவனுக்கு என்னால் தமிழில் ப்ரோகிராமிங் சொல்லித்தர இயலுமா ?
உதாரணமாக:
If (i>5) {
i++
}
என்பதை தமிழில்
ஆனால் (ஐ > 5) {
ஐ++
}
மேலும்: else if -> இல்லை ஆனால்
என எழுதி கம்பைல் பண்ணி ரன் பண்ண முடியுமா ?
என்னுடைய பதில் முடியும் என்பது தான்.
இதற்கு ஒருவர் மெனக்கெட்டு "எழில்" என்ற ப்ரோக்ராமிங் லாங்குவேஜயை Python ஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கினார்
இது மாதிரி விஷயங்களை ஊக்குவிக்கும் முயற்சிகள் நடைபெற்றதா ?
அரசு அலுவலகங்கள் , பிரவுசிங் சென்டர்கள் தவிர்த்து வேறு எங்காவது தமிழ் கீ போர்டு பார்த்து இருக்கீங்களா ?
2010 களில் நான் வேலை பார்த்த டச்சு புரோஜக்ட்டில் எல்லா கோடும் டச்சு மொழியில் தான் இருக்கும்.
Google Translator வச்சு தான் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் கீ போர்டு டச்சில் தான் இருக்கும். ஆனால் Technical ல கில்லாடியாக இருப்பார்கள்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால்.. தாய் மொழியில் எளிதாக புரிய வைத்து விடலாம்
IT துறையில் நம்ம ஏற்கனவே நல்லா தான் இருக்கோம். ஆனால் சிறு வயதில் தமிழில் புரிந்து ப்ரோகிராம் எழுதினால் பிற்பகுதியில் கம்பெனிகளில் வேலை பார்க்கும் போது மிகவும் உபயோகமாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
இந்த மாதிரி முயற்சிகள் எனக்கு தெரிந்து அரசுகள் மேற்கொள்ளவில்லை.
அப்படி ஏதாவது முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றால் தெரியப்படுத்தவும் தெரிந்து கொள்கிறேன். தமிழ் ப்ரோக்ராமிங்ல் ஆர்வம் இருந்தால் சொல்லுங்கள் இணைந்து கணிப்பொறி தமிழை வளர்க்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக