ஒரே ரூமுக்குள் நடக்கும் ஹாரர் திரில்லர் இது.
இரண்டு சின்ன குழந்தைகளுடன் வசிக்கும் அம்மா ரூமுக்குள் மாட்டிக்கிறார். வெளியில் தனியாக விடப்பட்ட குழந்தைகளுக்கு ஆபத்து வருகிறது. உள்ளே இருந்து கொண்டு எப்படி அவர்களை காப்பாற்றினார் என்பது தான் படம்.
IMDb 6.4
Tamil dub ❌
OTT ❌
இரு குழந்தைகளின் அம்மாவான Jessica தனது குழந்தைகளுக்காக போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வர முயற்சி செய்கிறார்.
இவளின் கணவன் மற்றும் அவன் நண்பன் இருவரும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள். ஒரு நாள் வாக்குவாதம்
முற்றி Jessica வை ரூமில் அடைத்து விட்டு குழந்தைகளை அப்படியே விட்டு விட்டு போய்விடுகிறார்கள் இருவரும்.
குழந்தைகளை கூட தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கும் அவன் நண்பன் தப்பான நோக்கத்துடன் வீட்டுக்கு வருகிறான். ரூமுக்குள் இருந்த படியே குழந்தைகளை எப்படி காப்பாற்றினார்? வெளியே தப்பித்து வந்தாரா ? என்பதை படத்தில் பாருங்கள்.
நல்ல திரைக்கதை மற்றும் கேமரா ஒர்க். ஒரே ரூம் மற்றும் வீட்டிற்குள் நடக்கும் கதை என்றாலும் போரடிக்காமல் போகிறது. உள்ளே மாட்டிக் கொண்ட ஹீரோயினுக்கு வெளியில் நடக்கும் விஷயங்களை Sound வித்தியாசத்தை வைத்து காட்டுவது நல்ல டெக்னிக்.
ஹீரோயின் மற்றும் அநத குழந்தை நல்ல நடிப்பு. குழந்தைகளை காப்பாற்ற அம்மா என்ன வேணாலும் செய்வார் என்பதை சொல்கிறது படம்.
கண்டிப்பாக பார்க்கலாம் 👍
கருத்துகள்
கருத்துரையிடுக