Hulu வில் வெளிவந்துள்ள ஒரு ஹாரர் சர்வைவல் திரில்லர் படம் .
ஹீரோயினை லவ் பண்றேன் என்று ஏமாத்தி கூட்டிட்டு போய் தனியாக உள்ள வீட்டில் சிறை வைக்கிறான் வில்லன்.
ஏன் அப்படி பண்ணுறான் ? ஹீரோயின் தப்பித்தாளா என்பது தான் படம்.
வித்தியாசமா கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் அப்புறம் தான் டைட்டில் கார்டு போடுறாங்க.
ஹீரோயினுக்கு ஃபேமிலி இல்ல ஒரே ஒரு நண்பி மட்டும் தான்.
யாராவது நல்ல பையனுடன் டேட்டிங் போகனும் என்று App மூலம் முயற்சிக்கும் அவளுக்கு வர்றவங்க எல்லாம் மொக்கையா வர்றாங்க.
சூப்பர் மார்க்கெட்ல ஒரு பையன பார்த்து பிடித்து போக. அவன் கூட வெளியே போக முடிவு செய்கிறாள். ஆனால் வெளிய கூட்டிட்டு போறேன் என்று சொல்லி இவளை தனியாக உள்ள வீட்டில் சிறை வைக்கிறான் அந்த பையன். மேலும் இவளை போல இன்னும் சில பெண்களையும் உள்ள அடச்சு வைச்சு இருக்கான்.
ஏன் அவளை கூட்டிட்டு வந்தேன் என்பதற்கு ஒரு கொடூரமான காரணம் சொல்கிறான். அத சொல்லிட்டா பெரிய ஸ்பாய்லர் ஆகிடும்.
என்ன காரணம்? ஹீரோயின் தப்பித்தாளா ? மற்ற பெண்கள் நிலைமை என்ன என்பதை படத்தில் பாருங்கள்.
படம் ரொம்பவே Sensitive Content மற்றும் Violent ஆன படம். அதனால் பாக்குறதுக்கு முன்னாடி யோசிச்சுக்கோங்க.
Not for everyone 😅
கருத்துகள்
கருத்துரையிடுக