முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Nightmare Alley - 2021

Pan Labyrinth , The Shape Of Water போன்ற வித்தியாசமான படங்களை கொடுத்த Guillermo del Toro இயக்கத்தில் வெளியான படம் இது. 

1940 களில் நடப்பது போன்று எடுக்கப்பட்ட க்ரைம் த்ரில்லர். 
IMDb 7.3
Tamil dub ❌
OTT ❌

ஹீரோ யாரையோ வீட்டோட கொளுத்தி விட்டுட்டு நாடோடியாக திரிந்து ஒரு பொருட்காட்சி கம்பெனியில் வேலைக்கு சேர்கிறான். 

ரொம்பவே திறமையான ஹீரோ மிக விரைவில் அந்த பொருட்காட்சியில் நல்ல பெயரை பெறுகிறான். 

 பிறர் மனதில் இருப்பதை கண்டுபிடிக்கும் ட்ரிக் கை ஒரு தம்பதியிடம் இருந்து கற்றுக் கொள்கிறான்.  அங்க உள்ள ஒரு நல்ல பொண்ணை கரெக்ட் பண்ணி கிளம்பி விடுகிறான். 

சில வருடங்கள் கழித்து தம்பதிகள் இந்த ட்ரிக்கை யூஸ் பண்ணி பணம் சம்பாதிக்கின்றனர். இந்த ட்ரிக்கை ரொம்பவே நிறைய யூஸ் பண்ணி செத்தவங்க கிட்ட பேசறேனு கிளம்புகிளான் ஹீரோ. 

ஒரு பெண் மனோதத்துவ டாக்டர் மூலம் பெரிய லெவல்ல பழக்கம் ஏற்பட . அவர்களிடமும் வேலையை காட்டுகிறார் . அதனால் ஏற்படும் பிரச்சினைகள் வாழ்க்கை ஒரு வட்டம் என ஹீரோக்கு உணர்த்துகிறது. 

2.30 மணி நேர பெரிய படம். 

முதல் பாதி முழுவதும் ஹீரோ, அவருடைய சர்வைவரல் , வளர்ச்சி, காதல்  மற்றும் இன்ன பிற கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறார்கள். 

இரண்டாவது பாதி அப்படியே ட்ராக் மாறுகிறது. முதல் பாதியை விட ரெண்டாவது பாதி கொஞ்சம் வேகமாக நகருது. 

Bradley Cooper தரமான நடிப்பு. Cate Blanchett , Rooney Mara என பக்காவான Casting. 

1940 வருட செட்டிங்ஸ், காஸ்ட்யூம்ஸ் மற்றும் லொக்கேஷன்கள் செம சூப்பர். 

மெதுவான போற படம் தான் ஒரு டைம் பாக்கலாம். 


Nightmare Alley (2021)

An ambitious carny with a talent for manipulating people with a few well-chosen words hooks up with a female psychiatrist who is even more dangerous than he is.

https://www.imdb.com/title/tt7740496/plotsummary?item=po3644569


Directed by: 
Guillermo del Toro

Screenplay by:
Guillermo del Toro
Kim Morgan

Based on:
Nightmare Alley
by William Lindsay Gresham

Produced by:
J. Miles Dale
Guillermo del Toro
Bradley Cooper

Starring: 
Bradley Cooper
Cate Blanchett
Toni Collette
Willem Dafoe
Richard Jenkins
Rooney Mara
Ron Perlman
Mary Steenburgen
David Strathairn


Cinematography: 
Dan Laustsen


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

My Microsoft Azure - AZ 900 Certification Journey.

இது மாதிரி நெறயா ஆர்ட்டிக்கிள் பார்த்து இருப்பீர்கள். ஆனா என்னோட பயணம் இந்த சர்ட்டிபிகேஷன் முடிச்சே ஆகணும் மற்றும் நேரம் குறைவு என்பதால் பரபரப்பாக  படித்தது. அதுனால ரொம்பவே ப்ராக்டிகலா இருக்கும். எல்லாருக்கும் ஒர்க் ஆகுமானு தெரியாதுங்க. அதனால இத அப்படியே எல்லாம் ஃபாலோ பண்ணாதீங்க.  இது நான் உபயோகித்த வழிமுறைகள் மட்டுமே. Just want to share my experience இந்த செப்டம்பர்க்குள்ள ஏதாவது ஒரு சர்ட்டிபிகேஷன் முடிக்க வேண்டும் என கம்பெனியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.  நான் படிச்சுட்டு இருந்தது GCP Exam க்கு.‌ஆனா திடிரென Azure & GCP எதுனாலும் படிக்கலாம் என்று சொல்லிட்டு நிறைய கட கடவென AZ 900 எழுதி பாஸ் ஆகிவிட்டார்கள்.  நான் எழுதுனா GCP தான் எழுதுவேன் என்று உக்காந்து இருந்தேன். ஆனா எனக்கு தெரிந்த கம்பெனி வட்டத்தில் யாரும் GCP எழுதவில்லை . அதனால் நம்பிக்கை கொஞ்சம் கம்மியாகவே இருந்தது.  இதற்கு நடுவில் ஒரு ஜீனியர் பையன் நான் AZ 900  முடிச்சுட்டேன் என்று கால் பண்ணான். எப்படிடா என்றதும் 2 லிங்கை வாட்ஸ்ஆப்பில் அனுப்பினான். இத மட்டும் படிச்சு தான் நான் பாஸ் ஆனேன் என்றான்.  இதற்கு நடுவில் எங்க

The Old Man - Season 1 (2022)

The Old Man Tamil Review - Season 1 இது ஒரு Action, Thriller, Drama Series.  1 Season, 7 Episodes (1 Episode Yet to release) Available @hulu இதுல ஹீரோ 70+ ல இருக்குற ஒரு வயசான தாத்தா (Jeff Bridges). திடிரென ஒரு நாள் ஒருத்தன் அவர கொல்ல வர்றான். இவரு யாரு ? எதுக்கு கொல்ல வர்றாங்க ? என்பதை சொல்கிறது தொடர்.  Dan Chase மனைவி இறந்த நிலையில் 2 நாய்களுடன் தனிமையில் வசிக்கிறார். திடீரென ஒருத்தன் இவரை கொல்ல வருகிறான் நடக்கும் சண்டையில் நாய்கள் உதவியுடன் அவனை கொன்று விடுகிறார்.  அதன் பிறகு வீட்டை காலி பண்ணிட்டு கிளம்புகிறார். அங்கிட்டு பார்த்தால் FBI ல ஒரு மிகப்பெரிய கூட்டமே இவர் தேடிட்டு இருக்கு.  யார் இந்த தாத்தா ? கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவரின் வாழ்க்கை திடீரென கலவர பூமியாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி பயணிக்கிறது படம்.  இவருடைய ஃப்ளாஷ் பேக் நடப்பது ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிப்பு நடந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள். CIA ஏஜன்ட் ஆன இவர் அங்கு உள்ள ஒரு போராட்டக்குழுவுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்கிறான். அங்கு நடந்