Raid, Raid 2 படத்தின் டைரக்டர் + ஹீரோ combo வின் முதல் படம் தான் இது.
செம ஆக்சன் படத்துக்கு ஒரு சின்ன ஸ்டோரிலைன் மற்றும் கொஞ்சம் சென்டிமென்ட் சேர்த்து கொடுத்து இருக்கிறார்கள்.
IMDb 6.7
#Tamil dub ❌
OTT ❌
ஹீரோ Iko Uwais இந்தோனேஷியாவில் ஏதோ ஒரு கிராமத்தில் வசிக்கிறார். Silat தற்காப்பு கலையில் வல்லவரான இவர் சிட்டிக்கு போய் ட்ரைனிங் ஸ்கூல் ஆரம்பிக்கலாம்னு போறாரு.
அங்க போய் ஒரு பொண்ணுக்கும் அவ தப்பிக்கும் உதவி பண்ண போய் ஒரு Human Trafficking gang உடன் உரசல் ஏற்படுகிறது.
அப்பறம் என்ன தனி ஆளாக அந்த பொண்ணை காப்பாற்றுவது அதிரடியான மிச்ச படம்.
முதல் 30 நிமிஷம் படம் மெதுவா போகுது. அதுக்கு அப்புறம் ஃபுல்லா ஆக்சன் சீக்குவென்ஸ் தான்.
Raid படத்தை விட ஆக்சன் நடக்கும் இடங்கள் வெரைட்டி யாக உள்ளது. மொடட மாடி, லிஃப்ட் சண்டை என சிறப்பாக உள்ளது.
கண்டிப்பாக பாருங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக