முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Mutual Fund & Investment Basics - 2

Mutual Fund & Investment Basics - 2


Part - 1

 https://www.tamilhollywoodreviews.com/2021/11/mutual-funds-basics.html


இந்த முறை Direct Mutual Funds வாங்குவது எப்படி என்பதை பற்றிய போஸ்ட் போடலாம் என நினைத்தேன். 

Mutual fund basic in tamil, stock market introduction in tamil, buying stocks , mutual fund directly in tamil, Zerodha Coin App instructions in tamil


ஆனால் மார்க்கெட் மற்றும் அதைப் பற்றிய அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ளாமல் நேரடியாக இன்வெஸ்ட்மென்ட் செய்ய ஆரம்பிப்பது நல்லது கிடையாது. அதுக்கு முன்னாடி கொஞ்சம் அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். 


எப்பவுமே உங்களுடைய Stocks and Mutual Fund unit களை DEMAT அக்கௌன்ட்ல வைப்பது நல்லது. ஆனால் Stocks வாங்கனும்னா கண்டிப்பாக DEMAT account இருக்க வேண்டும். 


Mutual Fund ஆரம்பிக்க DEMAT அக்கௌன்ட் அவசியம் இல்லை ‌. 

ஆனால் நான் Zerodha வில் அக்கௌன்ட் வைத்து உள்ளேன் மற்றும் MF களை அதனுடைய Coin App வழியாக வாங்குவதால் நேரடியாக DEMAT account ல் கிரடிட் ஆகிவிடும். மற்ற ஆஃப்கள் எப்படி என்று தெரியவில்லை.  Clear Tax , PayTM போன்ற App கள் வழியாக MF வாங்க DEMAT account தேவை இல்லை. ஆனால் PAN நம்பர் எந்த வழியில் வாங்கினாலும் கட்டாயம். 


சரி இப்ப சில முக்கியமான வார்த்தைகளை  பார்க்கலாம். 


DEMAT account (Depositories) - இது Stocks சேர்த்து வைக்கிற பேங்க் மாதிரி.ஆனால் எல்லாமே Digital Format தான்.  இதில் Stocks/ MF டெபாசிட் பண்ணலாம் , Withdraw பண்ணலாம். ஆனால் நம்ம internet banking மாதிரி டைரக்டா இதனுடன் தொடர்பு கொள்ள முடியாது. நம்ம நாட்டுல தான் 2 Depository (NSDL & CDSL)  இருக்குனு நினைக்கிறேன். 


Depository Participants: 

இவங்க தான் நமக்கும் , Depositories க்கும் நடுவுல இருப்பாங்க.  DEMAT account ஆரம்பிக்க, அதை maintain பண்ண இவங்கள தான் அணுக வேண்டும். 

நிறைய பேங்குகள், கொஞ்சம் Stocks broker களை  DP எனலாம். 


Exchange: 

இது தான் நம்ம பங்குகளை வாங்க விற்க வழிவகை செய்யும் இடம். BSE, NSE என்று இரண்டு exchange கள் உள்ளன. 


Regulator : 

Exchange ல கொடுக்கல் வாங்கல் எல்லாம் சரியாக நடக்குதா.. எவனாவது ப்ராடு பண்றான ? ப்ராடு பண்ணாம தடுப்பதற்கான வழிமுறைகள் கொடுப்பது .. அதை சரியாக எல்லாரும் பின்பற்றுகிறார்களா என்பதை கண்கொத்தி பாம்பாக கண்காணிப்பது தான் Regulator. நம்ம ரெகுலேட்டர் SEBI . 

Stock Brokers : 

இவங்க மூலமா தான் நம்ம Stocks. வாங்க விற்க முடியும். Zerodha, Sharekhan , ICICI Direct அப்படினு எக்கச்சக்க brokers இருக்காங்க ‌‌ 

நான் ஒரே ஒரு DEMAT account Zerodha வில் வைத்து உள்ளேன். இப்ப எல்லாம் DEMAT account ஆரம்பிப்பது ரொம்பவே ஈஸி. Online மூலமாகவே எளிதில் ஆரம்பிக்கலாம். 

Next thread la Direct MF Zerodha Coin App வழியாக வாங்குவது எப்படினு பார்க்கலாம்.


 
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

My Microsoft Azure - AZ 900 Certification Journey.

இது மாதிரி நெறயா ஆர்ட்டிக்கிள் பார்த்து இருப்பீர்கள். ஆனா என்னோட பயணம் இந்த சர்ட்டிபிகேஷன் முடிச்சே ஆகணும் மற்றும் நேரம் குறைவு என்பதால் பரபரப்பாக  படித்தது. அதுனால ரொம்பவே ப்ராக்டிகலா இருக்கும். எல்லாருக்கும் ஒர்க் ஆகுமானு தெரியாதுங்க. அதனால இத அப்படியே எல்லாம் ஃபாலோ பண்ணாதீங்க.  இது நான் உபயோகித்த வழிமுறைகள் மட்டுமே. Just want to share my experience இந்த செப்டம்பர்க்குள்ள ஏதாவது ஒரு சர்ட்டிபிகேஷன் முடிக்க வேண்டும் என கம்பெனியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.  நான் படிச்சுட்டு இருந்தது GCP Exam க்கு.‌ஆனா திடிரென Azure & GCP எதுனாலும் படிக்கலாம் என்று சொல்லிட்டு நிறைய கட கடவென AZ 900 எழுதி பாஸ் ஆகிவிட்டார்கள்.  நான் எழுதுனா GCP தான் எழுதுவேன் என்று உக்காந்து இருந்தேன். ஆனா எனக்கு தெரிந்த கம்பெனி வட்டத்தில் யாரும் GCP எழுதவில்லை . அதனால் நம்பிக்கை கொஞ்சம் கம்மியாகவே இருந்தது.  இதற்கு நடுவில் ஒரு ஜீனியர் பையன் நான் AZ 900  முடிச்சுட்டேன் என்று கால் பண்ணான். எப்படிடா என்றதும் 2 லிங்கை வாட்ஸ்ஆப்பில் அனுப்பினான். இத மட்டும் படிச்சு தான் நான் பாஸ் ஆனேன் என்றான்.  இதற்கு நடுவில் எங்க

The Old Man - Season 1 (2022)

The Old Man Tamil Review - Season 1 இது ஒரு Action, Thriller, Drama Series.  1 Season, 7 Episodes (1 Episode Yet to release) Available @hulu இதுல ஹீரோ 70+ ல இருக்குற ஒரு வயசான தாத்தா (Jeff Bridges). திடிரென ஒரு நாள் ஒருத்தன் அவர கொல்ல வர்றான். இவரு யாரு ? எதுக்கு கொல்ல வர்றாங்க ? என்பதை சொல்கிறது தொடர்.  Dan Chase மனைவி இறந்த நிலையில் 2 நாய்களுடன் தனிமையில் வசிக்கிறார். திடீரென ஒருத்தன் இவரை கொல்ல வருகிறான் நடக்கும் சண்டையில் நாய்கள் உதவியுடன் அவனை கொன்று விடுகிறார்.  அதன் பிறகு வீட்டை காலி பண்ணிட்டு கிளம்புகிறார். அங்கிட்டு பார்த்தால் FBI ல ஒரு மிகப்பெரிய கூட்டமே இவர் தேடிட்டு இருக்கு.  யார் இந்த தாத்தா ? கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவரின் வாழ்க்கை திடீரென கலவர பூமியாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி பயணிக்கிறது படம்.  இவருடைய ஃப்ளாஷ் பேக் நடப்பது ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிப்பு நடந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள். CIA ஏஜன்ட் ஆன இவர் அங்கு உள்ள ஒரு போராட்டக்குழுவுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்கிறான். அங்கு நடந்