In Bruges Tamil Review
இது ஒரு நேர்த்தியான டார்க் காமெடி திரில்லர்.
காசுக்காக யாரை வேண்டுமானாலும் கொல்பவர் தான் ஹீரோ. அவரோட இன்னொருத்தர் கூட வேலை பார்க்கிறார். இவர்கள் இருவரும் ஒரு சைக்கோ பாஸ்ஸிடம் வேலை பார்க்கிறார்கள்.
IMDb 7.9
தமிழ் டப் இல்லை
லண்டனில் ஹீரோ ஒரு பாதிரியாரை கொல்லும் போது பெரிய தவறு நடந்து விடுகிறது. அதனால் அவர்களின் பாஸ் Bruges நகரில் ஒரு ஹோட்டலில் அடுத்த உத்தரவு வரும் வரை தங்க சொல்கிறார்.
இரண்டு பேரும் ஜாலியா ஊர் சுத்துறாங்க. ஆனா ஹீரோவுக்கு சுத்தமா எதிலும் ஆர்வம் இல்லாமல் இருக்கிறான்.
ஒரு ஷீட்டிங்கில் ஹீரோயினை சந்திக்கிறான் . என்னடா படம் ஃபோர் அடிக்குது என நினைக்கும் போது அவர்களின் பாஸ் போன் பண்ணுகிறார். இதிலிருந்து படம் அப்படியே ட்ராக் மாறுகிறது.
பாஸ் அப்படி என்ன சொன்னார்? கொலையில் நடந்த அந்த பெரிய தவறு என்ன அதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன என்பதை டார்க் காமெடி கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
படம் மெதுவாக தான் போகும். திரைக்கதை படத்துக்கு பெரிய பலம். கொஞ்சம் கேரக்டர்கள் வந்தாலும் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து உள்ளார் இயக்குனர்.
Collin Farrell ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குற்ற உணர்ச்சியுடன் சுத்தும் ஒரு கொலைகாரன் கதாபாத்திரத்தில் பக்காவாக பொருந்தி இருக்கிறார்.
அவருடைய நண்பராக வரும் Brendan Gleeson நிறைவான நடிப்பு.
கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.
Director: Martin McDonagh
Cast: Colin Farrell, Brendan Gleeson, Ralph Fiennes, Clémence Poésy, Jordan Prentice, Thekla Reuten
Screenplay: Martin McDonagh
Cinematography: Eigil Bryld
Music: Carter Burwell
கருத்துகள்
கருத்துரையிடுக