Finch - 2021 Movie Review In Tamil
பெரிய தலை Tom Hanks (The Green Mile , Forrest Gump), Sci Fi ,Post Apocalyptic , Road trip .. இது போதாதா படம் பார்க்க.
Apple TV ல போன வாரம் வெளிவந்த படம் இது.
IMDb 7.0
தமிழ் டப் இல்லை.
படத்துல கதை எல்லாம் பெருசா ஒன்னும் இல்ல. நல்ல ஒரு road trip movie.
ஓசோன் லேயர் மொத்தமா காலி ஆகிறுது. அதனால் சூரிய வெளிச்சம் உடம்பில் பட்டாலே fry ஆகுற அளவுக்கு வெயில். பெரும்பாலான உலகம் அழிந்து விட்ட நிலையில் தப்பித்தவர்களில் Finch ( Tom Hanks ) ஒருவர். அவரும் ஏதோ உயிர் கொல்லி நோயினால் அவதிப்படுகிறார்.
இவருக்கு துணை ஒரு நாய் மற்றும் ஒரு ரோபோ. நாய் மீது பாசத்துடன் உள்ள பெரிய ரோபாடிக் இஞ்சினியர் ஆன Finch தான் இறந்த பின்பு நாய்க்கு துணையாக இருக்க கிடைத்த பொருட்களை வைத்து இன்னொரு அதிநவீன ரோபோ ஒன்றை தயார் செய்கிறார்.
இந்நிலையில் ஒரு பெரிய புயல் அந்த ஏரியாவை தாக்க வருகிறது. அதனால் 4 பேரும் அவருடைய லேப்பை விட்டு விட்டு San Francisco பக்கம் கிளம்புகிறார்கள்.
இந்த பயணத்தில் மனித உணர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொண்டு நாயுடன் பழகி நட்பாக மாறுவதை சொல்வது தான் படம்.
படத்தின் பலம் சந்தேகமே இல்லாமல் Tom Hanks தான். நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார் மனுஷன்.
ஒருத்தர மட்டுமே வைச்சு படம் எடுக்க தைரியம் வேண்டும் நமக்கும் அத பாக்க பொறுமை வேண்டும். தனியாவே ஒரு ஃபுட்பால் வைச்சு இதே மாதிரி படத்தை ஓட்டுன மனுஷன் இவரு அதுனால ரோபோ கூட நடிக்கிறது Hanks க்கு ஒன்னும் பெரிய விஷயம் இல்லை.
ஆரம்பத்தில் முட்டாள் போல உள்ள ரோபோ பண்ணும் சேட்டைகள், அந்த நாய் கொடுக்கும் ரியாக்ஷன்கள் ரசிக்கும் விதமாக உள்ளன.
சில இடங்களில் படம் மெதுவாக சென்றாலும் ரொம்ப ஃபோர் அடிக்கவில்லை.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
Director: Miguel Sapochnik
Starring: Tom Hanks; Caleb Landry Jones
Music by: Gustavo Santaolalla
My Trailer:
கருத்துகள்
கருத்துரையிடுக