ஒரு நல்ல காமெடி ட்ராமா படம்.
மூன்று physically challenged நண்பர்கள் போகும் ஒரு Road Trip பற்றிய படம்.
IMDb 7
Tamil டப் ❌
OTT #Netflix
படத்தோட கான்செப்ட் அடல்ட் கன்டென்ட் .. So 18+ .
Scotty வாழ்க்கை வீல் சேரில் தான். அவனால் தனியாக எதுவுமே செய்ய முடியாது. சாப்பாடு அவனுடைய அம்மா தான் ஊட்டி விட வேண்டும்.
25 வயது ஆகியும் இன்னும் கன்னிப்பையனாக இருக்கிறான்.
Matt - இன்னொரு Physically challenged person.
Mo- கண்பார்வை தெரியாமல் உள்ளவன்.
இவர்கள் மூவரும் ஒரு தெரபி சென்ட்ரில் சந்திக்கிறார்கள்.
Scotty க்கு தன்னைப்போல special persons களுக்காகவே ஒரு Prostitute Center கனடாவில் இருக்கின்றது என தெரிய வருகிறது.
மூன்று பேரும் தங்களுது வீட்டிற்கு தெரியாமல் ப்ளான் பண்ணி ஒரு நாள் கிளம்பி விடுகிறார்கள். இவர்களுக்கு ஏற்ற ஒரு வேன் மற்றும் அதற்கு ட்ரைவர் என செட்டப் செய்து கிளம்புகிறார்கள். போகும் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் அவர்கள் அங்கு போய் சேர்ந்தார்களா என்பதை கலகலப்பாக சொல்லி இருக்கின்றனர்.
Feel Good படத்தில் சேர்க்கலாம் ஆன க்ளைமாக்ஸ் கொஞ்சம் சோகம் தான்.
அடல்ட் காமெடி என்கிற பெயரில் குப்பையாக எடுக்காமல் கொஞ்சம் மெஸேஜூம் சொல்லுகிறார் இயக்குனர்.
மெதுவாக போகும் படம் தான் ஆனால் கண்டிப்பாக பார்க்கலாம்
Starring:
Grant Rosenmeyer, Hayden Szeto, Ravi Patel and Gabourey Sidibe
Director: Richard Wong
Music by: Jeremy Turner
Written by: Erik Linthorst
Kadaisi Nodigal Tamil Review (Forensic) 2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள். IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம். ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம். படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது. கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி. கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer:
கருத்துகள்
கருத்துரையிடுக