நான் நிறைய Zombie படங்களை IMDb வாட்ச்லிஸ்டில் போட்டு வைத்திருந்தேன். அதிலிருந்து சமீபத்தில் பார்க்க முடிந்த படங்களில் இதுவும் ஒன்று.
இதை முழுவதுமாக Zombie படம் என்றும் சொல்ல முடியாது.
IMDb - 6.5
தமிழ் டப் இல்லை.
எப்பவுமே சிட்டியில் நடக்கும் கதைகளை விட சின்ன ஊருக்குள் நடக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் எனக்கு பிடித்த ஒன்று. அது மாதிரி ஒரு படம் தான் இது.
ஒரு சின்ன விவசாய கிராமம் . பேஸ் பால் மேட்ச் நடக்கும் சமயம் ஒருத்தன் கையில் Shot Gun ஓட உள்ள வர்றான். ஹீரோ அந்த ஒரு தலைமை போலீஸ் மற்றும் அவர் அஸிஸ்ட்டன்ட் ரெண்டு பேரும் வார்னிங் கொடுத்தும் வெளியே போகாததால் வேறு வழி இல்லாமல் சுட வேண்டி இருக்கிறது.
இன்னொருத்தன் பொண்டாட்டி பிள்ளைகளை வீட்டுக்குள் போட்டு தீயை வைத்து கொளுத்திக் கொல்கிறான்.
என்ன ஏது என்று விசாரித்து கொண்டு இருக்கும் போதே திடீரென ஒரு ராணுவ வீரர்கள் போன்ற ஒரு கூட்டம் ஊரையே பிடித்துக் கொண்டு போய் தனிமைப் படுத்துகிறது.
ஹீரோவின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். அந்த ஊர் டாக்டரும் இவரே.. Screening ல் Temperature அதிகமாக இருப்பதால் ஹீரோயினை தனியாக ஒரு இடத்தில் தனிமைப் படுத்துகிறது அந்த வீரர்கள் கூட்டம்.
போலீசான ஹீரோ தனது மனைவியை மீட்க கிளம்புகிறார் . அவரது அஸிஸ்ட்டென்ட் அவருக்கு துணைக்கு நானும் வருகிறேன் என்கிறார்.
மனைவியை மீட்டாரா ? இந்த நோய் பரவ காரணம் என்ன ? ராணுவம் ஏன் இவர்களை தனிமைப் படுத்துகிறது ? ஊரில் உள்ள மற்றவர்களின் நிலைமை என்ன போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது படம் .
படம் பரபரப்பாகவே செல்கிறது.. குறிப்பாக கார் வாஷ், ட்ரக் ஸ்டாப் காட்சிகள் செம சூப்பர்.
ஹாரர் பிரியர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.
Usual ஆன ஹாரர் டைம் பாஸ் படம்.
Director: Breck Eisner
Cast: Timothy Olyphant, Radha Mitchell, Joe Anderson, Danielle Panabaker
Screenplay: Scott Kosar and Ray Wright, based on the screenplay by George A. Romero
Cinematography: Maxime Alexandre
Music: Mark Isham
கருத்துகள்
கருத்துரையிடுக