இது 2015 - ல் வந்த க்ரைம் த்ரில்லர்.
Sicario என்றால் மெக்சிகோவில் Hit Man என்று அர்த்தம்
இந்த படத்தின் இயக்குனரின் மற்றொரு படமான Wind River செமயாக இருந்தது.
அமெரிக்க , மெக்சிகோ எல்லைப்பகுதியில் நடக்கும் போதை மருந்து கடத்தல்கள் , போதை மருந்து கடத்தும் கும்பல்கள் , அதை சுற்றி நடக்கும் அராஜகங்கள் மற்றும் அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு படை அவர்களை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதை பற்றிய படம்.
ஹீரோயின் Emily Blunt (Edge Of Tomorrow) நேர்மையான போலீஸ் அதிகாரி. மெக்ஸிகன் Cartel என சந்தேகிக்கப்படும் ஒரு இடத்தில் ரெய்டு போகும் போது 40 க்கும் மேற்பட்ட பிணங்களை அந்த இடத்தில் கண்டுபிடிக்கின்றனர். அதோடு அங்கு ஏற்பட்ட குண்டு வெடிப்பில் இரண்டு போலிசார் இறந்து விடுகிறார்கள்.
இவர்களை எப்படியாவது பிடிக்க வேண்டும் என நினைக்கிறார் ஹீரோயின். இந்நிலையில் 2 அதிகாரிகள் போதைப்பொருள் சிறப்பு படையில் சேரச் சொல்லி அழைக்கிறார்கள். எங்களுடன் சேர்ந்தால் போதை பொருள் கடத்தல் கும்பலை பிடிக்கலாம் என்று சொல்கிறார்கள்.
ஹீரோயின் மேலதிகாரியும் சரி என்று சொல்ல இவரும் அந்த இரண்டு பேருடன் கிளம்புகிறாள்.
அந்த இரண்டு அதிகாரிகளும் ஒரு டைப்பாகவே சுற்றுகிறார்கள். அதிலும் இரண்டாவது உள்ளவன் போதைலையே சுத்துகிறான். அவனை மெக்ஸிக்கோ நாட்டை சேர்ந்தவர் என அறிமுகப்படுத்துகிறார்கள்.
இரு அதிகாரிகள் பண்ணும் வேலைகள் எதுவும் சட்டப்படி நடப்பதில்லை. ஆனால் இருவரும் செம் பவர்ஃபுல் பதவியில் இருப்பதால் ஹீரோயின் நடுவில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்.
இவ்வளவு அதிகாரத்தை வைத்துக்கொண்டு எதற்கு ஹீரோயினை கூட சேர்த்தார்கள் என்பதையும் சொல்கிறார்கள்.கடைசியில் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு ஒரு ப்ளான் போடுகிறார்கள். ஹீரோயினுக்கு பிடிக்காத நிலையில் என்ன செய்தார் என்பது தான் க்ளைமேக்ஸ்.
படம் பரபரப்பாக செல்லும் மெட்டீரியல் கிடையாது. மெதுவாக செல்லும் ஆனால் ஹீரோயின் போலவே ஒரு டென்சனுடன் நகரும்.
அதுவும் பார்டர் விட்டு பார்டர் காரில் செல்லும் காட்சி அருமை. அதிலும் கேமரா , மியூசிக் எல்லாம் பக்காவாக இருக்கும்.ஒரு விதமான பதட்டத்தில் வைத்து இருப்பார் இயக்குனர்.
படம் ரொம்பவே இயல்பாக இருக்கும்.ஹீரோயின் பில்டப் என்று எதுவும் கிடையாது. ஆக்ஷன் காட்சிகளும் சிறப்பு.
கடைசி 30 நிமிடங்கள் செம பரபரப்பு. அதுவும் போதைப்பொருள் கடத்தல்களை தடுக்க போடும் ஃப்ளான் மற்றும் அதை செயல்படுத்தும் விதம் அருமை. .
தரமான இயக்குனரிடம் இருந்து ஒரு தரமான படம்.
கண்டிப்பாக பாருங்கள்.
வன்முறை காட்சிகள் உண்டு. அதனால் குடும்பத்துடன் பார்க்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.
IMDb Rating : 7.6
OTT - ல் இல்லை.
DM for download link.
Director: Denis Villeneuve
Cast: Emily Blunt, Josh Brolin, Benicio Del Toro, Daniel Kaluuya
Home Release Date: 2016-01-05
Screenplay: Taylor Sheridan
Cinematography: Roger Deakins
Music: Johann Johannsson
கருத்துகள்
கருத்துரையிடுக