Fear Street: Part Two - 1978 - 2021
போன பாகம் முடிந்த இடத்தில் இருந்து தொடங்கிறது படம். நடந்த கலவரத்தில் தப்பித்தது மூவர் அதில் ஒருத்தியை மறுபடியும் சூனியக்காரி பிடித்து விடுகிறாள். அவள் பிடியில் இருந்து விடுபடுவது எப்படி என தோண்டும் போது ஒரே ஒரு பெண் 1978ல் நடந்த கொலைகளில் சூனியக்காரியிடம் தப்பி உயிர்வாழும் உண்மை தெரிகிறது. அவளை சந்தித்து உண்மையை தெரிந்து கொள்ள செல்கிறார்கள்.
அந்த பெண் Berman தானும் தனது சகோதரியும் 1978 - ல் காட்டுக்குள் நடந்த கேம்ப்பில் கலந்து கொண்டது பற்றியும் அப்போது அங்கு நடந்த படுகொலைகள் பற்றியும் சொல்கிறாள்.
1978 - ல் ஒரு பெரிய பள்ளி மாணவர்கள் கூட்டம் ஊருக்கு வெளியே உள்ள காட்டுப்பகுதியில் கேம்ப் செல்கிறது. இதில் சகோதரிகள் Ziggy, Cindy மற்றும் Cindy ன் காதலன் Tom மற்றும் இன்னும் பலர் உள்ளனர்.
இந்த கேம்பில் நர்ஸ் ஒருவரும் உள்ளார். அவரின் மகள் சமீபத்தில் திடீரென சைக்கோ வாக மாறி பல பேரை கொன்று தானும் இறந்து விடுகிறார். திடீரென அந்த நர்ஸ் Cindy ன் லவ்வரான Tom ஐ கொலை செய்ய முயற்சி செய்கிறார். கொல்லும் முன்பு உன் பெயர் சுவரில் எழுதி இருக்கிறது என சொல்கிறார். ஆனால் Tom தாக்குதலில் இருந்து தப்பிக்கிறார்.
பின்பு நர்ஸ் விட்டுச்சென்ற பொருட்களில் இருந்து ஒரு வித்தியாசமான மேப் கிடைக்க அது என்னவென்று கண்டு பிடிக்க செல்கிறது இந்த குழு.
அப்புறம் என்ன ஒருத்தருக்கு கிறுக்கு பிடிக்க கோடாரியை வைத்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் கொன்று தள்ளுகிறான்.
அதிலிருந்து எப்படி உயிர் தப்பினார் Cindy ... நர்ஸ்ன் மேப் மற்றும் அவர் டைரியில் இருந்தது என்ன? என்பதை படத்தில் பாருங்கள்.
படம் மெதுவாக ஆரம்பிக்கிறது... கொஞ்சம் கொஞ்சமாக ஹாரர் படங்களுக்கே உரிய காட்சிகளுடன் மெதுவாக வேகம் எடுக்கிறது.
படம் நடக்கும் இடம் காட்டுப்பகுதி, மர வீடு , சூனியக்காரி குகை என கரெக்ட்டான திகில் பட செட்டப்கள் அருமை.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் நன்றாகவே இருக்கிறது. நாளை மறுநாள் கடைசி பாகம் வெளிவருகிறது.
முதல் பாகம் முழுவதும் கொலை, இரண்டாவது பாகத்தில் ஏன் இந்த கொலைகள் நடக்கிறது, என்ன மாதிரியான சாபம் என்பதை ஒரளவு அறிந்து கொள்ள முடிகிறது... மூன்றாவது பாகம் எனக்கு தெரிஞ்சு சூனியக்காரியின் சாபத்தில் இருந்து விடுபடுவது எப்படி என்று இருக்கும் என நினைக்கிறேன்.
IMDb Rating : 6.8/10
My Rating: 3.5/ 5
Available in Netflix India
Directed by
Leigh Janiak
Screenplay by
Zak Olkewicz
Leigh Janiak
Story by
Zak Olkewicz
Phil Graziadei
Leigh Janiak
Based on
Fear Street
by R. L. Stine
Produced by
Peter Chernin
Jenno Topping
David Ready
Starring
Sadie Sink
Emily Rudd
Ryan Simpkins
McCabe Slye
Ted Sutherland
Jordana Spiro
Gillian Jacobs
Kiana Madeira
Benjamin Flores Jr.
Ashley Zukerman
Olivia Scott Welch
Chiara Aurelia
Jordyn DiNatale
கருத்துகள்
கருத்துரையிடுக