Fear Street Part One : 1994 (2021)
எழுத்தாளர் R.L.Stine எழுதிய புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட ஹாரரர் திரைப்படம். இந்த திரைப்படம் அடுத்த அடுத்த வாரங்களில் மூன்று பாகங்களாக வெளிவருகிறது. July 2 முதல் பாகமான இந்த படம் வெளிவந்து உள்ளது. July 9 மற்றும் July 16 -ல் அடுத்த இரண்டு பாகங்கள் வெளிவருகிறது.இது Stranger Things , IT வரிசையில் நண்பர்கள் ஒரு குழுவாக சேர்ந்து பிரச்சினையை சரி செய்வது போன்ற ஒரு படம். இது போக படம் 1994 -ல் நடப்பது போல எடுக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஒரு சின்ன ஊர்... அந்த ஊர் திடீர் சைக்கோ கொலைகாரர்களுக்கு மிகவும் புகழ்பெற்றது. ஏனென்றால் சாதாரணமாக இருப்பவர்கள் திடீரென கொலைகாரர்கள் ஆகி கொடுரமாக கொலை செய்கிறார்கள். இதற்கு காரணம் அந்த ஏரியாவில் வசித்து இறந்து போன சூனியக்காரியின் சாபம் காரணம் என்று புரளி உள்ளது.
இதற்கு நடுவில் ஒரு நண்பர்கள் கூட்டம் Prank செய்கிறது அதில் நடக்கும் சிறு விபத்தில் அந்த சூனியக்காரியின் கல்லறையை தெரியாத்தனமாக தொந்தரவு செய்து விடுகிறார்கள்.
இதற்கு அப்புறம் டிசைன் டிசைனாக கொலைகாரர்கள் ஆயுதங்களுடன் அந்த பெண்ணை கொல்ல வருகிறார்கள். நண்பர்கள் அந்த பெண்ணை காப்பாற்றினார்களா என்பது மீதிக்கதை...
படம் ஆரம்பம் நல்ல திகிலாகவே உள்ளது.. அதுவும் Scream படத்தை ஞாபகப்படுத்துகிறது. நடுவில் கொஞ்சம் போர் அடிக்கிறது அப்பறம் க்ளைமாக்ஸ் ஒட்டி மீண்டும் பிக்அப் ஆகிறது.
Horror, Slasher மற்றும் சூனியக்காரி என எல்லாவற்றையும் கலந்து ஒரு திகில் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் Leigh Janiak.
ஆவரேஜான படம்... திகில் பட ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்..
IMDb Rating : 6.5/ 10
Available in Netflix
Director: Leigh Janiak(a film by)
Writers: R.L. Stine(based upon the Fear Street books by), Kyle Killen(story by), Phil Graziadei(story by)
Stars: Kiana Madeira, Olivia Scott Welch, Benjamin Flores Jr.
How to download
பதிலளிநீக்குCheck the contact us page..
பதிலளிநீக்குhttps://www.tamilhollywoodreviews.com/p/contact-us.html?m=1
Contact me via Twitter or Facebook