Carnival Row – கார்னிவல் ரோ – Season 1 (2019)

இது ஒரு அமானுஷ்யம் கலந்து கற்பனை உலகில் நடக்கும் திகில் கலந்த தொடர். 

Fae எனும் ஊரில் பலதரப்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.மனிதர்கள், Fae எனப்படும் பறக்கும் தேவதைகள், Puck – எனப்படும் ஆடு போன்ற தலை கொண்ட மனிதர்கள் என பலதரப்பட்ட மக்கள் உள்ளனர். 
இதில் மனிதர்கள் நாகரீகத்தில் முன்னேறி இருக்க மற்றவர்களை மிக கேவலமாக நடத்துகின்றனர். 
இவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்கள் பெரும்பாலும் Row எனும் பகுதியில் வசிக்கின்றனர். மீதம் உள்ள மக்கள் பணக்கார மனிதர்களின் வீட்டில் அடிமைகளாக வேலை பார்க்கின்றனர். 
இந்நிலையில் ஊருக்குள் திடீரென கொடூரமான முறையில் சில கொலைகள் நடக்கிறது. இதில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் Fae இனத்தை சேர்ந்தவர்கள். போலீஸ் இதை அவ்வளவாக கணடு கொள்ளாமல் இருக்கிறார்கள். ஆனால் போலீசான ஹீரோ Philo ( Orlando Bloom) கொலைகாரனை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார். 
Fae – யான Vignette Stonemoss – ஊருக்குள் வருகிறார். இவர் Philo – வை பார்த்த உடன் கடுப்பாகி இவனை கொல்லாமல் விட மாட்டேன் என கிளம்புகிறார். இவருக்கும் Philo -க்கும் இடையேயான காதல் , பிரிவு என கிளைக்கதை ஒரு பக்கம் சொல்லப்படுகிறது. 
இதற்கு இடையில் ஊருக்குள் நடக்கும் அரசியல் ஒரு பக்கம் செல்கிறது. ஆளும் கட்சியின் தலைவராக Absalom Breakspear (Jared Harris – Chernobyl) அவரின் மனைவி Piety (Indira Varma) . Piety – தனி ட்ராக்கில் ப்ளாக் மேஜிக், சூனியக்காரி சவகாசம் எனி செல்கிறார்.
பல கதாபாத்திரங்கள் மற்றும் சிக்கலான கிளைக்கதைகள் என இருந்தாலும் கதை முழுவதும் Philo மற்றும் Vignette என்ற இரண்டு கதாபாத்திரங்களை சுற்றியே நகர்கிறது. 
இன்னொரு குடும்பம் Spunrose .. அண்ணன் தங்கை இருவரும் பணத்திற்காக கஷ்டப்படுகின்றனர். இவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டை வாங்கும் ஒரு பணக்கார Puck – இடம் உதவி பெற முயற்சி செய்கிறார் தங்கை. இந்த ஒரு கிளைக்கதை மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக செல்கிறது. முக்கிய கதாபாத்திரங்களுடன் என்ன தொடர்பு என்பதை 2 வது சீசனில் சொல்கிறார்களா என்று பார்ப்போம். 
கொலைகாரன் யார்? ஏன் இப்படி கொடூரமான முறையில் கொலைகளை செய்கிறான் என்பதை கடைசி வரைக்கும் சீக்ரெட் ஆக கொண்டு சென்ற விதம் அருமை ‌. 
லொக்கேஷன்கள் மற்றும் செட்டிங்குகள் அருமை. ஒரு மாதிரியான டார்க் டோன் இந்த தொடருக்கு அருமையாக பொருந்துகிறது. 
ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக சென்றாலும் எபிசோட்கள் செல்ல செல்ல பார்க்கும் ஆர்வம் தொற்றிக் கொள்கிறது. கடைசியாக வரும் எபிசோட்களில் ஒவ்வொரு முடிச்சாக அவிழும் விதம் அருமை 👌. 
Game of thrones, The Witcher போன்ற அமானுஷ்யம் கலந்த பழைய காலகட்டத்தில் நடப்பது போன்ற தொடர்கள் பிடிக்கும் என்பவர்கள் கண்டிப்பாக பாருங்கள். 
குடும்பத்துடன் பார்க்க ஏற்ற தொடர் கிடையாது..‌ 
1 Season, 8 Episode கள் வெளியிடப்பட்டுள்ளது. 
Amazon prime Video – வில் கிடைக்கிறது. 
IMDb Rating : 7.9/ 10
Cast: Orlando Bloom, Cara Delevingne, Simon McBurney, Tamzin Merchant, David Gyasi, Andrew Gower, Karla Crome, Arty Froushan, Indira Varma, and Jared Harris.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Janowar – Beast – 2021Janowar – Beast – 2021

ஒரு பெங்காலி க்ரைம் த்ரில்லர். பெங்காலி படம் இது வரைக்கும் பார்த்தது இல்ல. இதான் முதல் படம். ஒரு வீட்டில் ஏதோ அசம்பாவிதம் நடந்து இருப்பதை கேள்விப்பட்டு போலீஸ் உள்ளே போகிறது. அங்கு நடந்த கொடூரம் என்ன என்பது தான் படம். 

Confession Of Murder – 2022Confession Of Murder – 2022

கொரியன் சட்டப்படி 15 வருடத்தில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் குற்றவாளியை அதுக்கு அப்புறம் எதுவும் செய்ய முடியாது என்பதை அடிப்படையாகக் கொண்டு வந்து உள்ள படம‌.  IMDb 7.0 Tamil dub ❌ OTT ❌ சீரியல் கில்லர்களுக்கும் தென் கொரியாவிறகும்

Squid Game – 2021Squid Game – 2021

 இந்த சீரிஸ் இப்ப செம ஹாட்டா போய்ட்டு இருக்குது. நிறைய பேர் பார்த்து இருப்பீங்க. இன்னும் பார்க்காமல் இருக்கும் மக்களுக்காக இந்த போஸ்ட் 😊 IMDb 8.3  இந்த சீரிஸ் ஓட கான்செப்ட் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு.  உதாரணமாக Statue, release