I am mother - ஐ ஆம் மதர் (2019) - Movie Review In Tamil
இது நெட்ப்ளிக்ஸ் வெளியிட்ட சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம்.
மனித இனம் கூண்டோடு அழிந்து விட்டால் மறுபடியும் மனித இனத்தை முதலில் இருந்து உருவாக்க கண்டுபிடிக்கப்பட்ட ரோபாட் தான் மதர்.
படத்தின் ஆரம்பத்தில் ஆய்வுக்கூடம் மற்றும் மதர் ரோபாட் இரண்டும் உயிர் பெற்று மனித இனம் அழிந்து விட்டதை குறிக்கிறது .
பரிசோதனை கூடத்தில் சேமித்து வைக்கப்பட்ட கருவில் இருந்து பிறக்க வைக்கப்பட்டு அங்கேயே மதரால் வளர்க்கப்படும் பெண் தான் மகள் (டாட்டர்) . டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும் மகள் அந்த ஆய்வகத்தின் அருகில் குண்டடி பட்ட நிலையில் ஒரு பெண்ணை பார்க்கிறார்.
அப்பெண்ணை காப்பாற்றி சிகிச்சை அளிக்கின்றனர் இருவரும். ஆனால் அப்பெண் மதர் ரோபாட் போல இருக்கும் ரோபாட்கள் தான் வெளி உலகில் அனைத்து மனிதர்களையும் கொல்கிறது என்கிறாள்.
இதனால் மகளுக்கு ஏற்படும் சந்தேகங்களும் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் தான் மீதிக்கதை.
கதை என்னமோ இயந்திரங்கள் மனித இனத்தை அழிக்கும் கதை தான். ஆனால் தாய், மகள் மற்றும் இன்னொரு பெண் என மூன்று பேரை மட்டும் வைத்துக்கொண்டு படத்தை நகர்த்தி சென்ற விதம் அருமை.
ஆரம்பத்தில் இருந்தே ரோபாட் நல்லதா கெட்டதா.... அந்த பெண் நல்லவரா கெட்டவரா என்ற சஸ்பென்ஸ் உடன் கதை நகர்வது சுவாரஸ்யம்.
ரோபாட் என்றாலே படுபயங்கரமான ஆற்றல் கொண்டது என பார்த்து பழகிய நமக்கு இந்த ரோபாட் கொஞ்சம் dumb ஆக இருப்பது போல் தோன்றுகிறது.
ஆனால் படம் முடியும் தருணத்தில் அதன் புத்திசாலித்தனம் புரிகிறது. அந்த பெண் யார் என்பதையும் மறைமுகமாக சொல்கிறார் இயக்குனர்.
க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் திருப்பம் அருமை 👌
நல்ல ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம். ஆனால் டைம் பாஸ் பொழுது போக்கு படம் போல் கிடையாது. நிறைய விஷயங்களை மறைமுகமாக சில காட்சிகளில் சொல்வதால் கொஞ்சம் உன்னிப்பாக படம் பார்க்க வேண்டும்.
ரோபாட் வடிவமைப்பு மற்றும் அது நகரும் விதம் சிறப்பாக உள்ளது. மகள் மற்றும் இன்னொரு பெண் கதாபாத்திரத்தில் வருபவர்களும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.
IMDb Rating : 6.7
Available in Netflix
Director: Grant Sputore.
Cast: Hilary Swank, Clara Ruugaard, and Rose Byrne.
கருத்துகள்
கருத்துரையிடுக