Joker (2019)

ஜோக்கர் என்றதும் எல்லோருக்கும் உடனே ஞாபகம் வருவது நிச்சயம் Dark Knight பட வில்லன் Heath Ledger தான், இல்லையா? அந்த ஜோக்கர் எப்படி உருவாகினான் என்ற கதையை சொல்கிறது இந்தப்படம்.

பொதுவாகவே ஒரு சமூகம் ஏழை எளியவர்களை முடிந்த அளவுக்கு அரவணைத்து செல்ல வேண்டும் அப்படி அரவணைக்க தவறும் பட்சத்தில் சமூகம் பல விபரீதங்களை சந்திக்க நேரிடும். அப்படி சமூகத்தால் கைவிடப்பட்ட ஒருவன் எப்படி  அந்த சமூகமே பார்த்து நடுங்கும் வில்லனாக உருவாகிறான் என்ற கதை தான் ஜோக்கர்.

தன் தாயுடன் தனியாக வசித்துவரும் ஆர்தர்க்கு(Joaquin Phoenix)ஒரு வித்தியாசமான வியாதி. கஷ்டமான நேரங்களில் வாய்விட்டு சத்தமாக சிரிக்க ஆரம்பித்துவிடுவான். வயிற்றுப் பிழைப்புக்காக கோமாளி வேஷம் போட்டாலும், ஒரு Stand Up Comedian ஆக வேண்டும் என்பது தான் அவனுக்கு நீண்ட நாள் கனவு.

அவனுடைய தோற்றமும், நடத்தையும் மனநிலை பாதிக்கப்பட்டவன் போல் இருப்பதால் பலர் விலகி செல்வார்கள். சிலர் கிண்டல் கேலி செய்வார்கள். சிறுவர்கள் உட்பட சிலர் வேண்டுமென இவனை வம்புக்கு இழுத்து அடித்து உதைத்து விளையாடுவார்கள்.

உடன் வேலை செய்யும் ஒருவர், ஆர்தரின் தற்காப்புக்காக கொடுக்கும் ஒரு துப்பாக்கி ஆர்தரின் வாழ்க்கையை மாற்றிவிடுகிறது. ஒரு மருத்துவமனையில் சிறுவர்கள் மத்தியில் கோமாளி வேஷம் கட்டி ஆடும் போது, அந்த துப்பாக்கி கிழே விழ, ஆர்தருக்கு இருந்த ஒரு சின்ன வேலையும் போய் விடுகிறது.

வேலை போன விரக்தியில் ஆர்தர் ரயிலில் வீடு திரும்பும் போது, ஆளே இல்லாத அந்த பெட்டியில் மூன்று இளைஞர்கள் இவனை வம்புகிழுக்க, மூவரையும் தன் கையில் இருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறான்.

மறுநாள், அடையாளம் தெரியாத ஒரு ஜோக்கர் 3 பேரை கொலை செய்து விட்டான் என்ற விஷயம் ஊரெல்லாம் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் எந்தவித சலனமும் இல்லாமல் ஆர்தர் Stand-up comedy செய்து பணம் பார்க்கலாம் என்று முதன் முதலாக மேடையேறுகிறான், ஆனால் பயங்கரமாக சொதப்பி விடுகிறான்.

Standup காமெடியில் ஆர்தர் சொதப்பிய  வீடியோவை  Murray (Robert De Nero) தன்னுடைய TV காமெடி ஷோவில் திரையில் காண்பித்து கலாய்க்கிறார். இதை தொலைக்காட்சியில் பார்த்த ஆர்தர்க்கு கோபம் உச்சிக்கு ஏறுகிறது.

அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெறவே, ஆர்தரை தன்னுடைய நிகழ்ச்சியில்  பங்கேற்க அழைக்கிறார் Murray. ஒரு தீர்க்கமான முடிவுடன் அந்த நிகழ்ச்சிக்கு தயாராகிறான் ஆர்தர்.

ஷோவில் Murray காமெடி என்ற பெயரில் மீண்டும் ஆர்தரை கிண்டல் செய்ய கூடியிருக்கும் கூட்டம் கலகலவென சிரிக்கிறது. ஆர்தர் ஆழ்ந்த பார்வையுடன் கால் மேல் கால் போட்டுகொண்டு, கூட்டத்தையே உற்று நோக்க, சிரிப்பு சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து  அடங்குகிறது. சத்தம் குறைந்ததும்,  அந்த 3 கொலைகளையும் நான் தான் செய்தேன் என்று TV Show-வில் உட்காந்து கொண்டு ஆர்தர் வாக்குமூலம் கொடுக்க கூட்டம் அப்படியே மயான அமைதியில் உறைந்து போகிறது. இறுதியாக தன் கையில் கொண்டு வந்த துப்பாக்கியை எடுத்து Murray-வின் நெற்றிப்பொட்டில் சுட்டதும், கூட்டம் அலறியடித்துக்கொண்டு ஓடுகிறது.

The Joker உருவாகிறான்.

கிளடியேட்டர் படத்தில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்புக்கு ஆஸ்கரை தவறவிட்ட Joaquin Phoenix, இந்த படத்தில் அதை பறித்துக்கொண்டார். ஒரு நாதியற்றவனின் தவிப்பை இதைவிட சிறப்பாக வெளிப்படுத்த முடியாது. Hats off to Joaquin Phoenix. 👍💐

IMDB Rating : 8.5

Director: Todd Phillips

Starring: Joaquin Phoenix, Robert De Niro, Zazie Beetz, Frances Conroy, Brett Cullen, Glenn Fleshler, Bill Camp, Shea Whigham, Marc Maron

Available in Prime

Available in Netflix

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Invisible Guest -2016The Invisible Guest -2016

 The Invisible Guest 2016 ஆம் ஆண்டு வெளிவந்த Spanish Psychological Thriller Movie. ஒரு ஹோட்டல் அறையின் கதவை உடைத்துக்கொண்டு போலீஸ் உள்ளே நுழைகிறது. இளம் தொழிலதிபர் ஆட்ரியன் தன் நெற்றியில் ரத்தக்கறையுடன், பிணமாக கிடக்கும் தன் காதலி லாராவை

The Last Ship – தி லாஸ்ட் ஷிப் (Season 1 & 2)The Last Ship – தி லாஸ்ட் ஷிப் (Season 1 & 2)

The Last Ship Tamil Review  கதைச் சுருக்கம்:  ஒரு மர்மமான வைரஸ் உலகின் 80% மக்களை கொன்று விடுகிறது. நாதன் ஜேம்ஸ் என்னும் போர் கப்பல் கேப்டன் டாம் தலைமையில் 2  விஞ்ஞானிகள் துணையுடன் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க கிளம்புகிறது. 

Financial Crimes – Enron ScandalFinancial Crimes – Enron Scandal

உலகத்தை உலுக்கிய சில Financial Crimes ஐ நம்ம பாத்துட்டு வர்றோம். அந்த வகையில் ஒரு காலத்தில் Wall Street ன் செல்லப் பிள்ளையாக இருந்த Enron Company எப்படி நாசமா போச்சுனு பார்க்கலாம்.  Enron 1985 ல ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி