செக்ஸ் எஜுகேஷன்(Sex Education Tamil Review ) - 2019
ஓட்டிஸ் (Otis) உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவன். அவனுடைய அம்மா(ஜீன்) அந்த ஊரில் பெயர் பெற்ற பாலியல் ஆலோசகர் (Sex Counsellor) . பாலியல் ஆலோசகர் என்பதால் பாலியல் தொடர்பான விஷயங்களை மகனுடன் சர்வ சாதாரணமாக பேசுகிறார். இவ்வாறு பேசுவது மகனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் ஜீன் பேசுவதை நிறுத்துவதாக இல்லை.
ஓட்டிஸ் பெரும்பாலும் தனிமையில் பொழுதைக் கழிக்கிறான். அவனுடைய ஒரே நண்பன் எரிக். இவன் ஒரு ஓரினச்சேர்க்கையாளன்.
இந்நிலையில் உடன் படிக்கும் மாணவன் ஒருவன் ஒருவிதமான பாலியல் பிரச்சனைக்கு உள்ளானது தெரிய வருகிறது. ஓடிஸ் தனக்கு தெரிந்த அரைகுறை அறிவுடன் அந்த மாணவனுக்கு பாலியல் ஆலோசனை வழங்குகிறான். எதிர்பாராதவிதமாக இவனுடைய ஆலோசனை பலனளிக்கிறது. இந்த நடவடிக்கைகளை மேவ் என்னும் உடன் படிக்கும் மாணவி கவனித்து வருகிறார்.
மேவ் ஒரு அழகான பெண் மற்றும் ரவுடி பேபி. மேவ்க்கு பணத்தேவை இருப்பதால் ஒரு புது வியாபார யுக்தியுடன் ஒடிஸ்சிடம் வருகிறார். பாலியல் ஆலோசனை வழங்கும் கிளினிக் ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஓடிஸ் பாலியல் ஆலோசனைகள் வழங்குபவராக இருக்க வேண்டுமென்றும் வாடிக்கையாளர்களே பிடிக்கும் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாகவும் கூறுகிறார். ஓடிஸ்க்கு இதில் அவ்வளவாக விருப்பம் இல்லை என்றாலும் மேவ் மீதுள்ள ஒருதலைக் காதலால் திட்டத்திற்கு சம்மதிக்கிறான்.
உயர்நிலைப்பள்ளியில் நடப்பது போன்ற கதை வருவதால் நிறைய கதாபாத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு பிரச்சனைகளும் உள்ளன. இந்த புதிய கூட்டணி நிறைய பிரச்சினைகளை தீர்த்து வைக்கின்றது.
இதற்கு நடுவில் பள்ளியில் பிரபலமாக உள்ள நீச்சல் வீரர் ஜாக்சன் மேவ் மீது காதல் கொள்கிறார். ஆனால் மேவ் ஓட்டிஸ் மேல் காதல் கொள்கிறார். இந்த முக்கோண காதல் கதை தனியாக ஒரு டிராக்கில் பயணிக்கிறது.
தொடரை காட்சிப்படுத்திய இடங்கள் கண்ணுக்கு இதமாக உள்ளன. ஒரு சில கதாபாத்திரங்களின் தவிர பெரும்பாலான கதாபாத்திரங்கள் நேர்மறையான எண்ணத்துடன் உள்ளனர். இதனால் தொடர் ஜாலியாகவும் கலகலப்பாக செல்கிறது.
நடிப்பை பொருத்தவரை ஓட்டிஸ் கதாபாத்திரத்தில் Asa Butterfield சிறப்பாக நடித்துள்ளார். ஓட்டிஸ் அம்மாவாக பிரபல நடிகை Gillian Anderson கலக்கியுள்ளார். நாயகியாக வரும் மேவ் கலக்கல்..
கண்டிப்பாக பார்க்கலாம்.
நெட்ஃபிளிக்ஸ்ஸில் உள்ளது : https://www.netflix.com/title/80197526?s=a&trkid=13747225&t=cp
கருத்துகள்
கருத்துரையிடுக