Lady Vengeance (லேடி வென்ஜென்ஸ்) - Korean - 2005
இது பழிவாங்குவதை மையமாக கொண்ட கொரியன் திரைப்படம்.
Oldboy என்ற அருமையான திரைப்படத்தை இயக்கிய Chan-Wook Park படைப்பில் உருவான இன்னொரு திரைப்படம்.
13 வருடங்கள் செய்யாத தவறுக்காக சிறை தண்டனை அனுபவித்த பெண் விடுதலை ஆன பின் தன் மீது வீண் பழி சுமத்தியவர்களை பழி வாங்கும் கதை.
படத்தின் ஆரம்ப காட்சியில் Geum-ja சிறையில் இருந்து விடுதலை ஆகிறார். ஃப்ளாஷ் பேக்கில் 19 வயதே ஆன Geum-ja ஒரு குழந்தையை கடத்தி கொன்ற குற்றத்திற்காக கைது செய்து சிறைக்கு செல்லும் காட்சி காண்பிக்கப்படுகிறது.
நிகழ்காலத்திற்கு நகர்கிறது கதை. சலூனில் வேலை பார்க்கும் பெண்ணை சந்திக்கிறார். மறுபடியும் பின்னோக்கி சிறைச்சாலைக்கு செல்கிறது.
சிறைச்சாலையில் Geum-ja மற்ற கைதிகளுக்கு அந்த சலூன் கடை பெண் உட்பட உதவும் காட்சிகள் காட்டப்படுகிறது.
உதாரணமாக ஒரு பெண்ணிற்கு கிட்னி கொடுக்கிறார், புது கைதியை பாலியல் தொல்லை தரும் சீனியர் கைதியிடம் இருந்து காப்பாற்றுகிறார். இவ்வாறு உதவி செய்யும் காட்சிகள் நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்காலத்தில் அவர் உதவிய பெண்கள் அனைவரும் ஒவ்வொரு விதத்தில் பழிவாங்க உதவி செய்கின்றனர்.
உதாரணமாக ஒரு பெண் மற்றும் அவள் கணவன் துப்பாக்கி தயார் செய்து தருகின்றனர். சலூன் கடை பெண் தங்க இடம் தருகிறார்.
சிறைக்குச் சென்ற போது Gaum-ja விற்கு மகள் இருந்ததும் அவர் வெளிநாட்டு தம்பதியருக்கு தத்து கொடுக்கப்பட்டது என அறிகிறோம்.
மகளை பார்க்க வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் அவர் மகளின் வற்புறுத்தலின் பெயரில் அவரையும் கூட்டிக்கொண்டு கொரியா வருகிறார்.
பாதி படத்திற்கும் மேல் Gaum-ja , அவர் நண்பிகள், குழந்தை என அவரின் வாழ்க்கையை பற்றி சொல்கிறது. படம் நிகழ்காலம் எதிர்காலம் என மாறி மாறி பயணிக்கிறது.
துப்பாக்கி தயாரான உடன் பழி வாங்கும் படலத்தில் இறங்குகிறார். அவருடைய இலக்கு முன்னாள் சைக்கோ ஆசிரியர் மற்றும் தன் குழந்தையை கொன்று விடுவேன் என மிரட்டி சிறைக்கு அனுப்பிய Baek(Oldboy படத்தின் நாயகன்) -ஐ கொல்வது.
பெரிய திருப்பங்கள் ஏதும் இல்லை என்றாலும் அவர் எவ்வாறு பழி வாங்க போகிறார் என்பதை யூகிக்க முடியாதபடி திரைக்கதை உள்ளது.
ஆனால் கடைசியில் அவர் பழிவாங்க தேர்ந்தெடுக்கும் முறை கொடுரமானது மற்றும் யாரும் எதிர்பாராதது.
Gaum-ja பாத்திரத்தில் நடித்துள்ள பெண் சிறப்பாக நடித்திருக்கிறார். படம் முழுக்க அவரை சுற்றிய நகர்கிறது.
இசை தேவையான இடங்களில் அருமையாக உபயோக படுத்தப்பட்டுள்ளது.
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு அருமை.
கொஞ்சம் மெதுவான திரைப்படம் என்றாலும் நல்ல பழிவாங்கும் கதை.
Netflix மற்றும் Amazon Prime ல் இல்லை. Telegram app - ல் கிடைக்கிறது.
Director: Park Chan-wook
Cast: Lee Yeong-ae, Choi Min-sik, Kim Si-hu, Nam Il-woo, Nam Byeong-ok
Screenplay: Park Chan-wook, Chung Seo-kyung
Cinematography: Chung Chung-hoon
Music: Choi Seung-hyun, Lee Ji-soo, Na Seok-joo
கருத்துகள்
கருத்துரையிடுக